அழகிய மாளிகையில் நடக்கும் பணிகள்

Home

முந்திய பகுதி......அழகிய மாளிகையை அடைதல்

அழகிய மாளிகையில் நடக்கும் பணிகள்

அழகிய மாளிகையில் பயணிகள் ஒரு வாரமாக தங்கியிருக்கும்போது சுறுசுறுப்பு (Mr. Brisk) என்ற ஒரு ஆண் அங்கே வந்து அழகாக இருக்கும் மேர்சியை மணந்து கொள்ளலாம் என்று கருதி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேர்சி ஒரு நன்றாக, சுறுசுறுப்பாக ஆடைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறாள் என்று சுறுசுறுப்பு நன்கறிந்தவர். ஆனால் இந்த மனிதன் உலகத்திற்கு அடிமையானவன். ஆனால், விவேகம் (Prudence) மேர்சியுடன் பேசி, இந்த மனிதன் நல்லமுறையில் மேர்சியை மனைவியாக பாவித்து கடைசிவரை வாழ்க்கை நடத்தமாட்டான் என்று புரிய வைக்கிறாள். கடைசியாக சுறுசுறுப்பு அங்கேயிருந்து கடந்து போகிறார். கிரிஸ்டியானாவின் மூத்த பிள்ளைகளாகிய மாத்தியூ திடீரன வியாதிக்குள்ளாகிறான். திறமை (Mr.Skill) என்ற ஒரு மருத்துவர் அங்கே வந்து மாத்தியூவிற்கு சிகிச்சை அளிக்கிறார். இதற்கிடையில் விவேகம் மாத்தியூவிடம் உரையாடல் நடத்துகிறாள். இந்த உரையாடலில் அநேக ஆவிக்குரிய ரகசியங்களை வேதத்தின் மூலமாக விவேகம் போதிக்கிறாள்.

கிரேட் ஹார்ட், பயணிகளை இந்த அழகிய மாளிகையில் விட்டுவிட்டு தனது சொந்தமான பொருள்கூறுபவரின் வீட்டிற்குப்போய்விடுகிறார். பின்பு அங்கேயிருந்து அழகிய மாளிகைக்கு அழைக்கப்பட்டவுடன், பயணிகளை மேல்கொண்டு பிரயாணத்தில் வழி நடத்தும்படி, அங்கே திரும்பி வருகிறார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

ஒரு சபையில் மருத்தவ பணி (Medical mission) மூலமாக வியாதியில் துன்பம் அனுபவிக்கும் தேவ மக்களுக்காக சேவை செய்யவேண்டும்.

வெறும் தெய்வீக சுகத்திற்காக ஜெபித்தால் மட்டும் போதாது. மருத்துவ பணியின் மூலமாக நோய்வாய்ப்பட்ட சபை மக்களுக்கு உதவி கிடைக்க போதகர்கள் முயற்சி எடுக்கவேண்டும். இதற்கென்று ஒரு சேமிப்பு பணம் வைத்து ஏழை விசுவாசிகளுக்கு உதவி செய்யவேண்டும்.

கல்யாணமாகாத பெண்களுக்கு விசுவாசிகளான ஆண்களுடன் விவாகம் நடத்த உதவி செய்யவேண்டும். அவிசுவாசிகளோடு விவாகத்தில் இணையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். (Para) தனி உரையாடல் மூலம் ஒவ்வொரு விசுவாசியையும் விசுவாசத்தில் பலப்படுத்தவேண்டும்.

கிரேட் ஹார்ட் பயணிகளை இந்த அழகிய மாளிகையில் விட்டுவிட்டு தனது சொந்தமான பொருள்கூறுபவரின் (Interpreter) வீட்டிற்குப் போய்விடுகிறார். பின்பு அங்கேயிருந்து அழகிய மாளிகைக்கு அழைக்கப்பட்டவுடன் பயணிகளை மேல்கொண்டு பிரயாணத்தில் வழி நடத்தும்படி அங்கே செல்கிறார்.

முதலாம் வீட்டிற்கும் இரண்டாவது வீடாகிய அழகிய மாளிகைக்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது. எல்லா சபைகளிலும் எல்லாவிதமான ஆவிக்குரிய பாதையில் நடத்தும் மேலான ஊழியங்களும், ஊழியர்களும் இருப்பது கிடையாது. வெளிப்படுத்தும் புத்தகத்தில் ஏழு விதமான சபைகளைக் காணலாம். ஆண்டவர் இந்த ஏழு சபைகளின் நடுவில் தான் உலாவிவருகிறார். கிறிஸ்து எந்த சபையின் அருகில் எல்லை.

ஒரு சபையை விட்டு வேறு எந்த சபைக்கும், யாரும் போகலாம். கிரேட் ஹார்ட் பயணிகளை முந்திய வீட்டிலிருந்து பிந்திய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அவர்களை அழகிய மாளிகையில் விட்டுவிட்டு தனது சொந்தமான பொருள்கூறுபவரின் வீட்டிற்குத் திரும்பி போய்விடுகிறார் பின்பு அங்கேயிருந்து அழகிய மாளிகைக்கு அழைக்கப்பட்டவுடன் பயணிகளை மேல்கொண்டு பிரயாணத்தில் வழி காட்டும்படி அங்கே வருகிறார்.

எங்கே தேவ மக்களுக்கு அவசியமான தேவைகளை பூர்த்தியாக்கும் ஊழியங்கள் நடைபெறுகிறதோ அங்கே அவர்கள் போய் அந்த வசதிகளையோ ஆசிர்வாதங்களையோ பெறுவதற்கு தடை செய்யக்கூடாது.

இந்த இரண்டு வீடுகளிலுமே, எந்தவிதமான பிரசங்க மேடைகளோ கிடையாது. இங்கே நடப்பதெல்லாம் நீடிய ஆன்மிக உரையாடல்களும், வேத தியானிப்புகளும், அன்பு உபசரிப்புகளும், அமைதியான பணிவிடைகளும் தான்! ஆதரிப்பும் அரவணைப்பும் இங்கே காணப்படுகிறது. இன்று இதுபோல் ஊழியங்கள் ஒரு சபையிலும் கிடையாது. பயணிகளிடமிருந்து ஒரு பைசாவோ வசூலிக்கப்படவில்லை. தசம பாகமோ, உண்டியல் பெட்டிகளோ கிடையாது. எல்லாருக்கும் நல்ல உணவு அளிக்கப்படுகிறது. நல்ல நித்திரை செய்ய படுக்கைகள் அமைத்துக்கொடுக்கப்படுகிறது. இது ஒரு கூட்டுறவு வாழ்க்கை. ஆதரிப்பும் அரவணைப்பும் இங்கே காணப்படுகிறது.

தங்கள் கவலைகளை மறந்து இளைப்பாறும் இடம். சபை மூப்பர்கள் எல்லா பொறுப்புக்களையும் எடுத்து ஒரு துன்பம் அனுபவிக்கும் விசுவாசிக்கு உதவும்போது அந்த விசுவாசிக்கு அந்த சபையில் ஒரு படுக்கை கிடைக்கிறது.

தொடர்ந்து படிக்க..அழகிய மாளிகையில் கருணை ஊழியக்காரி