கிறிஸ்டியானா நுழைவு வாசலில்

Home

முந்திய பகுதி - கிறிஸ்டினாவின் கனவும் பயணம் துவக்கவும்

கிறிஸ்டியானா நுழைவு வாசலில் (Wicket gate)

கிறிஸ்டினாவும், மேர்சியும் , பிள்ளைகளோடு அவநம்பிக்கை அல்லது அதையரியம்கொள் எனும் சகதியின் குட்டையை (Slough of despond) அடைந்தனர். இங்கேதான் கிறிஸ்டியான் விழுந்த இடம். இந்தக் குட்டையை மூடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பது தேவனின் விருப்பமல்ல. அவநம்பிக்கை என்ற குட்டை யார் உண்டுபண்ணினார்கள்? கள்ள போதகர்கள் தங்கள் மேல் நம்பிக்கை வைக்க விரும்பி, கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைக்க தடை செய்கிறார்கள். 2000 வருடங்களாக சரியான சத்தியம் அறிவிக்கப்படாமல், நாளடைவில் கள்ள ஊழியர்கள் ஒரு குட்டையை உண்டு பண்ணிவிட்டார்கள். இதை சரிபண்ண அப்போஸ்தலர்களும், தீர்க்கதரிசகளும் எழும்பி வரவில்லை. கிறிஸ்துவின் சபை ரோமன் கத்தோலிக்கரின் கைகளில் சிக்கிவிட்டு, இதுவரை சரியான சத்தியத்திற்கு திரும்பவில்லை. சீர்திருத்தம் முற்றிலும் வரவில்லை. பெந்தேகொஸ்து இயக்கமும் பழைய ஏற்பாட்டின் ஆசாரிய ஊழியத்திலுருந்து நம்மை விடுவிக்கவில்லை. மார்ட்டின் லூத்தரின் சீர்த்திருத்தம், முதலாம் நூற்றாண்டு சபைக்கு, நம்மை இதுவரை கொண்டுசெல்லவில்லை. இந்த குட்டையிலிருந்து நாம் விடுபெறவேண்டுமானால் நாம் இதுவரை கற்றுக்கொண்ட போதனைகளை விட்டுவிட்டு ஆதி அப்போஸ்தலர் காலத்திற்குத் திரும்பவேண்டும். கிறிஸ்டியானாவும் அவளது குழுவும் இந்த குட்டையில் விழாமல் தப்பிவிட்டனர். எப்படியாவது நுழைவு வாசலுக்கு வந்து அடையவேண்டும் என்று அறிந்திருந்தபடியால் துணிச்சலோடு இந்த குட்டையை கடந்து நுழைவு வாசலின் அருகே வந்துவிட்டனர்.

கற்றுக்கொள்ளும் பாடம்

நாம் நமக்கு வரும் ஆபத்துக்களை முன்கூட்டியே அறிந்து, தேவ ஞானத்தோடும், பரிசுத்தாவினவரின் உதவியோடும், முன்செல்லும்போது இதுபோன்ற குட்டையிலிருந்து தப்பிக்கொள்ளலாம். ஆனால் கிறிஸ்டியானோ விழுந்துவிட்டான்! அவனது மனைவி விவேகத்தோடு நடந்ததால், இதில் விழவில்லை.

தொடர்ந்து படிக்க ..... நுழைவு வாசலில் பிரவேசம்