மாயாபுரியின்சந்தையில் மினாசோனின் சிறப்பு வீடும், ஊழியங்களும்

Home

முந்திய பகுதி.....நல்லவர்களை அழிக்கும் அரக்கனின் அரக்கனின் கையில்

மாயாபுரியின்சந்தையில் மினாசோனின் சிறப்பு வீடும், ஊழியங்களும்

பயணிகள் இப்போது மாயாபுரியின் சந்தையை நெருங்குகிறார்கள். அப்போது கிரேட் ஹார்ட் தான் இந்த பட்டணத்தில் மினாசோன் (Mnason) என்னும் ஒரு பழைய சீஷனை நன்கு அறிவதாகவும் அவரின் வீட்டில் இரவு தங்கலாம் என்று சொன்னார். அந்த வீட்டை அடைந்தும் மினாசோன் அவர்களை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு கயாவு வீட்டிலிருந்து வந்ததை கேட்டு ஆனந்தமடைந்தார். அவர்கள் போஜனம் அருக மேசையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். நேர்மை மினாசோனிடம், "இந்த பட்டணத்தில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா?" என கேட்க, மினாசோன் தன் மகள் கிருபையை (Grace) அனுப்பி அந்த நல்ல மனிதர்களை அழைத்து வர ஏற்பாடு செய்கிறார். Mr Contrite (நொறுங்குண்ட இருதயம்), Mr Holy-man (பரிசுத்த மனிதன்), Mr Love-saint (பரிசுத்தவான்களின் மேல் அன்பு), Mr Dare-not-lye (பொய்யுரைக்க பயம்), Mr Penitent (மனம் திரும்புதல்), என்ற அயலகத்தார்கள் அங்கே வந்தனர். அவர்கள், கிறிஸ்டியானின் மனைவியையும் பிள்ளைகளையும் கண்டு அதிகம் சந்தோஷமடைந்தார்கள். நேர்மை (Honest), நொறுங்குண்ட இருதயத்தை நோக்கி, "இந்த பட்டணத்தின் மக்கள் எப்படி இருக்கிறார்கள்?" என கேட்க, நொறுங்குண்ட இருதயம், "கிறிஸ்டியானும் உண்மையுள்ளவனும் இந்த பட்டணத்திலிருக்கும்போது, உண்மையுள்ளவனை எரித்து கொன்றபின், இனி இது போல நடக்காது என்று எண்ணி நடந்த காரியத்திற்காக இந்த பட்டணத்தார் வெட்கமடைந்தனர். ஆனால் நாங்கள் சில நாட்கள் தெருக்களில் நடக்க பயந்தோம்; இப்போது எங்கள் தலைகளைக் காண்பிக்கிறோம்," என்று சொன்னார்.

சாப்பிடும்போது, இதுவரை பயணிகள் கடந்து வந்த பாதைகளில் சந்தித்த அரக்கர்களைப் பற்றியும், காயுவின் வீட்டில் அனுபவித்த நல்ல காரியங்களைக் குறித்து உரையாடல் நடந்தது.

இந்த வீட்டில் தங்கும்போது, மினாசோன் தனது மூத்த மகளாகிய கிருபையை, சாமுவேலுக்கும், தனது இரண்டாவது மகளாகிய மார்த்தாவை ஜோசப்புக்கும் திருமணம் நடத்திவைக்கிறார்.

மினாசோனின் வீட்டில் வந்த அந்த பரிசுத்தவான்களான அயலகத்தார்கள் தங்களின் உரையாடலில் முக்கியப்படுத்தி உரைப்பது, "மோட்சப்பயணிகள், தைரியம், கறைபடாத பரிசுத்தவாழ்க்கை, ஆகிய இரண்டு காரியங்களைக்குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றும், தைரியத்துடன், அவர்கள் தங்கள் பாதையை விடாப்பிடியாக பிடித்துக்கொள்ளவேண்டும் என்றும், தங்களின் வாழ்க்கையில் மெத்தனம் இருக்குமானால், மோட்சப்பயணியின் பெயருக்கு களங்கத்தை உண்டுபண்ணும்," என்றும் கூறினார்கள்.

அங்கே படுத்துறங்கும்போது, ஒரு மிருகம் வந்து இந்த மக்களை கொன்று, அவர்களின் பிள்ளைகளை தன் குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்கும்படி கொண்டுபோவது வழக்கம் என்று அவர்களுக்கு கூறப்படுகிறது. இந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும், பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும் இருந்தன.(வெளி. 13 :1). இந்த மிருகத்தை ஆட்டிப்படைப்பது ஒரு பெண்ணாம் (Babylonian Kingdom). தங்கள் உலக வாழ்க்கையை தங்களின் ஆத்துமாவிற்கு மேலாக நேசிக்கிற மனிதர்களளை இந்த மிருகம் அடிமைப்படுத்திக்கொள்கிறது.

கற்றுக்கொள்ளும் பாடம்

மாயாபுரியின் சந்தையின் வஞ்சகம்

இன்று நமது கிறிஸ்தவ சமுதாயமே மாயாபுரியின் சந்தையில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றது. கிறிஸ்தவர்களுக்கான ஊழியம் இங்குதான் நடக்க வேண்டும். நுழைவு வாயில் மூலம் வந்த கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும், இந்த உலகமாகிய மாயாபுரியின் சந்தைக்குள்ளில்தான் இருக்கிறார்கள். கிறிஸ்தவ மத சடங்காச்சாரத்தை மற்றும் பின்பற்றும் பெயர் கிறிஸ்தவர்களும் இங்கேதான் குடியிருக்கிறார்கள். இந்த மாயாபுரியின் சந்தை அழியும் நகரத்தின் ஒரு பகுதிதான். அழியும் நகரத்திற்கும் மோட்சப்பாதைக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இதனின் எஜமான் பெயெல்செபூல்! ஆண்டவருக்கும் இந்த சந்தைபட்டணத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

பரிசுத்தவான்கள் அடிக்கப்படவும் கொல்லப்படுகிறதும் இங்கேதான். வெளிபடுத்ததலின் புத்தகத்தில் (13 :1) கூறப்படும் மிருகம் இங்கே அலைந்துகொண்டிருக்கிறது. அதற்கு தன் ஜனங்கள் யார்யாரென்று தெரியும். நெற்றியில் பரிசுத்தாவினவரின் முத்திரை பெற்றவர்களைத்தான் குறிவைத்து அம்புகளால் தாக்குகிறது. இவர்களை, இங்கே வைத்து அழித்து, இவர்களின் பிள்ளைகளை தன் குஞ்சுகளுக்கு இறையாக்குகிறது. இதனின், குஞ்சுகள் அந்தகாரத்துப்பறவைகள்! இன்று இந்த மிருகம் கிறிஸ்தவ பிள்ளைகளை ஆபாசங்களிலும் பாவமான காரியங்களிலும் கொண்டுபோய்க்கொண்டிருக்கிறது. இந்த பிள்ளைகள் சபைகளுக்கு வந்து ஆராதனைகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களோ இச்சைகளினால் கறைப்பட்டு விழுந்துகிடக்கிறார்கள். பெற்றோர்கள் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளின் மேல் கவனம் செலுத்த மறந்துவிட்டார்கள். தங்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சபைகளுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள், பாஸ்டர்மார்கள் அவர்களை கவனித்துக்கொள்வார்கள் என்று மெத்தனமாக இருக்கிறார்கள்.

மினாசோனின் சிறப்புமிக்க வீடு

False Prophet என்ற பொல்லாத, நல்லவர்களை கொல்லும் அரக்கன் இங்கேதான் விழுந்து போன புகழ்மிக்க போதகர்களின் (Celebrity Preachers) மூலமாகவும், விழுந்து போன சபை போதகர்களின் மூலமாக பயணிகளை வஞ்சிக்கிறான். இவர்களை மீட்டு எடுக்கும் பணியில் அநேக மினாசோனின் சிறப்புமிக்க விடுகள் இந்த மாயாபுரியின் சந்தையில் இருக்கிறது. அந்திகிறிஸ்துவினால் கறைபடாத சபைகளும் இங்கேதான் இருக்கின்றது.

இங்கேயுள்ள ஊழியர்கள் நான்குவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். Mr Contrite (நொறுங்குண்ட இருதயம்) , Mr Holy-man (பரிசுத்த மனிதன்), Mr Love-saint (பரிசுத்தவான்களின்மேல் அன்பு) , Mr Dare-not-lye (பொய்யுரைக்க பயம்), and Mr Penitent (மனம் திரும்புதல்) என்கிற பணிகளாகும்.

இவர்கள் பிரசங்கிக்கையில் நமது கல்லான இருதயம் உடைந்து கல்வாரிக்கு நேராக திருப்புகிறது. இவர்களின் தனிப்பட்ட பரிசுத்த வாழ்க்கை நமக்கு சாட்சியளித்து நம்முடன் பேசுகிறது. இவர்கள் பரிசுத்த மனிதர்கள் (Holy Man) ஆவார்கள்.

இவர்கள் பரிசுத்தவான்களை நேசித்து அவர்களுக்கு பணிவிடை செய்கிறார்கள். வெறும் உப்பில்லாத செய்திகளை கொடுக்கவேமாட்டார்கள். "எனக்கு தசம பாகம் அல்லது காணிக்கை கொடுங்கள்" என்று சொல்லாமல் தங்களின் சபைகளில் கொடுக்கப்படும் தியாக பலிகளை, விசுவாச குடும்பத்தார்களுக்கும், பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகவும் கொடுக்கிறார்கள். இவ்விதமாக பரிசுத்தவான்களுக்கு சேவை செய்யும்படி தங்கள் சபைகளில் பிரசங்கிப்பார்கள். மினாசோனின் வீடுகளில் விசுவாசிகளின் கல்யாணகாரியங்களில் எல்லா உதவிகளும் செய்யப்படும். ஏழை விவாசிக்களுக்கான எல்லா உதவிகளும் செய்து தரப்படும்.

இவர்கள் பொய்யுரைக்கமாட்டார்கள். "வேதத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறதே", என்று சொல்லி தங்களின் சொந்த தத்துவங்களையும், வேதத்திற்கு மாறான அனுபவங்களை ஒருபோதும் செய்திகளில் கூறமாட்டார்கள். இவர்களின் செய்திகள் மனம் திரும்புதலை பற்றியும், பாவத்தையும் நீதியையும் கண்டித்ததாகவும் இருக்கும்.

கள்ள தீர்க்கதரிசி

இந்த கள்ள தீர்க்கதரிசி (false prophet), பாபிலோனியாவின் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவன். இவனுக்கு அரசியலில் செல்வாக்கும், மக்களை கவர்ந்து இழுக்கும்படியாக அற்புதங்களையும் அடையாளங்களையும் யேசுவின் நாமத்தில் செய்து அநேக தேவ மக்களை வஞ்சித்து அந்தி கிறிஸ்துவிடம் வழிநடத்துகிறான். இந்த கள்ள தீர்க்கதரிசி, எல்லா கள்ள, வேதத்திற்கு புறம்பான, வெளிப்படுத்தல்களின் தரிசனங்களுக்கு அதிபதியானவன். சில அருமையான சுவிசேஷகர்களையும் இவன் வஞ்சித்திருக்கிறான். அவர்களுக்கு கிடைத்த தரிசனங்களெல்லாம், நமக்கு உண்மைபோல தோன்றும்; ஆனால் தேவ சத்தியத்திற்கும், விசேஷமாக புதிய ஏற்பாட்டின் சத்தியங்களுக்கு புறம்பாகவே இருக்கின்றது. ஆனாலும் சர்வ ஞானியான தேவன் அவர்களின் தியாகங்கள், விசுவாசங்கள், கண்ணீர்கள் மூலம் நிறுவப்பட்ட நிறுவங்களின் மூலம் நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களை ஆத்தும ஆதாய பணிக்காக பயன்படுத்தி வருகிறார். இந்த நிறுவனங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஜெபவீரர்களும், சுவிசேஷர்களும் தங்களின் பெயர்களை மறைத்து ஊழியம் செய்துவருகிறார்கள். இதுதான் நாம் புரிந்துகொள்ளமுடியாத தேவஞானம்.

யார் இந்த மினாசோன் (Mnason)?

ஜான் பண்ணியன், அப்போஸ்தலரின் நடபடிகளின் புத்தகத்திலிருந்து ஒரு கதா பாத்திரத்தை இங்கு கொண்டுவருகிறார். "செசரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டுவந்தார்கள்"(அப்போஸ்தலர் 21:16). இந்த முதிர்ந்த பழைய சீடன் பவுலுக்கும் அவன்கூட பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்து உதவினான். தன்னால் பவுலுடன் கூடசெல்லமுடியாவிட்டாலும் அவர்களுக்கு பணிவிடை செய்து உதவினான். இது போன்ற ஊழியர்கள் மிக அவசியம். இன்று நமது சுவிசேஷகர்களோ, ஒரு பட்டணத்திற்கு சென்றால், விசுவாசிகளின் வீடுகளில் தங்காமல், "எங்களுக்கு ஹோட்டல்களில் தங்கினால் தான் ஜெபிக்கவும், மற்ற மக்களையும் சந்திக்க வசதியாயிருக்கும்", என கூறுகின்றனர். எனது வீட்டில் தங்கி ஊழியம் செய்த சாது ஜெபராஜ் அவர்களை இப்போதும் நாங்கள் மறக்கவில்லை. இப்போது தேவராஜ்யத்தில் பிரவேசித்துவிட்டார்கள்.1980/81 ல் அவர்கள் எங்கள் வீட்டில் தங்கும்போது எங்களுக்கு ஒரு அறை, வாடகைவீடுதான் (One room apartment) இருந்தது. நாங்கள் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு உபசரித்தோம். ஆண்டவர் அவருக்கு செய்த சிறு பணிவிடைகளை மறக்காமல் நாங்கள் சொந்தமாக வீடுகள் வாங்க உதவினார்.

மாயாபுரியிலுள்ள மினாசோனனின் வீட்டில் ஆவிக்குரிய மூப்பர்களும் பரலோக தரிசனங்களும்

எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தை எட்டாம் அதிகாரம் வசனங்கள் 1 முதல் 10 வரை நாம் தியானிப்போமாக. மினாசோனின் சிறப்புமிக்க வீட்டில் மூப்பர்கள் இருக்கிறார்கள். நாம் இதுபோல மூப்பர்களோடு ஐக்கியம் வைத்து தேவனை ஜெபத்துடன் ஆராதிக்கும் போது தேவ வெளிப்படுத்தல்கள் கிடைக்கிறது. நாம் எல்லோரும் இந்த மாயாபுரியின் சந்தையில் தான் சரீரப்பிரகமாக வாழ்கிறோம்.

"ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது." (8:1):

தேவ மக்களான நமக்குத்தான் கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் வெளிப்படுகிறது. நாம் ஆவிக்குரிய மூப்பர்களுடன் உட்கார்ந்திருக்கிறபோது ஆண்டவருடைய கரம் அமர்கிறது. நாம் தேவ தரிசனங்களை காண்கிறோம்.

"அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது. கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.

இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது.

அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது"(2 -5).

உங்களுக்கு தேவனுடைய ஆலயத்தில், அதாவது கிறிஸ்துவின் சரீரமான சபையில், என்ன நடக்கிறது என்பதை ஆண்டவர் காட்டுகிறார். அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருக்கிறது. உண்மையாக தேவ தரிசனத்தை காணும்போது தேவ மகிமை வெளிப்படும். மனித மகிமை வெளிப்படாது. எங்கே மனித மகிமை வெளிப்படுதோ அங்கே தேவ மகிமை வெளிப்படாது.

எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் நாம் பலி செலுத்தும் பலிபீடங்களின் அருகாமையில் தான் இருக்கிறது. நாம் எதற்கு பலி செலுத்துகிறோம், யாருக்காக பலி செலுத்துகிறோம் என்பது முக்கியம். உங்களது காணிக்கை எவ்விதமாக செலவழிக்கப்படுகிறது என்பது முக்கியம். தேவன் உங்களது பலி செலுத்தும் நோக்கத்தை அறிவார்.

நமது பலிபீடங்கள் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானமாக மாறக்கூடாது. இன்று நமது காணிக்கையின் மூலம் ஒரு தேவ ஊழியன் ஒரு விக்கரத்தை உருவாக்கினால் அதற்கு நாம்தான் பொறுப்பு. தேவ நாமம் மகிமைப் படாது.

"அவர் என்னை நோக்கி, மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி, என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன். அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது. அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார். நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன" (6-10).

பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு தேவனைவிட்டு தூரமாய்ப் போகப்பண்ணும்படியான அருவருப்புகளை தேவ மக்கள் தங்களது தீர்க்கதரிசன கண்களால் காணலாம். உங்களுடைய தீர்க்கதரிசன கண்கள் தான் இந்த துவாரம்! உங்களது ஆவிக்குரிய கண்களின் மூலம் இவைகளை நீங்கள் காணுவீர்கள். எல்லாவத்தையும் நீங்கள் காணும்படியான சுவறுகளில் பார்ப்பீர்கள். சுவறுகள் என்பது நமக்கு தேவன் வெளிப்படுத்தும் பலவிதமான கருவிகள் (tools). இன்று சமூக ஊடகத்தை (Social Media) ஒரு சுவராக காணலாம். தேவன் தாமே உங்களக்கு தீர்க்கதரிசனக் கண்களை தருவாராக.

இன்று, நாம் இயேசுவின் நாமத்தில் சகலவித விக்கிரங்களை காண்கிறோம். தேவ வசனத்திற்கு புறம்பான ஆராதனை என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களும், மனிதனின் புகழ்ச்சியை கொண்டுவந்து தங்களை சிறிய கடவுள்களாக (demigod) வெளிப்படுத்தும் எந்தவிதமான ஊழியர்களும் விக்கிரங்கள் ஆவார்கள். கட்டிடங்கள் கட்டி தங்களின் நாமங்களை பிரசித்திப்பண்ணும் எந்த சபை போதகனும் சுவிசேடனும் ஒரு விக்கிரமே.

தொடர்ந்து படிக்க........ மூன்று கொள்ளையர்களுடன் சத்தியத்திற்கான யுத்தம்