கூண்டில் அடைக்கப்பட்ட மனிதன்

.

இந்த பகுதியில் ஜான் பணியன் ஒரு இரும்புக்கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஒரு மனிதனை குறிப்பிடுகிறார்.

இந்த பகுதியில் ஜான் பணியன் ஒரு இரும்புக்கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஒரு மனிதனைக் குறிப்பிடுகிறார்.

ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்தஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும்உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்துஅவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எப்படியெனில், தன்மேல் அடிக்கடிபெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. (எபிரெயர் 6:4-8)

இந்த கூண்டில் அடைக்கப்பட்ட மனிதன் இனி மனம் திரும்புவதற்கான எந்தவிதமான சந்தர்ப்பமும் இல்லாமல் தேவனது தண்டனைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறான் என்று ஜான் பணியன்சொல்கிறார்.

நான் இந்த மனிதனை அவர் விட்டுப்போன கூண்டிலிருந்து எடுத்துச்செல்லும் வேறு ஒரு சொப்பனத்திற்குக் கொண்டு செல்கிறேன். இந்த சொப்பனமாவது ஜான் பண்ணியன் கண்டசொப்பனத்தின் தொடர்ச்சியாகும்.

இந்த கூண்டில் அடைக்கப்பட்ட மனிதன் இப்போது ஒரு தரிசனம் காண்கிறார். அதில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைக் காண்கிறார். அவரைசுற்றி ஒரு திரளான சாட்சிகள் நின்று அந்த மனிதனை தங்கள் கைகளை சுட்டிக்காட்டி தங்களுக்குள் ஏதோ சம்பாஷித்துக்கொண்டும்இருக்கிறார்கள். அப்போது அந்த மனிதன், "ஐயையோ. இது சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து அல்லவோ? இவரை சிலுவையில் அறைந்த ரோமபோர்சேவகர்களோ குற்றம் சுமத்தும் பரிசேயர்களோ, வேதபாரகர்களோ இங்கே இல்லையே" என்று புலம்புகிறார். அப்போது அங்கேயுள்ள சாட்சிகள்அந்த மனிதனை நோக்கி "நீ இவரை மறுபடியும் சிலுவையில் அறைந்துவிட்டாய்," என்றனர். "ஆம் நான் தான் இவரை சிலுவையில் அறைந்துவிட்டேன். நான் இவரை தொழுது கொண்டு சேவை செய்தேனே.எவ்வளவோ தேவ ஊழியர்கள்என்னை எச்சரித்தும் பாவமானது என்னை மேற்கொண்டுவிட்டு நான் மனம்திரும்ப முடியாமல், என்னை இந்த இரும்பு கூண்டுக்குள் அடைத்து விட்டேனே! இனி நான் மனம்திரும்பாமல் நரகத்தில் அழிந்து போகத்தான் வேண்டும், வேறு வழி இல்லை" என்று அங்கலாய்க்கத் தொடங்கினான்.

"ஆனால் நான் நேசித்த நேசரை நான் கடைசியாக அருகாமையில் சென்று, ஒரு முறையாவது கடைசியாக காணவேண்டும்" என்று அந்த பரிசுத்தவான்களின் கூட்டத்தை நோக்கிச்சொல்கிறான். அப்போது அப்பொல்லியன் அங்கே தோன்றுகிறான். அவன் கோபத்துடன் வந்து மேல்கூறப்பட்ட வசனங்களை சுட்டிக்காண்பித்து "உன்னால் அவரிடம் போக முடியாது. நீஎனக்குத்தான் சொந்தம்," என்று சத்தம்போட்டு அந்த மனிதனை சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் அருகில் போக விடாமல் தடை செய்கிறான். அவன் அப்படிசத்தம்போடும்போது அந்த இடமே அதிர்கிறது.

"இனி எனக்கு விடுதலை கிடைக்காது! அப்பொல்லியோன் சொல்வது எவ்வளவுஉண்மை!" என்று கதறுகிறான். அந்தசமயத்தில் சிலுவையின் அருகிலிருந்து ஒரு குரல் தொனிக்கின்றது. "என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா" என்று அந்தகுரல் அழைக்கிறது. அப்போது அந்த மனிதன் "இது என் நேசருடைய சத்தம்!.ஆனால் இந்த அழைப்பு எனக்கு இருக்காது. அந்த கூட்டத்திலுள்ள யாரோ ஒரு பரிசுத்தவனுக்குத்தான் இருக்கும்" என்று எண்ணத்தொடங்குகிறான். தைரியம் வரவழைத்து, "இந்த அழைப்பு எனக்கில்லாவிட்டாலும் பரவாயில்லை. நான் கடைசியாக ஒருமுறை மட்டும் என் நேசரைக் காண விரும்புகிறேன்" என்று அடம்பிடிக்கிறான். "என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை" என்று அந்த குரல் மறுபடியும் தொனித்தது. அந்த மனிதன்சிலுவையின் அருகே சென்ற போது, "என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.." என்று சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து தன்னை நோக்கி பேசியதை உணர்கிறான்.

அப்போது ஒருபரிசுத்தவான் ரோமர் 7ம் அதிகாரத்தை வாசிக்க கேட்கிறான். "நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ....என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்...நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது..... நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்...."

பின்பு "மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய (uttermost) இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" என்ற வசனங்களையும் படிக்கக் கேட்கிறான் (எபிரெயர் 7 :25).

"உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும்மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.(எபிரெயர் 6:10)" என்ற வசனங்களும் படிக்கக் கேட்கிறான்.

"தேவனுக்கும் அவருடைய நாமத்தில் அந்த மனிதன் அவருடைய பரிசுத்தவான்களுக்கு காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் தேவன் எப்படி மறந்துவிடுவார்?" என்று எண்ணத்தொடங்குகிறான்.

"ஐயையோ! நான் எப்படி என் நேசரிடம் போவேன்? இந்த இரும்பு கூண்டு தடையாய் இருக்கின்றதே" என்று சொல்லிக்கொண்டே அந்த கூண்டை அவன் தட்ட அது இரண்டாய்பிளந்தது. உடனே அவன் துள்ளிக்குதித்து சிலுவையண்டை ஓடுகிறான்.

இப்போது அந்த கல்வாரியின் காட்சி மாறுகிறது. அப்பொல்லியனோ ஓடிப் போகிறான். அந்த மனிதன் தேம்பி தேம்பி அழ கிறிஸ்து தன்உயிர்த்தெழுந்த காட்சியில் தோன்றுகிறார். கிறிஸ்து அவனுக்கு புதிய வெண்ணிற ஆடை அணிவித்து அவனது விரலில் தங்க மோதிரத்தை அணிவித்து அங்கே உள்ளபரிசுத்தவான்களுக்குக் கட்டளை இடுகிறார்.

"கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும்உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்" என்றுஉரைக்கிறார். இந்த தரிசனம் முடிந்தவுடன் அந்த மனிதன் "எனக்கு விடுதலைகிடைத்துவிட்டது. இனி நான் பரலோகம் செல்வேன்" என்று கூறிவிட்டு. கூண்டிலிருந்து வெளிவந்து கிறிஸ்டியானைத் தேடி ஓடுகிறான். சில நாட்கள்கழித்து கிறிஸ்டினானைக் கண்டுபிடித்து தான் கண்ட தரிசனத்தைகிறிஸ்தியானுக்கு அறிவிக்கிறான்.

கிறிஸ்தியனை நோக்கி "நான் உங்களுக்குப் பின் செல்வேன்" என்று கூறினபோது கிறிஸ்டியான் மகிழ்ச்சி அடைகிறான்.

கிறிஸ்டியான் சந்தோஷத்துடன் தன் மோட்சப் பாதையில் தொடருகிறான்.

___________________________________________________________

தயவு செய்து கவனிக்க ........

ஜான் பண்ணியனோடு எனக்கு ஒரு கருத்து வேறுபாடு ஒன்றும் இல்லை. அவர் அந்த மனிதனை கூண்டிலடைத்து விட்டுவிட்டு சென்றார். ஜான் பண்ணியன், அந்த கூண்டிலிருந்தமனிதன் மரித்து நரகத்திற்கு எறியப்பட்டார் என்று எழுதவில்லை. அந்த 17ம் நூற்றாண்டில் கூண்டில் விட்டுச்சென்ற, அந்த கூண்டிலிருந்த மனிதை, நான், இந்த 21ம்நூற்றாண்டில், ஜெபத்தோடு தியானிக்கும் போது, எனக்கு இந்த புதிய தரிசனம் கிடைத்தது.

இந்த 21ம் நூற்றாண்டில் அந்த மனிதனுக்கு கிடைத்த கால்வாயின் தரிசனத்திற்கு உங்களை அழைத்து செல்கிறேன். வேறு வார்த்தைகளில் கூறினால், அன்று ஜான் பண்ணியனுக்குகிடைத்த வெளிப்படுத்ததிலின் தரிசனத்தை நான் இன்று தொடர்கிறேன். அவரின் தரிசனத்திலிருந்து தான், எனக்கு தொடர்பாக கிடைத்த தரிசனவெளிப்படுத்தலுக்கு நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். அவர் எந்த இடத்தில் தன் பேனாவை விட்டுச்சென்றாரோ, அதே இடத்திலிருந்து தான், அந்த பேனாவை எடுத்து இந்ததரிசனத்தை எழுதுகிறேன்.

நான் அவரை விட உயர்ந்தவனா அல்லது கூடுதல் வெளிப்படுத்தல் பெற்றவனோ அல்ல. எனக்கு கிடைத்த தரிசனத்தில் நான் என்னை ஒரு சிறியவனாகவும், அவரை ஒரு உயர்ந்தமனிதனாகவும் தான், எனக்கு ஆண்டவர் காண்பித்திருக்கிறார்.

ஆண்டவர் எனக்கு தந்த தரிசனத்தில் நான் ஒரு சிறுவனாக குடைபிடித்துக்கொண்டு, ஜான் பண்ணியனோடு, நடந்து செல்வது ஒரு வியப்பை அளிக்கிறது. அவரோடு கூட நடந்துபோவது முடியான காரியம் தான். அவருக்கு கிடைத்த தரிசனங்கள் இன்று நமக்கு மிகவும் பொருந்துகிறது. கர்த்தர் அந்த 17ம் நூற்றாண்டில், இந்த 21ம் நூற்றாண்டில் நடக்கும்காரியங்களை, தரிசனங்கள் மூலம், வெளிப்படுத்தியிருக்கிறார். இது தேவனது அளவில்லாத ஞானத்தை வெளிப்படுத்துகிறது.

- யோபு அன்பழகன்