மரண இருளின் பள்ளத்தாக்கில் எனது சாட்சி

முந்திய பகுதி.....மேகமும், இருளும் மூடும் பாதை

மரண இருளின் பள்ளத்தாக்கில் எனது சாட்சி

நானும் எனது மனைவியும் இந்த மரண இருளின் பள்ளத்தாக்கில் 2019 ஆகஸ்ட் மாதத்தில் கடந்து வந்தோம். ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தியதியில் வேலை பார்க்க சென்ற பள்ளிக்கூடத்தில் சுவாசக்குழாய் இருதய சம்பந்தமான நோயால் பாதிக் கப்பட்டு என் மனைவி, ஆல்வினா ஜோப், மயக்கம்போட்டு விழுந்துவிட்டார். இருதயம் நின்று போக, அந்த பள்ளிக்கூடத்தில் பணி புரியும் ஆண்டவரை நேசிக்கும் ஒரு ஆசிரியரின் முயற்சியால் (Cardio-Pulmonary Resuscitation) உயிர் காக்கும் இருதய புத்துயிர் முதலுதவியால் உயிர் பெற அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் வேலைக்குப் போகும் வழியிலோ அல்லது ரோடை கடக்கும்போதோ இந்த பாதிப்பு நடக்கவில்லை. தனது இருக்கையில் அமரும்போதுதான் அவர் மூச்சை இழந்து கிடந்தார். பின்பு அந்த மருத்துவ மனையில் முக்கியமான வசதிகள் இல்லாததால் வேறு ஒரு மருத்துவமனைக்கு cardio ambulance மூலம் கொண்டு போய் சிகிச்சை பெற ஆண்டவர் தேவ மனிதர்களையும் மருத்துவர்களையும் ஏற்படுத்திக்கொடுத்தார். அந்த மருத்துவமனைக்குப் போகும் வழியில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தேவன் காத்துக்கொண்டார். அந்த மருத்துவ மனையில் ஆறு நாட்கள் ventilator வைக்கப்பட்டு தன்னினைவு இல்லாமலிருந்தார். சிகிச்சைக்கு வேண்டிய நோய் கண்டறிதல் பரீட்சை (diagnostic CT scan test) செய்யமுடியாதபடி ventilator ல், இருந்தார் Ventilator லிருந்து எடுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.. ஆகவே இதுதான் Pulmonary embolism என்ற வியாதியென்று யூகித்து சிகிச்சை கொடுக்க எங்களிடம் சம்மதத்தைப் பெற்றனர். அப்போது நாங்கள் குடும்பத்தோடு மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தோம். சாத்தான் என் உள்ளத்தில் பயம்விளைவிக்க அநேக எண்ணங்களைக் கொடுக்க, ஜெபிக்க முடியாமல் நான் மரித்த நிலையிலிருந்தேன். பாம்பின் இரைச்சலைக் கேட்டேன். மூன்றாம் நாள் நான் காலையில் மூன்று மணியன்று ஆண்டவர் என்னோடு பேசினார். மூன்றாம் நாளில், என் ஆத்துமாவில் எழுப்புதல் (Revival) ஏற்பட்டது. இரண்டு அடையாளங்களைக் கொடுத்து மனைவி சுகம்பெற்று ICU விலிருந்து ரூமிற்கு வந்து சுகம் பெறுவார்கள், மரண இருளின் பள்ளத்தாக்கிலிருந்து பியூலா தேசத்திற்கு கொண்டு வருவேன் என்று ஆண்டவர் திருவுளம் பற்றினார்.

மருத்துவர்களுக்கு விசேஷித்த ஞானத்தைக்கொடுத்து சரியான சிகிச்சை கொடுத்து 12ம் தியதி மனைவி வீட்டிற்கு வர ஆண்டவர் உதவி செய்தார்.

மனைவி மருத்துவமனையிலிருக்கும்போது ஒருநாள் இரவு நான் ஒரு பலத்த குரலில் ஒருவர் வீட்டின் கதவில் நின்று GOOD MORNING, JOB என்னை அழைத்ததை கேட்டு திடுக்கிட்டு எழும்பினேன். இந்த குரல் ஒரு தேவதூதனின் குரல் என்று உணர்ந்தேன். இரவில் எந்த மனிதனும் Good morning என்று வாழ்த்தமாட்டார்கள். பின்பு பரிசுத்தாவியானவர் இதன் அர்த்தத்தை விளக்கி கூறினார். இருண்ட மரண இருளின் பள்ளத்தாக்கு முடிந்து நல்ல காலை உதயமாகிவிட்டது. அதாவது இரவு போய் காலை வந்துவிட்டது என்று விளக்கிக் கூறினார். இந்த இறை வாக்கை ஒரு தீர்க்கதரிசன வாக்காக எனக்கு தந்தருளினார். யாராவது மரண இருளின் பள்ளத்தாக்கில் கடந்து போகும்போது நாம் அந்த மனிதரை நோக்கி பெயர்சொல்லி அழைத்து “GOOD MORNING” என்று சொல்லவேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து படிக்க.......கண்ணியைகளும், பயம் விளைவிக்கும் கடுமையான” அரக்கனும்