அவமானத்தின் பள்ளத்தாக்கு (Valley of Humiliation)

Home

முந்திய பகுதி...பக்தி, விவேகம் ஊழியர்களின் கடைசி பணிகள்

அவமானத்தின் பள்ளத்தாக்கு

விடை பிரிந்து, பயணிகள் இப்போது அழகிய மாளிகை அமைந்த மலையிலிருந்து கீழே இறங்கத் தொடங்கினர். "இந்த மலையின் கீழ்தான் கிறிஸ்டியான் அப்போல்லியனோடு போராடிய அவமானத்தின் பள்ளத்தாக்கு இருக்கிறது," என்று பக்தி ஊழியக்காரி கூறுகிறாள். "உங்களோடு கிரேட் ஹார்ட் இருப்பதால் பயப்பட அவசியமில்லை", என்று மேலும் கூறுகிறாள். கிரேட் ஹார்ட்டும் "பயப்படவேண்டிய அவசியமில்லை. நாமே துன்பத்தை வரவழைத்தாலே தவிர வேறு வகையில், நமக்கு ஒரு துன்பமும் வராது. உண்மையாகவே கிறிஸ்டியான் இங்கே அப்போலியனோடு போராடினார். அவர் கால்தவறி விழுந்ததுதான் இந்த துன்பத்தை வரவழைத்துவிட்டார். கால் இடறி விழும்போது தான் அப்போலியனோடு யுத்தங்கள் செய்யவேண்டிவரும். இந்த அவமான பள்ளத்தாக்கு பலனளிக்கும் இடம்தான். காகமும் இதன்மேல் பறக்கிறது. இப்போது நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்போமானால் ஏதாவது துப்பு கிடைக்கும்," என கூறுகிறார். அப்போது ஜேம்ஸ் தாயை நோக்கி, "இங்கே ஒரு தூண் (Pillar) இருக்கிறது. அதன்மேல் என்ன எழுதியிருக்கிறது என்று போய் பார்ப்போம்," என்று கூற, எல்லோரும் அந்த எழுத்துக்களை வாசித்தனர்: "கிறிஸ்தியானின் சறுக்கல் அவனை இந்த யுத்தத்திற்கு இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இது இங்கு வருபவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்" என அதில் எழுதியிருக்கிறது. கிரேட் ஹார்ட், "கிறிஸ்டியானை இழிவு படுத்தாமல், நான் சொல்ல விரும்புகிறேன். கிறிஸ்டியான் இந்த இடத்தில் அடைந்த துன்பங்களுக்கு காரணம் இருக்கிறது. மலை ஏறுவது எளிது. ஆனால் இறங்குவதோ மிக கஷ்டம். இப்போது கிறிஸ்டியான் ஒரு இன்பமான இடத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறான். அவனை விட்டுவிடுவோம். அவன் சந்துருவின் மேல் ஒரு மகத்தான் வெற்றியை அடைந்து இருக்கிறான். இதை போல நாமும் போராடி வெற்றி பெற்று அவனடைந்த வெற்றியைக் காட்டிலும் குறையாமலிருக்க, பரத்திலிருந்து நமக்கு அருள் அருளப்படும். நாமும் இந்த பள்ளத்தாக்கிற்கு திரும்பவும் வருவோம். இந்த இடம் உலகத்திலே ஒரு அதிகம் பலனளிக்கும் நிலம். மிகுந்த புல்வெளியுள்ள இடம். கோடையில் யாரும் இங்கே முதல் தடவையாக வந்தால், கண்களுக்கு இன்பமாக இருக்கும்! பசுமை நிறைந்த இடம்! அல்லிகள் அழகாக காட்சியளிக்கும் இடம்! அநேக தேவ ராஜ்யத்திற்காக உழைக்கும் மனிதர்கள் இந்த இடத்தை சொந்தமாக்கிக்கொண்டனர். இந்த நிலம் அதிக பலன் தருகிறது. சிலர் இங்கேயிருந்து பரம பிதாவின் வீட்டிற்கு போக சமீபமாக இருந்தால் நல்லது என எண்ணுகிறார்கள். மலைகளும் குன்றுகளும் இல்லாமல் இங்கேயிருந்து நேராக போனால் நலமாயிருக்கும் என விரும்புகினர். ஆனால் நமக்கு ஒரே வழிதான் உண்டு; அதன் மூலமாகத்தான் முடிவுக்குப் போகமுடியும்," என்று கூறுகிறார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

ஆவிக்குரிய மலையுச்சியிலிருந்து இறங்கும்போது கவனமாக இருக்கவேண்டும். எப்போதுமே மலையுச்சியில் இருக்கமாட்டோம். இன்றைக்கு பரமதரிசனங்கள் கிடைக்குமானால் நாளைய நாள் அவைகள் கிடைக்காது. யேசுவோடுக்கூட மறுரூப மலையுச்சியில் கூடாரம் போட்டு இருக்க பேதுருவும், யாக்கோபும், யோவானும் விரும்பினார்கள். ஆனால் அவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படவில்லை. மலையைவிட்டு கீழே இறங்கினதும் அவர்களுக்கு பிசாசைத் துரத்தும் பணி காத்துக்கொண்டிருந்தது. அந்த பணியில் தோல்வியுற்றனர். "அவர்களால் கூடாமற்போயிற்று" (மாற்கு 9:1-20). நமக்கு ஊழியமானது மலைக்குக்கீழ்தான் இருக்கிறது.

நாம் ஆவியானவரால் நடத்தபடும்போது நாம் கீழே விழாமல் காத்துக்கொள்ளலாம். பள்ளத்தாக்கில் நாம் அப்பொல்லியோனை சந்தித்து யுத்தம் பண்ண வேண்டிய அவசியமில்லை. அப்பொல்லியோன் நம்மை கண்டு ஓடிவிடுவான். ஆண்டவர் நம்மை அவனால் சோதிக்கப்படுவதற்கு அனுமதிக்கும்போதுதான் யுத்தம் செய்யவேண்டும்.

நமக்கு ஆவிக்குரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. எதிர்பாதவிதமாக சோதனைகளும், போராட்டங்களும் நம்மை சந்திக்கிறது. விசுவாசத்தை இழந்து விடுகிறோம். கீழே விழாமல் பாதுகாத்துக்கொள்ளும்படி சுருளை எடுத்துப்படித்துக்கொண்டும், ஜெபித்துக்கொண்டும் இந்த பள்ளத்தாக்கை கடந்துப்போகலாம்.

"ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" (எபிரெயர்12:1)

இந்தப் பள்ளத்தாக்கில், நம்மை வீழ்த்தும் பாவம் நம்மைப் பின்தொடருகிறது. நமது தோட்டத்தைப் பாழாக்கும் சிறு நரிகளைப் பிடிக்கவேண்டும். நாம் பரிசுத்த வாழ்க்கை ஒரு களங்கமும் இல்லாமல் பரிசுத்தாவியானவரின் உதவியோடு ஜீவிக்கும்போது அப்பொல்லியோன் நம்மை கண்டவுடன் ஓடிப்போகிறான். நாம் அவனோடு யுத்தம் செய்ய அவசியமில்லை.

கிறிஸ்டியானாவும் அவளது குழுவும் கிரேட் ஹார்டினால் வழி நடத்தப்படுவதினால் அபொல்லியோனை சந்திக்கவேயில்லை. பரிசுத்தாவியானவர் தாமே நம்மை கிரேட் ஹார்ட் போல வழிகாட்டியாக இருக்கும்போது, நாம் நம்மை விழாமலும், அப்பொல்லியோனின் கையில் விழாமலும், காத்துக்கொள்ளமுடியும். இந்த அவமானத்தின் பள்ளத்தாக்கு, பசுமையுள்ள, பலன்தரும் பள்ளத்தாக்காக மாறிவிடுகிறது. நாம் இந்த பள்ளத்தாக்கை சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

நமக்கு ஆவிக்குரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. எதிர்பாதவிதமாக சோதனைகளும், போராட்டங்களும் நம்மை சந்திக்கிறது. விசுவாசத்தை இழந்து விடுகிறோம். கீழே விழாமல் பாதுகாத்துக்கொள்ளும்படி சுருளை எடுத்துப்படித்துக்கொண்டும், ஜெபித்துக்கொண்டும் இந்த பள்ளத்தாக்கை கடந்துப்போகலாம்.

"ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" (எபிரெயர்12:1).

இந்த பள்ளத்தாக்கில், நம்மை வீழ்த்தும் பாவம் நம்மைப் பின்தொடருகிறது. நமது தோட்டத்தைப் பாழாக்கும் சிறு நரிகளைப் பிடிக்கவேண்டும். நாம் பரிசுத்த வாழ்க்கை ஒரு களங்கமும் இல்லாமல் பரிசுத்தாவியானவரின் உதவியோடு ஜீவிக்கும்போது அப்பொல்லியோன் நம்மை கண்டவுடன் ஓடிப்போகிறான். நாம் அவனோடு யுத்தம் செய்ய அவசியமில்லை.

கிறிஸ்டியானாவும் அவளது குழுவும் கிரேட் ஹார்டினால் வழி நடத்தப்படுவதினால் அபொல்லியோனை சந்திக்கவேயில்லை. பரிசுத்தாவியானவர் தாமே நம்மை கிரேட் ஹார்ட் போல வழிகாட்டியாக இருக்கும்போது, நாம் நம்மை விழாமலும், அப்பொல்லியோனின் கையில் விழாமலும், காத்துக்கொள்ளமுடியும். இந்த அவமானத்தின் பள்ளத்தாக்கு, பசுமையுள்ள, பலன்தரும் பள்ளத்தாக்காக மாறிவிடுகிறது. நாம் இந்த பள்ளத்தாக்கை சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

தொடர்ந்து படிக்க..... உண்மையான மேய்ப்பனும் தேவனுடைய வீடும்