நல்லவர்களை அழிக்கும் அரக்கனின் அரக்கனின் கையில்

Home

முந்திய பகுதி .......காயுவின் வீட்டின் (House of Gaius) சிறப்புகள்

நல்லவர்களை அழிக்கும் அரக்கனின் அரக்கனின் கையில்

பின்பு பயணிகள் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு போய் நல்லவர்களை அழிக்கும் அரக்கனின் (Slay-the-good Giant) குகை வாசலை அடைய, அங்கே ஒரு காட்சியைக் காண்கிறார்கள். வலுக்குறைந்த மனது (Mr. Feeble Mind) என்ற பெயருடைய ஒரு பயணியை அரக்கன், தான் பிடித்து வைத்து, அவனை கொன்று சாப்பிடும்படி முயற்சித்துக்கொண்டிருந்தான். அந்த அரக்கன் மனித மாம்சத்தை தின்பது வழக்கமாம். ஆயுதம் தாங்கிய பயணிகளும் கிரேட் ஹார்ட்டும் அங்கே வர, அரக்கன். "உங்களுக்கு என்னவேண்டும்?" என் கேட்க, கிரேட் ஹார்ட், "நீ தான் வேண்டும். பயணிகளின் ரத்த பழியை தீர்க்க வந்திருக்கிறோம். நீ இந்த பலவீனம் இருதயம் உடைய பயணிகளை, ராஜாவின் நெடுஞ்சாலையிலிருந்து பிடித்துக் கொண்டுபோய் கொன்று குவித்திருக்கின்றாய்," என்று சொல்லிக்கொண்டிருக்க, அரக்கன் தன் ஆயுதத்தை எடுத்து, "எனது பூமியில் நீ எப்படி வந்தாய்," என்று சத்தமிட்டு, கிரேட் ஹார்டிடம் யுத்தம் செய்கிறான். ஒரு மணி நேரம் கழித்து, கிரேட் ஹார்ட் அரக்கனின் தலையை வெட்டி அவனைக் கொன்று, அவன் தலையை எடுத்துக்கொண்டு, காயுவின் வீட்டிற்கு, வலுக்குறைந்த மனதையும், தன் கூடவே அழைத்துக்கொண்டு வருகிறார். அந்த வீட்டில் அந்த அரக்கனின் தலையை, "இதுபோல அப்பாவி பயணிகளை அழிக்க நினைக்கும் மனிதர்களுக்கு, ஒரு பயங்கர விளைவு உண்டாகும் என்பதற்கு இது அடையாளமாக இருக்கட்டும்," என்றுரைக்கிறார்.

பின்பு, வலுக்குறைந்த மனதிடம் உரையாடலாற்றி, அவனது சோகக்கதையை கேட்டனர். அவன், தான் முட்டாள்கள் வசிக்கும் பட்டணத்தின் (Town of Stupidity) அருகிலுள்ள நிச்சயமில்லாத நகரத்தை (Town of Uncertain) சேர்ந்தவன் என்றும், தான் எப்போதும் பலவீனனாக இருப்பதாலும், மரணத்தை சீக்கிரம் சந்திப்பதாக இருப்பதாலும், மோட்சப்பட்டணத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறினான். தன் சரீரத்தில் பலன் இல்லாததால், தான் தவிழ்ந்து கொண்டு எப்படியாவது மோட்சப்பட்டணத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தால், நுழைவு வாசலை அடைந்து, அங்கேயுள்ள எஜமான் (Lord of the house), தன்னை நன்கு கவனித்து, வேண்டிய பொருட்கள் கொடுத்து, பொருள்கூறுபவரின் இல்லத்திற்கு அனுப்பிவைத்ததாகவும், பின்னர் பொருள்கூறுபவரின் இல்லத்தில் எல்லா இரக்கமும், நன்மைகளையும் பெற்று, அங்கேயிருந்து ஒரு உதவியாளரின் உதவியோடு கடின மலைக்கு (Hill Difficulty) தூக்கிச்செல்லப்பட்டதாகவும் சொன்னான். பின்பு அவன் அடிபடும் தெருவுக்கு (Assault Lane) வந்தபோது, இந்த அரக்கனின் கைகளில் மாட்டிக்கொண்டு, தனது உடமைகளை எல்லாம் பறிக்கப்பட்டு, குகையில் குற்றுயிராக கிடந்த அவனை மீட்ட கிரேட் ஹார்ட்டிற்கு தன் நன்றியுள்ள இருதயத்தால் வாழ்த்துகிறான். தான், இனி பாதையில் தொடர்ந்து பாலமில்லாத ஆற்றை கடப்பதற்காகக் காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினான்.

காய்வு (Gaius) அவனை வரவேற்று, அவனை விசேஷவிதமாக உபசரித்தார். சிறிதுநேரம் கழித்து ஒரு மனிதன் ஓடிவந்து, Mr Not-right (சரி இல்லை) என்ற பயணி, இந்த அரக்கனின் கையிலிருந்து, தப்பி ஓடிப் போனதாகவும், ஆனால், வழியில் வானத்திலிருந்து வந்த இடியால் கொல்லப்பட்டதான, செய்தியை அறிவித்தான். வலுக்குறைந்த மனது, அந்த இறந்துபோன பயணியை அறிந்ததாகவும், அந்த பயணி இவனை முந்திக்கொண்டு பிரயாணப் பாதையில் போனதாக சொல்லி, வருத்தமடைந்தான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

விசுவாசிகளின் மாமிசத்தை, அதாவது அவர்களின் உலகப்பிரகானமான சொத்துக்களையும், பணத்தையும் இச்சிக்கும் எந்த மனிதனும் ஒரு ராட்சதனே!

எதையும் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனதுள்ளவர்கள், அவர்கள் கேட்ட கள்ள உபதேசங்களை அப்படியே நம்பி, ஆண்டவரின் வார்த்தைகளை நம்பாமல் இருந்ததால், அவர்களின் இருதயம் பலவீனமாகிறது. இவர்களின் விசுவாச ஜீவிதம் ஆண்டவரின் மேலில்லாமல், போதகர்கள்மேலும், சுவிசேஷகர்கள் மேலும் தான் இருக்கிறது. காற்று எங்கே அடித்தாலும் இவர்கள் அங்கே இழுத்துகொண்டுப்போகப்படுவார்கள். ஆனால், இவர்கள் நுழைவு வாசலின் மூலம் வந்து, சுவிசேஷம் கேட்டு, சிலுவையையும் காலியான கல்லறையையும் தரிசித்தவர்கள். இவர்கள் அந்திகிறிஸ்துவினால் அனுப்பப்படும் அரக்கனின் கைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். இவர்களை மீட்கும்பொருட்டு ஆண்டவர், கிரேட் ஹார்ட் போன்ற ஊழியர்களை, அனுப்பிவைக்கிறார். ஆண்டவர் இவர்கள்மேல் அதிகம் அக்கறை செலுத்துகிறார். இந்த அரக்கன், நுழைவுவாயின் வழியாக வராத பயணிகளை, ஆத்துமாவில் அழித்திருக்கிறான். ஆனால், நுழைவுவாயின் வழியாக வந்த வலுக்குறைந்த மனதை போன்ற அப்பாவி பயணிகளை, ஆண்டவர் காக்க சித்தம்கொண்டிருக்கிறார். இது போன்ற பலவீன பயணிகளை காய்வு அல்லது கிரேட் ஹார்ட்டை போன்ற ஊழியர்களிடம் நாம் வழிநடத்தவேண்டும்.

ஆனால், (Mr Not-right) "சரி இல்லை", போன்ற பயணிகளை ஆண்டவரால் காப்பாற்றமுடியவில்லை. ஏனென்றால், இவர்கள் இந்த அரக்கனை பற்றி நன்கறிந்தவர்கள். அவனது போதனைகளை அறிந்து, அவன் கைகளிலிருந்து தப்பிவிட்டனர். ஆனால், இவர்களுக்கு வலுக்குறைந்த மனதை போல மோட்சப்பட்டணத்தை நோக்கி போகவேண்டும் என்ற தரிசனம் கிடையாது. கள்ள தீர்க்கதரிசகளிடம் தங்கள் தொடர்பை துண்டிக்காமல் இருக்கும்போது, தேவக் கோபத்தால் அழிக்கப்படுகிறார்கள். இந்த விதமான பயணிகளை நாம் எச்சரித்து அவர்களை கள்ள போதகர்கள், கள்ள ஊழியர்கள் கைகளிலிருந்து தப்பியோட உதவி செய்யவேண்டும்.

Mr. Feeblemind, Mr. Ready-to-halt என்ற பலவீனமான தேவபிள்ளைகளையும் நமது சபைகளில் உற்சாகப்படுத்தி, தனிப்பட்ட முறையில் Bible Study வைத்து போதிக்கவேண்டும்.

தொடர்ந்து படிக்க.. மாயாபுரியின்சந்தையில் மினாசோனின் சிறப்பு வீடும், ஊழியங்களும்