தாய்க்கோழியின் உவமானம்

Home

முந்திய பகுதி...குப்பைவாரியுடன் ஒரு மனிதன்

தாய்க்கோழி, கசாப்பு கடை உவமானங்கள்

பொருள்கூறுபவர் வேறு ஒரு அறையில் ஒரு தாய் கோழி தன் குஞ்சுகளுடன் இருக்கும் காட்சியைக் காண்பிக்கிறார். ஒரு குஞ்சானது தண்ணீர் தொட்டியில் போய் தண்ணீர் குடித்து தலையை தூக்கி வானத்தை பார்க்கிற காட்சியின் அர்த்தத்தை கூறுகிறார். இதுபோல நாமும் பரத்திலிருந்து வரும் கிருபையை, நன்றியோடு, பெற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார்.

பொருள்கூறுபவர் மேற்கொண்டு கூறுவதாவது: "தாய் கோழிக்குத் தன் குஞ்சுகளுக்காக நான்கு குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. எல்லா குஞ்சுகளுக்கும் (1) ஒரு பொதுவான அழைப்பும் (2) ஒரு தனிப்பட்ட அழைப்பும் கொடுக்கிறது. பொதுவான அழைப்பு பகல் முழுவதும் எல்லா பிள்ளைகளுக்கும் கொடுக்கிறது ஆனால் தனிப்பட்ட அழைப்பு சில ஆபத்தான சமயங்களில் வழி தப்பி போகும் பிள்ளைகளுக்காகக் கொடுக்கிறது.

(3) அடைகாக்கும் சத்தம் (brooding note) எப்போதும் இருக்கும், (4) கண்டனங்களை அல்லது ஆபத்தை அறிவிக்கும் சத்தம் வித்தியாசமாய் இருக்கும்.

இந்த தாய் கோழியை போலத்தான் நமது பரலோக அரசன் நம்மை கவனித்துவருகிறார். அவருக்கு கீழ்ப்படிந்து அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுந்து அவரது அடைகாக்கும் சத்தத்தை நாம் கேட்கலாம். சத்துரு நம்மை தாக்க வரும்போது அவரது எச்சரிப்பின் குரலை நாம் கேட்கலாம்".

பெண்கள் இந்த அறையில் காண்பித்த காட்சியின் உவமானத்தை மிக எளிதில் புரிந்து கொள்வார்கள் என்றுதான் இந்த விசேஷித்த அறைக்கு அவர்களை கூட்டிச்சென்றதாக பொருள்கூறுபவர் அறிவிக்கிறார்.

கசாப்பு கடையின் (Slaughter house) உவமானம்

இனி வேறு ஒரு அறையில் ஒரு ஆடுகள் அடித்து கொல்லும் இடத்தை காண்பிக்கிறார். கசாப்புக் கடைகாரன் ஆட்டை அடித்துக் கொல்லும்போது, அது தன் வாயை திறக்காது; தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாது. இந்த ஆட்டைப்போல நாம் நம்மை துன்புறுத்தும் சத்துருக்களின் முன்பாக இருக்கவேண்டும் என்று கருதி ஆடுகள் என்று பொருள்கூறுபவர் நம்மை அழைக்கிறார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

மேலே கூறப்பட்டுள்ள உதாரணங்கள் மூலமாக சபை போதகர்கள் தங்களது சபை மக்களுக்குப் போதிக்க வேண்டும். வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட உவமானங்களாக இருந்தால் மிகவும் நல்லது.

நமது போதிக்கும் முறைகளை மாற்றிக்கொள்ளவேண்டும். போதிக்கையில் நாம் உறவாடவேண்டும். வெறுமனே சொற்பொழிவு அளிக்கக்கூடாது. புரிந்து கொள்ளும்படியாக எளிய முறையில் உரையாடல் நடத்தவேண்டும். இங்கே பொருள்கூறுபவரின் வீட்டில் நடப்பது அதுதான்.

தொடர்ந்து படிக்க.....அழகிய பூங்கா, கோதுமை மணி