மூன்று கொள்ளையர்களுடன் சத்தியத்திற்கான யுத்தம்

Home

முந்திய பகுதி ......மாயாபுரியின்சந்தையில் மினாசோனின் சிறப்பு வீடும், ஊழியங்களும் 

மூன்று கொள்ளையர்களுடன் சத்தியத்திற்கான யுத்தம்

பயணிகள் வழியில் ஒரு இடத்தில் பலவீன விசுவாசம் (Little-faith) என்ற பயணி கொள்ளையடிக்கப்பட்ட இடத்தை வந்து சேரும்போது வேறு ஒரு வாளை ஏந்திய, சத்தியத்திற்கான தைரியம் (Valiant-for-truth) என்ற பெயருள்ள பயணியை சந்திக்கிறார்கள். கிரேட் ஹார்ட் அவரை பார்த்து யார் என்று கேட்க, தனது பெயர் ,"சத்தியத்திற்கான தைரியம்" என்றும் மூன்று கள்வர்கள் அவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறுகிறார். அந்த கள்வர்கள் அவருக்கு மூன்று காரியங்களை கூறி ஒன்றை மாத்திரம் தெரிந்துகொள்ள சொன்னார்களாம். அவைகளானது - (1) எங்களைப்போல் ஒரு மனிதனாக மாறவேண்டும் (2) திரும்பி எங்கேயிருந்து வந்தேனோ அங்கே போகவேண்டும் அல்லது (3) இந்த இடத்தில் மரிக்கவேண்டும். பதிலுக்கு தான் முதலில் கூறப்பட்ட இரண்டு காரியங்களை செய்யமுடியாது என்றும், மரிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் சொன்னாராம். மிருகத்தலை உடையவர்கள் (Wild-head), புரிந்து கொள்ளாதவர்கள் (Inconsiderate) and நடைமுறையில் நிரூபித்தல் (Pragmatic) என்ற பெயருள்ள இந்த மூன்று கள்வர்கள் சத்தியத்திற்கான தைரியத்தை தாக்கி, அவரது சில பொருட்களை களவாடி சென்றுவிட்டனராம். தன்னிடம் சத்தியம் இருந்ததால் இவரை அந்த கள்வர்கள் வெற்றி கொள்ளமுடியவில்லையாம். தனக்கு மனித உதவி கிடைக்காததால், பரலோக ராஜாவை நோக்கி கூப்பிட்ட அவருக்கு, மறைமுகமாக உதவி வந்ததாம். தனது இருபுறமும் கருக்குள்ள எருசலேம் பட்டயம் (Jerusalem Blade) என்ற வாளை காண்பித்து, இந்த வாளின் மூலம் வெற்றி பெற்றதாக கூறினார்.

தன் கைகளிலிருந்து ரத்தம் வழிந்தாலும் வாளை விடாமல் பற்றிக்கொண்டதாகவும் சொன்னார். அவரின் வாளைக்குறித்து இவ்வாறு கூறினார்,"இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" (எபிரெயர் 4:12). கிரேட் ஹார்ட் அவரை புகழ்ந்து, "பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக எதிர்த்து.நின்றதற்காக" அவரைப் பாராட்டினார் (எபிரெயர் 12:4). தான் மோட்சப்பயணியானதற்கான சாட்சியை கூறுகிறார். தான், "அழியும் நகரத்தின் கடற்கரையின் அமைந்துள்ள இருண்ட கண்டத்திலிருந்து வந்ததாகவும், ஒரு “சத்தியம் உரைத்தல்” (Mr Tell-true) என்ற ஊழியர் வந்து கிறிஸ்டியான் எப்படி அழியும் நகரத்தை விட்டு மோட்சபட்டணத்தை அடைந்ததை விபரமாக கூறினாராம். ஆனால், அவரின் பெற்றோர்கள், தான் மோட்சபட்டணத்திற்கு போகவேண்டுமானால், வழியில் சந்திக்கும் அரக்கர்களைக் குறித்தும், கடின மலையைக் குறித்தும், அவமானத்தின் பள்ளத்தாக்கு, மற்றும் மரண இருளின் பள்ளத்தாக்கு, போன்ற ஆபத்துகளைப் பற்றியும் புள்ளிவிவரமாக கூறி அவரை பயப்படுத்தினாலும், தான் தைரியமாக முன் வந்ததாகவும், சாட்சியாக அறிவித்தார்.

அவரது காயங்களை கழுவி அவருக்கு மற்ற பயணிகள் பணிவிடை செய்கிறார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

சத்தியத்திற்கான தைரியத்தின் (Valiant For Truth) கையிலுள்ள வாளானது இருபுறமும் கருக்குள்ள எருசலேம் பட்டயம் (Jerusalem Blade) என்று ஜான் பண்ணியன் குறிப்பிடுகிறார். இந்த பட்டயம் தான் அசல் (Original)! கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்களும் சாத்தானிற்கு விரோதமாக உபயோகித்த தேவனின் வார்த்தை. இப்போது பெரும்பாலான ஊழியர்களின் கைகளில் இருப்பது இந்த எருசலேமின் கத்தி அல்ல.

இருபுறமும் கருக்குள்ள இந்தப் பட்டயம், கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. இந்த எருசலேம் பட்டயமானது, நமது ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் வேறுவேறாக பிரிக்கிறது. நமது மாமிச இச்சைகளை நமது ஆத்துமாவிலிருந்து பிரித்து நம்மை கிறிஸ்துவின் சாயலில் மாற்றுகிறது. நமது மாமிச இச்சைகளை கிறிஸ்துவின் சிலுவையில் அறையவேண்டும். இது இருதயத்தை கிழித்து உள்ளிலுள்ள பரிசுத்தமில்லாத நினைவுகளையும் யோசனைகளையும் வெளிப்படுத்துகிறது. கள்ள போதனைகளை சத்தியத்தின் ஆவியானவரின் மூலம் வெளிப்படுத்துகிறது.

மூன்று விதமான கொள்ளைக்காரர்களை (வஞ்சிக்கும் அந்திக்கிறிஸ்துவின் ஆவிகளை) சத்தியமாகிய பட்டயத்தை எடுத்து வீழ்த்தவேண்டும். "அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்......(வெளி 16:13). 

மிருகத்தலை உடைய போதகர்கள் (Wild Head)

இவர்கள் போதிப்பதெல்லாம், அவர்கள் படித்த அறிவிலிருந்து அதாவது தலையிலிருந்து வருகின்றது. இவர்கள் போதிப்பதிற்கும் அவர்களின் வாழ்க்கையிற்கும் ஒரு சம்பந்தமே கிடையாது. இவர்களின் இதயமோ கல்லானது. சத்தியத்தைக் குழந்தைபோல ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தங்களுக்கத்தான் எல்லா சத்தியங்களும் தெரியும் என்ற மேட்டிமையான ஆவி இவர்களிடம் கிரியை செய்கிறது. இவர்கள், தங்களின் தப்பான தத்துவங்களை (False doctrines) நமக்குப் போதித்து, நம்மில் வாசம் செய்யும் சத்திய ஆவியானவரின் கிரியைகளை, கொல்லவும் அழிக்கவும் வருகிறார்கள். 

சுயநல ஊழியர்கள்

அடுத்த கொள்ளைக்காரன் "புரிந்து கொள்ளாதவர்கள்" (Inconsiderate) ஆகும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் மற்றவர்களின் துன்பங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள். இந்த விதமான போதகர்கள் தங்களின் சுய நலத்திற்காக ஊழியம் செய்து தங்களுக்குப் புகழும், தங்களின் சாம்ராஜ்யங்களை இயேசுவின் பெயரால் விரிவாக்கம் செய்வதற்கான பணத்தை தேவமக்களிடமிருந்து பறித்துக்கொள்ள வருகிறார்கள். தேவமக்களை தங்களது பேச்சுத் திறமைகளினாலும், இயேசுவின் நாமத்தில் செய்யும் அற்புதங்களினாலும் கவர்ந்து இழுக்கும் இவர்களின்  மேடை ஊழியங்கள், புதிய ஏற்பாட்டின் சத்தியத்திற்குப் புறம்பாக இருக்கிறது. கிறிஸ்துவின் சித்தத்தை புரிந்துக்கொள்ளாதவர்கள்!  தங்களை பின்பற்றி வரும் ஆயிரமாயிரம் மக்களின் கூட்டங்களை வைத்துத்  தங்களின் ஊழியங்களை எடைப்போட்டு, கிறிஸ்துதான் இவ்விதமான ஊழியங்களை நிறைவேற்ற சித்தம் கொண்டிருக்கிறார் என்ற தப்பான எண்ணத்துடன் ஊழியங்களை செய்துவருகிறார்கள்.

நடைமுறையில் நிரூபிக்க விரும்பும் ஊழியர்கள்

மூன்றாம் வரும் போதகர்கள் "நடைமுறையில் நிரூபித்தல்" Pragmatic ஆகும். இவர்கள் எந்த சத்தியத்தையும் நடைமுறையில் நிரூபிக்க முயல்வார்கள். இவர்கள் வேதத்தின் தத்துவத்தைப் புறக்கணித்து தங்கள் பிரசிங்கிக்கும் சுவிசேஷத்தை இயேசுவின் வல்லமையால் நிரூபிக்காமல், தங்களின் திறமைகளால் அல்லது பேச்சு சாதூரியங்களினால் நிரூபிக்க முயல்வார்கள். எல்லோரும் காணும்படி ஒரு மேடையில் தங்களின் திறமைகளைக் காண்பிப்பார்கள். தெய்வீக சுகமளிப்பது யேசுதான். இயேசு கிறிஸ்து தனது வேளை வரும்போது சுகமளிக்கின்றார். ஆனால் இந்த ஊழியர்கள் அவர்களின் மேடையில் நடைமுறையில் (in a practical manner) நிரூபிக்க முயல்வார்கள். தெய்வீக சுகம் பெறாதவர்களின் விசுவாசம் குன்றிவிடுகிறது. கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை அவரின் வல்லமை மூலம்தான் நிரூபிக்கவேண்டும். இயேசு கிறிஸ்து எந்த நேரத்திலும் அற்புதமோ சுகமோ அளிப்பார். நாம் விரும்பும் நேரத்தில் அவர் செயல்பட அவர் நமது கைப்பாவை அல்ல. நாம் அவரின் வல்லமையை நடைமுறையில் நிரூபிக்கக்கூடாது. இன்று நமது கூட்டங்களில் அற்புதம் எதிர்ப்பார்த்து நடக்கமால் போனால் அந்த மக்களின் தேவன்மேலுள்ள விசுவாசம் நாளடைவில் குறைந்துவிடும்.

போதகர்கள் விரும்பும் நேரத்தில் பரிசுத்தாவியானவர் அற்புதமோ சரீர சுகமோ அளித்தால் தேவ மகிமை அந்த போதர்களுக்குத்தான் போகும். சிலருக்கு அற்புதமோ சரீர சுகமோ கூட்டங்களில், இயேசுவின் நாமத்தில் கிடைக்கலாம். ஆனால் இவ்விதமாக அற்புதங்கள் சுகங்கள் கிடைக்காத ஆயிரக்கணக்கான மக்களின் விசுவாசம் பாதிக்கப்படும். ஆகவே எல்லா வியாதிஸ்தர்களுக்கவும் ஜெபித்து அனுப்பிவிடவேண்டும். அற்புதம் கிடைத்தவர்களை உடனே மேடைக்கு அழைத்து சாட்சி சொல்ல வைப்போமானால், அந்த மகிமையானது தேவனுக்குப் போகாது. அந்த ஊழியர்க்குத்தான் போகும்.

இந்த ஊழியர்களின் நடைமுறைகள், முதலாம் நூற்றாண்டிலும் அதன்பின்பு வந்த தலைமுறைகளில் வாழ்ந்து, ஊழியம் செய்து, தேவனின் ராஜ்யத்தில் பிரவேசித்த பரிசுத்தவான்களின் வாழ்க்கைக்கும், ஊழியங்களுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. இந்த போதகர்கள், கிறிஸ்துவின் மகிமையை திருடுகிறார்கள். அப்போஸ்தலர் காலத்தில் அற்புதங்களோ, சரீர சுகங்களோ, தெருக்களிலும் தேவ ஆலயங்களிலும் சுவிசேஷம் பிரசிங்கப்படும்போது நடைபெற்றன.

சுவிசேஷம் அறிவித்து, அற்புதத்திற்காகவும் சரீர சுகத்திற்காகவும் ஜெபித்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கவும். ஜெபித்தவுடன் சுகம் கிடைத்தால் அவர்களது சாட்சியை உடனே மேடைக்கு வந்து பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயம் செய்யவேண்டாம். அற்புதங்களையோ, சுகங்களையோ பெறாத எண்ணற்ற மக்களை ஆண்டவரை மாத்திரம் நம்பும்படி போதிக்கவேண்டும். அவர்கள் ஆண்டவரை முழு இருதயத்தோடு நம்பும்போது, அல்லது அவர்கள் பாவமன்னிப்பு பெற்று ஆண்டவரோடு ஒப்புரவாகும்போது ஆண்டவர் அவர்களுக்கு அற்புதமோ தெய்வீக சுகமோ நிச்சயம் அளிக்கிறார்.

அந்த எண்ணற்ற மக்களின் விசுவாசம், ஜெபித்தவுடன் அற்புதம், சுகம் பெற்ற சில மக்களின் விசுவாசத்தைவிட மிகவும் மேலானது.

பிசாசு பிடியிலிருந்து விடுதலைப்பெற்ற வாலிபனைப்பார்த்து இயேசு சொல்கிறார் "நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

" (மாற்கு 5:19-20).

குணமடைந்த குஷ்டரோகி, "புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான்" (மாற்கு 1:45).

அற்புதம், தெய்வீக சுகம் பெற்றவர்கள் தாங்களே மற்றவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கவேண்டும். அவர்களை நாம் வற்புறுத்தி மேடைக்கு அழைப்போமானால் நாம் ஏற்கனவே இதை முன்கூட்டியே உடன்பாடு (set) செய்து மற்றவர்களை நம்பும்படி ஒரு நாடகம் நடத்துகிறோம் என்று புறமதத்தார் நினைக்கக்கூடும். ஆகவே அற்புதம், தெய்வீக குணம், பெற்றவர்கள் தாங்களாகவே சாட்சி பகிர்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்தவேண்டும். அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப்போய், தங்களின் சாட்சியைப் பறை பறை சாற்றுவது மிகவும் நல்லது. அப்போது அநேகர் இந்த அற்புதங்களைக்கேட்டு சுவிசேஷம் கேட்க முன்வருவார்கள். சுவிசேஷம் அறிவிப்பவனுடைய முக்கிய பணி பிரசிங்கிப்பது தான். தன்னுடைய கையின் மூலமாக நடந்த அற்புதங்களைப் பறை சாற்றுவதல்ல. 

ஆண்டவரின் மகிமையைத் திருடுவதும், அற்புதம், தெய்வீக குணம் உடனே கிடைக்காத எண்ணற்ற மக்களின் விசுவாசத்தைக் குலைப்பதும், கொள்ளையடிப்பதற்கு சமமாகும். ஆகவேதான், Pragmatic ஊழியரை ஒரு கொள்ளைக்காரரைப்போல் பண்ணியன் வர்ணிக்கிறார்.

Let us not do our evangelical ministry in a pramatic manner. நமது ஊழியங்களை நடைமுறையில் நிரூபித்து செயல்பட வேண்டாம்.

சத்தியத்திற்கான தைரியத்தின் சில பொருட்களை கொள்ளையர்கள் களவாடி சென்றுவிட்டனராம். இன்று நாமும் நமக்கு கிடைத்த கல்வாரியின் தரிசனத்தையும், நமக்கென்றுள்ள தேவ அழைப்பையும், நமது பணத்தையும், கொள்ளையடிக்கும்படி நிற்கிறோம். இந்த ஊழியர்கள் நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற வழிநடத்தாமல், வெறும் அற்புதத்தை மாத்திரம் இயேசுவின் நாமத்தில் காண்பித்து அவர்களின் பணத்தையோ, விசுவாசத்தையோ, தேவன்மேலுள்ள அன்பையோ கொள்ளையடிக்கும்படி விட்டுவிடுகிறார்கள். அந்த மத்தியஸ்தர் ஊழியர்களின் ஜெபங்களினால்தான் ஆண்டவர் அற்புதம் செய்கிறார்; ஆண்டவர் அந்த ஊழியர்களைத்தான் அதிகம் நேசிக்கிறார்; இயேசு தங்களை நேசிக்கவில்லை; தங்களின் ஜெபங்களைக் கேட்க மாட்டார் என்ற தப்பான எண்ணத்திற்குள் வழி நடத்தப்படுகிறார்கள். எந்த பிரச்சனை வந்தாலும் அந்த ஊழியர்களின் அலுவகங்களுக்குத் தொடர்பு கொள்ளுகிறார்கள். 

இந்த மூன்று விதமான கொள்ளையர்களிடம் நம்மை காக்கவேண்டுமானால் எருசலேம் பட்டயத்தை எடுத்து, அப்போஸ்தலர்களின் நாட்களில் நடந்த ஊழியங்களையும் பிரசங்கங்களையும் செய்யவேண்டும். இந்த தேவ ஊழியர்களை வஞ்சித்த கள்ள தீர்க்கதரிசியின் (False Prophet) ஆவியிலிருந்து நாம் தப்பி, ஏமாற்றம் அடைந்த மக்களை ஒளிமயமான நகரத்திற்கு (Celestial City) கொண்டுசெல்லவேண்டும். அடுத்த அத்தியாத்தில் எழுதிய Inchanted Ground (வசியம் நிறைந்த பூமி) என்ற கட்டுரையை படிக்கவும்.  

தொடர்ந்து படிக்க ...வசியம் நிறைந்த பூமி (Inchanted Ground)