அழகிய மாளிகையில் கருணை ஊழியக்காரி

Home

முந்திய பகுதி.......அழகிய மாளிகையில் நடக்கும் பணிகள்

ஜான் பண்ணியன் கருணை ஊழியத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். Charity என்ற பதத்தை உபயோகிக்கிறார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இந்த அழகிய மாளிகையில் நடக்கும் எல்லா பணிகளும், அன்பினால் நடைபெறும் பணிவிடை ஊழியங்கள்தான்! இன்று நமது சபைகளில் நடக்கும் எல்லா ஊழியங்களிலும் அன்பு இல்லாததுதான்! மனிதர்களிடம் அன்பு செலுத்தாத தேவ ஆராதனைகள்! வெறும் பாட்டிலும், கீத வாத்தியங்களினாலும் தேவன் பிரியப்படமாட்டார்! தேவனை நேசிக்கிறோம் என்று கீதங்கள் பாடி, ஆலயத்திற்கு வெளியே பிட்சை எடுப்பவரிடம் அன்பு காண்பிக்காமல் போய்விடுகிறோம்.

நான் ஒரு செய்தி படித்தேன். டெல்லியில் சில வாலிபர்கள் எல்லாரும் சேர்ந்து தெருக்களில் பிட்சை எடுத்து, போதைப்பொருளுக்கு (Drug abuse and addiction) அடிமைகளாக தெருக்களில் வாழும் பிள்ளைகளுக்கு தனி இடங்கள் வாடைகைக்கு எடுத்து பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறார்கள். அருகேயுள்ள உணவங்களுக்குச் சென்று அங்கே மீதியாகும் உணவை இந்த பிள்ளைகளுக்கு அளிக்கிறார்கள். இவர்களுக்குள்ளே திறனை வளர்ச்சிசெய்து (Skill development) கடைகளிலோ ஷோரூம்களிலோ வேலைக்கு அமர்த்துகிறார்கள். இவர்கள் ஒரு Face Book group மூலம் இந்த பணியைத் தொடங்கினார்கள். இந்த வாலிபர்களைப்போல் நமக்கு தரிசனம் கிடைத்திருக்கிறதா? நமது அன்பில்லாத ஆராதனைகளெல்லாம் தேவனை பிரிபயப்படுத்துமா? இந்த வாலிபர்கள் எல்லாம் கருணையினால் இந்த மகத்தான பணி செலுத்தும்போது, நாமோ நமது சபைக்கு கட்டிடம் கட்டவேண்டும் என்று அங்கும் இங்கும் ஓடி பணம் சேகரிக்கிறோம்!

சென்னை பட்டிணத்தில் ஒவ்வொரு தெருக்கும் ஒரு சபை! சபை அவசியம் தான்! எதற்கு அவசியம் என்றால் சபைக்கு வெளியே உள்ள மக்களுக்கு கருணை காண்பித்து ஊழியம் செய்வதற்குத்தான்!

ஒரு அருமையான போதகர் தன் சொந்த குடும்பத்தையே தியாகம் செய்து ஒரு சபையை நடத்தி வந்தார். பணத்தின் மேல் எந்த பற்றோ கிடையாது. தனது சரீரத்தைக்கூட கவனியாமல் தன் சபையை குறித்த கவலை தான். ஆனால் தன் சபைக்கு சொந்தமாக நிலம் வாங்கி, கட்டிடம் கட்டவேண்டும் என முனையும்போது ஆதி அப்போஸ்தலர்களின் நடபடியில் பரிசுத்தாவினவர் எப்படி கிரியை செய்தார் என்ற சத்தியத்தை அறியாமல், ஆண்டவர் தான் வழிநடத்தினார் என்று ஏமாந்துபோய் ஒரு அவிசுவாசியுடன் உடன்பட்டு ஒரு நிலத்தை வாங்க பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்துபோனார். இந்த ஏமாற்றம் அவரது குடும்ப வாழ்க்கையையும் சரீரத்தையும் பாதித்தது.

நமக்கு நியாத்தீர்ப்பு வரும்போது, "நான் உங்களை அறியேன், அக்கிரமக்கார்களே, என்னை விட்டு விலகிப்போங்கள்" என்று இயேசு சொல்வார்.

"அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்" (மத்தேயு 25:41-43).

நமக்கு கிடைக்கும் இடம் பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினிதான்!

நாம் எத்தனை சபைகள் ஆரம்பித்திருக்கிறோம், எத்தனை மக்கள் நமது கூட்டங்களில் வந்து சுவிசேஷம் கேட்டார்கள் என்று ஒருபோதும் கேட்கமாட்டார்! எனென்றால், சுவிசேஷம் அறிவிப்பது நமது கடமை அன்றோ! சுவிசேஷம் அறிவித்து, கருணை பணியில் தவறுவோம் என்றால் நமக்கு மோட்சம் கிடையாது!

நம்மால் இயன்றதை செய்யலாம் அல்லவா? அந்த டெல்லியிலுள்ள வாலிபர்களை நினைவு கூறுங்கள். ஏழை எளியவர்கள், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களை தேடிப் போங்கள்! அங்கே தான் உங்களுக்கு தேவ ஆராதனை இருக்கிறது! தசம பாகம் வாங்கும் சபையா? உங்கள் சபையிலுள்ள ஏழை விசுவாசிகளுக்கு இந்த பணத்தைக் கொடுங்கள்! பின்பு தெருக்களில் போய் பிட்சை எடுக்கும் மக்களுக்கு உணவு கொடுங்கள்! தெருக்களிலுள்ள பிள்ளைகளை ஆலயங்களுக்கு கூட்டிவந்து இரவு அல்லது சாயங்கால வகுப்புக்கள் நடத்தி அவர்களை அரவணையுங்கள்!

தமிழ்நாட்டில் ஒரு அறிமுகம் இல்லாத ஊழியர் நாற்பது வருடங்களாக கந்தல் பொருட்களை பொறுக்கி தங்கள் பொழைப்பு நடத்திவரும் (rag pickers) ஏழை மக்களுக்கு உண்ண உணவு அளித்து, சுவிசேஷம் அறிவித்து, ஒரு அசைவாடும் சபையை (Mobile church) தெருக்களில் நடத்தி வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக 300 ஆட்களுக்கு உணவு அளித்துவருகிறார். இவர் தனது ஊழியத்தை facebook ன் மூலமாகவோ CDக்களை வெளியிட்டோ பிரபலம் படுத்தவில்லை. இவருக்கென்று ஒரு சபை கட்டிடமோ, மேடையோ இல்லை. எல்லாமே தெருக்களில் தான். இதுதான் ஒரு புதிய ஏற்பாட்டின் மாதிரி சபை. இந்த ஊழியரின் (Marquise Daniel) மார்கிஸ் தானியேல் என்பதாகும். "ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்,அவர்கள் ஜனங்களுக்காகத் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்" (எசேக்கியேல் 44:11). "இன்று நாங்கள் அபிஷேகிக்கப்படட தேவ ஊழியர்கள், சபை மக்கள் பலி பீடத்தில் தசம பாகம் வைத்து எங்களுக்கு சேவை பண்ணவேண்டும்", என பழைய ஏற்பாட்டின் வசனங்களை எடுத்து கூறும் போதகர்கள் அறியவேண்டிய வசனம்! இலர்கள் முதலாவது பணிவிடைக்காரராயிருப்பார்கள். அதாவது மக்களுக்கு ஊழியம் செய்யும் பணிவிடைக்கார்கள்! பின்பு தான் ஜனங்களுக்காகத் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தும் ஆசாரியர்கள். பணிவிடை ஊழியங்கள் உங்கள் சபையில் இருக்கிறதா? சபை மக்களிடம் பணத்தை பிடுங்கி ஆண்டவரின் பலிபீடத்திலுள்ள தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் அபகரித்து உங்களுக்கே எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா! தேவ கோபாக்கினைக்குத் தப்பிக் கொள்ள வேண்டும்!

தொடர்ந்து படிக்க..அழகிய மாளிகையிலிருந்து விடை பெருதல்