Previous: ஒரு சிறிய அறையினுள் இரணடு சிறுவர்கள்
சுவற்றின் ஓரமாக நெருப்பு எரியும் ஒரு அறை
பொருள்கூறுபவரின் வீட்டில் கிறிஸ்தியானை பொருள்கூறுபவர்
மற்றொரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு சுவற்றின் ஓரமாக நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. ஒரு மனிதன் அந்த நெருப்பின்மீது வாளி வாளியாகத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான். ஆனால் அந்த நெருப்போ அணையவில்லை! இன்னும் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது!
ஏன் நெருப்பு அணையவில்லை? என்று வியப்புடன் கேட்டான் கிறிஸ்தியான். இந்த நெருப்புத்தான் மனிதனுடைய இருதயத்தில் செயல்படும் ஆண்டவருடைய கிருபை. தண்ணீரை ஊற்றுபவன் சாத்தான். ஆனால் இதோ பார், நெருப்பு இன்னும் பிரகாசமாகவும், மிகுந்த வெப்பத்துடனும் எரிகிறது! அதற்கு என்ன காரணம் தெரியுமா? என்று கூறிய பொருள்கூறுபவர் கிறிஸ்தியானை சுவற்றின் மறு பக்கம் அழைத்துச் சென்றார்.
அங்கே ஒருவர் கையில் எண்ணெய்க் குடவையை ஏந்தியவராய் தொடந்து எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தார். இவர்தான் கிறிஸ்து. அவர் ஊற்றும் எண்ணெய் தான் அவருடைய கிருபை. அவருடைய பிள்ளைகளின் மனதில் தொடர்ந்து ஊற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் சாத்தானின் செயல்கள் அழிக்கப்படுகின்றன. அவர் ஏன் சுவற்றின் மறுபக்கம் நிற்கிறார் தெரியமா? அவருடைய கிருபையைப் பற்றிச் சந்தேகப்படுகிறவர்களால் அவரைக் காணமுடிவதில்லை என்று விளக்கம் கூறினார் பொருள்கூறுபவர்.
கற்றுக்கொள்ளும் பாடம்
சாத்தான் துன்பங்களை விளைவித்து சந்தேகங்களை மனதில் உண்டாக்கி இருதயத்தில் தண்ணீர் ஊற்றி பரிசுத்தாவினவரின் கிருபைகளை மங்கி எரியச் செய்வான். ஆதலால் சுவிசேஷகர் மிகுந்த பாரத்தோடும் கண்ணீரோடும் சுவிஷேசம் அறிவிக்க வேண்டும்.
Next..... கவசம் தரித்த நான்கு பலவான்கள்