#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். ரசிகர்கள் மேல் நம்பிக்கை வைத்து அப்படியொரு வித்தியாசமான முயற்சியாக லெஸ்கோ படம் உருவாகியுள்ளது. இப்படத்தை க்ளோபல் விஷன் என்ற புதிய திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஒன் நைன்!
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்கும் வித்தியாசமான கதைக்களமும் காட்சிகளும் மனதை உலுக்கும் வகையில் படத்தில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கார்த்திக் ராஜ், ஜனனி, ராபர்ட் அந்தோனி, M.G.அபிநயா, ஷ்ரவ்னிதா, அரவிந்த் சுந்தர், சேது டார்வின், ராகுல் டிக்கி உள்பட பலர் நடித்துள்ளனர்