சுகமளிக்கும் ஊழியமும் தீர்க்கதரிசன ஊழியமும்

Home

எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி

சுகமளிக்கும் ஊழியமும் தீர்க்கதரிசன ஊழியமும்

ஏசாயா 39ம் அதிகாரத்தை தியானிக்கவும்.

நோயிலிருந்து குணமாகிய எசேக்கியா அரசன் தேவனது பார்வையில் நலமானதை செய்யத் தவறி தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் உள்ள எல்லா பொருட்களையும் பாபிலோன் அரசனின் ஆட்களுக்குக் காண்பித்தவுடன், ஏசாயா தீர்க்கதரிசி அரசனுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைக்கிறான். முந்திய தீர்க்கதரிசனம் அரசனை குணமாக்கியது. ஆனால் இரண்டாவது தீர்க்கதரிசனமோ : "சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தையைக் கேளும்:

"இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்

நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்".

அரசனின் பதிலை கவனிக்கவும். "நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்".

நாம் சுகமடையும் வேதவசனங்களை மாத்திரம் விரும்புகிறோம். சரீர சுகமளிக்கும் ஊழியர்களுக்கு மாத்திரம் கனம் கொடுக்கிறோம். நமது மீறுதல்களைச் சுட்டிக்காட்டி நமது வழியை செவ்வைப்படுத்தும் தீர்க்கதரிசன ஊழியர்களை உதாசீனப்படுத்துகிறோம்.

"கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான்"! கர்த்தருடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம். ஒரு பக்கம் ஆசிர்வதிக்கும், சரீர குணமளிக்கும் வரங்கள், ஆனால் மறுபுறமோ நம்மை கண்டித்து தப்பான உபதேசங்களிலிருந்து விலக்கி நம்மை பாதுகாக்கும் தீர்க்கதரிசன ஊழியம்.

I கொரி 12:28 ன் படி "தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்"

அற்புதங்களை செய்யும் அல்லது ஆவிக்குரிய வரங்களளின் மூலம் நடைபெறும் ஊழியங்களுக்கு ஆண்டவர் கொடுக்கும் இடம் அல்லது வரங்கள் நான்காவது தான். அதாவது தீர்க்கதரிசன ஊழியர்களுக்கு கீழேதான்.

எழுப்புதல் எப்போது?

வேதத்தின் அடிப்படையில் இரண்டு விதமான ஜெபங்கள்

புல்லான ஊழியமும் தேவ வசனமும்

தேவனுக்கு மனித ஆலோசனையும், போதகமும்

பரிசுத்தாவியானவரின் ஊழியம்

நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய மாதிரி ஜெபம்

எழுப்புதலும், கொரோனா தொற்று வியாதியும்