பாபிலோனிய அரசின் வீழ்ச்சி 

ஏசாயா 21ம் அதிகாரத்தின் தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்து பார்ப்போம்

 

பயங்கரமான தேசமாகிய வனாந்தரம் என்று குறிப்பிடுவது மகா பயங்கரமான நதிகள் குளங்கள் அடங்கி சமூத்திரமாக காட்சியளிக்கும்  தேசமாகிய பாபிலோனிய நாட்டைத் தான்.

 

உலகை ஆண்ட  பாபிலோனிய நாடு ஒரு அரசியலும் மதமும் கலந்த ஒரு சாம்ராஜ்யத்தை குறிப்பிடுகிறது. இது தேவனது பார்வையில் ஒரு விழுந்துபோன ராஜ்யம். உலகத்தோடு வேசித்தனம் செய்து உறவு வைத்து  பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடாக மாறின  ஒரு தேசம் (வெளி , அதிகாரம் 18).

 

இந்த பாபிலோனிய நாட்டை, ஏலாம், மேதியா என்ற நாடுகளின் அரசர்கள் (பாரசீக நாடு) முற்றிக்கை செய்யப்பட செய்து  தேவன் தண்டிக்கிறார்.

 

இந்த அழிவை அறிந்த ஏசாயா தீர்க்கதரிசி அழுது புலம்புகிறான்.

 

உலகத்தில் கடைசியாக ஆண்டவரின் கோபத்தால் தண்டிக்கபடுவது பாபிலோனிய சாம்ராஜ்யம். அசீரிய, எகிப்திய எத்தியோப்பிய நாடுகளை விட வல்லமை பொருந்தியதும், உலகத்தையே ஆட்டி ஆளும் அரசான பாபிலோனிய ராணி ஒரே நாளில் அழிக்கப்படுகிறாள். கிறிஸ்துவின் மணவாட்டியான சபை இந்த மகா வேசியின் பிடியிலிருந்து தப்பி வரவேண்டும். கிறிஸ்துவின் மணவாட்டி வஞ்சிக்கப்பட்டு இந்த விழுந்தபோன  ராஜ்யத்துடன்  உறவு வைத்துக்கொண்டு இருக்கிறாள்.

 

தூமாவின் பாரம், அரபியாவின் பாரம்......பாபிலோனிய நாட்டை தவிர வேறு இரண்டு தேசங்களும் தேவனால் தண்டிக்கப்படுகிறது.