பரிசுத்தாவியானவரின் ஊழியம் 

எச்சரிப்பின் தீர்க்கதரிசன  தொனி


ஏசாயா, Chapter 42

1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

சத்திய ஆவியானவரின் குரலை வீதியிலோ, உரக்க சத்தமிட்டு தன்னை பின்பற்றும்படி அறைகூவும் சத்தமோ அல்ல.

அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணைக்கவே மாட்டார். எந்த ஊழியம் அவரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் செயல்படுகிறதோ அந்த ஊழியம் நெரிந்த நாணல் அல்லது மங்கி எரிகிற திரி! நமது கண்களுக்கு பிரகாசிக்கும் தீபமாக காணப்படும். இயேசு இந்த ஊழியத்தை தனது தோட்டத்தில் தான் வைத்து இருக்கிறார். அது தன் காலம் முடியும் வரை அங்கேதான் இருக்கும். பயிர்ச் செடியோடு களையும் வளரும். களைகள் அவர் தோட்டத்தில் வளரத்தான் செய்யும். அவருடைய நாமத்தில் களைகளும் வளரும்.

இயேசுவின் நியாயம் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை பதறுவதுமில்லை... அவருடைய வேதத்திற்க்கு கீழ்ப்படியும் மக்கள், அடைக்கப்பட்ட தீவுகளில் தங்களை பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்தி, சத்தியத்திற்கு வழி நடத்துவார். ஆங்கிலத்தில் இவர்கள் remnant என்று அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு கூட்டம்.

இயேசுவை பின்பற்றும் கூட்டம் சிறயது தான்.

ஏமாற்றப்படுவது ஒரு பெரிய கூட்டமே.

தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் (Elect) வஞ்சிக்கப்படும் காலம்.

இன்று கூட்டம் கூட்டமாக தங்களின் குருடான கண்களையுடைய (வேதத்திற்க்கு புறம்பான காரியங்களுக்கு நேராக இழுத்துச் செல்லும் கிறிஸ்தவ தலைவர்களை, கண்மூடித்தனமா) பின்பற்றும் மக்கள் அறியாமை என்ற பள்ளத்தில் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தீபகற்பமான, தங்கள் உள்ளில் வாசிக்கும் பரிசுத்தாவியானவரை அவித்துப்போட்டு, அந்தி கிறிஸ்துவின் ஆளுகைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். வேதம் என்ன சொல்கிறது, இப்படி எழுதப்பட்டிருக்கிறதா என்று இயேசுவின் வார்த்தைகளை தேடிப் பார்ப்பது கிடையாது.

#அந்திக்கிறிஸ்து #கள்ளப்போதனை #கொரோனா #ஜெபம் #இயேசுவின்மாதிரிஜெபம்


Next page