புல்லான ஊழியமும் தேவ வசனமும்

எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி


தியானிக்கவும் ஏசாயா 40 :6-8 பகுதியை ....

"பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது".


எல்லா ஊழியங்களையும் பரிசோதிப்பது கர்த்தரின் ஆவி தான். கர்த்தர் தன் பரிசுத்தாவியின் மூலமாக நமது ஊழியங்களை சோதிக்கிறார். புதிய ஏற்பாட்டின் கீழுள்ள ஊழியங்கள் கிறிஸ்துவின் சட்டதிட்டங்களுக்கும், அப்போஸ்தலர் உபதேசத்திற்கும் உட்பட்டுத்தான் இருக்கவேண்டும். மோசேயின் ஊழியத்திற்கு ஒப்பிட்டு பார்க்கவேக் கூடாது. மோசே வனாந்தரத்தில் முப்பது லட்ச மக்களை வழிநடத்தினான். இன்று இதே போல இலட்சக்கணக்கான மக்களை எந்த ஒரு தனி ஊழியனும் வழி நடத்தவே முடியாது. இயேசுவின் நாமத்தில் எந்த ஊழியமும் செய்தால், தேவ வசனமே பரிசுத்தாவியானவரின் மூலமாக சோதிக்கும். அப்படியே வழிநடத்துவதாக இருந்தால் அந்த ஊழியனின் பெரிய நிறுவனம் மூலான சொந்த முயற்சியால் தான். மாமிசமான ஜனத்தின் மேல் ஆளுகை செய்யும் புல்லை போலான ஊழியம் நாளைடைவில் உதிர்த்து போகும். ஆனால் தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும். நாம் தேவ வசனம் என்ன சொல்லுகிறது என்று வேதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எப்படி ஜெபிக்கவேண்டும் என்றும், எப்படி உபவாசிக்கவேண்டும் என்றும் எப்படி தர்ம ஊழியங்கள் செய்யவேண்டும் என்றும் நமக்கு இயேசுவே தன் வாயின் மூலம் திருவுளம் பற்றியிருக்கிறார்.

Next.....