தேவனோடு நேரிடையான ஜெபம் 

ஏசாயா 35-36ம் அதிகாரங்கள்  ஒரு சரித்திர சம்பவத்தை வெளிப்படுத்துகிறது. ஆண்டவர் எசேக்கியா ராஜாவை அசீரியா ராஜா சனகெரிப்பின்  கையிலிருந்து காப்பாற்றி பெருமை பிடித்த அசீரியா ராஜாவையும் அவனுடைய ராணுவத்தையும் எப்படி அழித்தார் என்று அறியலாம். 36ம் அதிகாரத்தில் எசேக்கியா ராஜா ஆண்டவரின் சமூகத்திற்கு முன்பு பண்ணின விண்ணப்பத்தை தியானிக்கலாம். "சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.. கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். ..இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்".  எசேக்கியா ராஜாவிற்கு பதில் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக வந்தது.

 

நாம் அறிந்துகொள்ளவேண்டிய தீர்க்கதரிசன பாடம் என்னவென்றால் துன்பத்தில் இடுக்கண் வரும்போது நாம் நேரிடையாக ஆண்டவரிடம் நமது இருதயத்தை ஊற்றி விண்ணப்பம் பண்ணவேண்டும். உங்களுக்கும் ஆண்டவருக்கும் நடுவில் ஒரு மூன்றாம் ஆள் அவசியமில்லை . வேறு ஒரு intercessor உங்களைப்போல இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்க முடியாது. எசக்கியா ராஜா விண்ணப்பத்தை முடித்தவுடன்தான் ஏசாயா தீர்க்கதரிசி தேவனின் பதிலை உரைக்கிறார்.