கர்த்தரே இரட்சிப்பு 

Previous  ஆசிரியரின் தண்டாயுதம் 




ஏசாயா 12 அதிகாரத்தை தியானிப்போம். இந்த அத்தியாயம் சில முக்கியமான சத்தியங்களை அடக்கியுள்ளது.

 

"அக்காலத்தில்" என்று குறிப்பிடுவது இந்த காலத்தை தான். அதாவது இயேசுவின் இரத்தத்தின் மூலம் இரட்சிப்பு கிடைக்கப்பண்ணி  பரிசுத்தாவியானவரை நமக்கு அருளப்பண்ணின இந்த காலம் தான். பழைய ஏற்பாட்டின் காலத்தில் கோபமாக இருந்த கர்த்தர் இந்த புதிய ஏற்பாட்டின் காலத்தில் நம்மை தேற்றுகிறார்.

 

"தேவனே என் இரட்சிப்பு" என்ற ஏசாயா உரைத்த திர்க்கதரிசனம் இந்த காலத்தில் நிறைவேறுகிறது. இது இயேசுவை இரட்சகராக ஏற்றுகொண்ட ஒரு தேவ பிள்ளையின் அறிக்கையாக இருக்கவேண்டும். இன்று நாம் ரட்சிக்கப்படுகிறோம், ரட்சிக்கப் படுவோம் என்று கூறி வருகிறோம். ஆனால் "தேவனே என் இரட்சிப்பு...நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்" என்று அறிக்கை செய்கிறோமா?

 

கர்த்தர் பாவத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் இரட்சிப்பு அருளுகிறார் என்று அறிவோம். ஆனால் "தேவனே என் இரட்சிப்பு...நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்" என்று அறிக்கை செய்யும்போது ஆவியானவர் நம்மில் வாசம் செய்கிறார் என்ற சத்தியத்தை அறிந்து கொள்கிறோம், கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம் (1 கொலோசெயர் 1: 27).

 

உங்களுக்குளே கிறிஸ்துவின் சுகமளிக்கும் வல்லமையும், விபத்துகள் நோய்கள் எல்லாவற்றிலுமிருந்து இரட்சிக்கும் வல்லமை இருக்கிறது. உங்களின் சரீரமாகிய மண்பாண்டத்தில் இந்த பொக்கிஷத்தை பெற்று இருக்கிறீர்கள். . உங்களில் வாசமாயிருக்கும் அவரோடு உறவாடி ஐக்கியம் வைத்துக்கொள்ளவேண்டும்.

 

நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.

 

இந்த இரட்சிப்பின் ஊற்றுக்கள் உங்களுக்குள் இருக்கிறது. உங்களில் வாசமாயிருக்கும் கிறிஸ்துவே இந்த ஊற்றுக்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து வரப்பண்ணுகிறார். யாரும் உங்களுக்காக ஜெபித்து இந்த இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து தண்ணீர், அதாவது உங்களுக்கு வேண்டிய இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களை நீங்களே மொண்டுகொள்வீர்கள். உங்களை அந்நிய பாஷைகளில் பேசவைத்து ஆவியானவரை வரவழைத்து உங்களுக்கு அவரின் பிரசன்னத்தை கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. பரிசுத்தாவியானவர் ஒரு ஆள் தத்துவம் உள்ளவர். வெறும் வானத்திலிருந்து இறங்கி வரும் வல்லமை அல்ல

 

"சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்".

 

உங்களது கூடாரமோ இந்த உலகில் இல்லை. சீயோனில் தேவனோடு வாசம் பண்ணுகிறீர்கள். ஆகவே நீங்கள் சத்தமிட்டுக் கெம்பீரிக்கலாம். உங்களில் வாசமாயிருக்கும் இஸ்ரவேலின் பரிசுத்தர், மற்றவர்கள் உங்களை காணும்போது அவர் உங்கள்  நடுவில் பெரியவராயிருக்கிறார்.


உங்களது கூடாரமோ இந்த உலகில் இல்லை. சீயோனில் தேவனோடு வாசம் பண்ணுகிறீர்கள். ஆகவே நீங்கள் சத்தமிட்டுக் கெம்பீரிக்கலாம். உங்களில் வாசமாயிருக்கும் இஸ்ரவேலின் பரிசுத்தர் மற்றவர்கள் உங்களை காணும்போது அவர் உங்கள் நடுவில் பெரியவராய் காட்சியளிக்கிறார். 


கர்த்தரே இரட்சிப்பு!  அவரின் இரட்சிப்பின்  செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள். கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், 


அவர் "மகத்துவமான கிரியைகளைச் செய்தார்" என்ற தீர்க்கதரிசனம் ஒரு நடந்து முடிந்த கிரிகைகளளை குறிக்கின்றது. உங்களது வாழ்க்கையில் நடக்கப்போகும் காரியங்களை பற்றி அறிவிப்பது ஒரு காரியம். ஆனால் நடந்து முடிந்தது என்று விசுவாசிப்பது மேலான காரியம்   


 நீங்கள் இந்த சத்தியத்தை அறிந்துகொண்டால் விடுதலை அடைவீர்கள்.



Next.....Isaiah13  பாபிலோனின் மேல் வரும் நியாயத்தீர்ப்பு