உலக மக்களின் மேல் தேவகோபமும் தேவமக்களின் ஆசிர்வாதமும்

ஏசாயா 34ம் அதிகாரம் உலகத்திலுள்ள எல்லா மக்களின் மேல் வரும் தேவக்கோபத்தையும் அழிவையும் காண்பிக்கிறது.

 

உலக யுத்தம், கலவரம், போன்றவைகளால் கொலைகள் நேரிடும்.  கிறிஸ்துவின் வருகைக்கு முன்பு இவைகள் அதிகரிக்கும். இவைகளின் பயங்கரத்தை தீர்க்கதரிசி உவமானங்களால் விவரிக்கிறார்.   "கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம்". மலைகள் கரைந்துபோம் என்பது ஒரு உவமானம். உண்மையாகவே  இரத்தத்தினால் கரைந்துபோகாது.

 

வானங்களின் மூலம் அழிவு

 

"வானத்தின் சர்வசேனையும்" என்று குறிப்பிடுவது வான மண்டலங்களில் சுற்றி வரும் பல நாடுகளின் ஆகாயத்து யுத்த விமானங்களும், விண்வெளி sattelites போன்ற பறக்கும் எந்திரங்களை குறிக்கும். யுத்த சமயத்தில் ஆயுதவிமானங்கள் கீழே விழுந்து நொறுங்கும். "அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்". வானங்கள் திறக்கப்பட்டு பெருமழை பெய்து அழிவை உண்டுபண்ணுகிறது. வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டுவது ஒரு உவமானம்.

 

"வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது" என்பது வானத்தின் மூலம் அழிவுகள் நேரிடுவது தேவனின் பட்டயம் வெறிகொள்வதினாலே. (1-5)

 

யாகமும், மகாசங்காரமும்

 

"போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு". ஏதோம் நாட்டார் யூத மக்களின் விரோதி. போஸ்றா என்ற இடம் ஆடுமாடுகள் வளர்க்கும் இடம். இங்கே ஆடுமாடுகள் பழைய ஏற்பாட்டிலன் காலத்தில் பலி செலுத்தப்பட்டது. ஆனால் ஏதோம் தேசத்தில் தேவன் தனது கோபாக்கினையை வெளிப்படுத்தினார்.

 

இந்த காலத்தில் தேவமக்கள் ஜெபங்கள், ஆராதனைகள் போன்றவைகளை பலியாக ஆண்டவரின் சமூகத்தில் ஏறடுக்கும்போது, அவர்களுக்கு விரோதமாக எழும்பும் ஏதோம் தேசத்தாரை ஆண்டவர் சங்காரம் செய்கிறார். அந்த  சங்காரம் மிக கொடிதாக இருக்கும் என்பதை "காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும்" என்ற உவமானத்தால் ஆவியானவர் விவரிக்கிறார்.

.

"அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்". தேவமக்களை துன்புறுத்திய ஏதோமியாரை பழிவாங்கும் நாள். தேவமக்களின் விரோதிகளை சங்காரம் செய்ய ஒரு நாளை ஆண்டவர் சீயோனில் வாசமாயிருக்கும் தேவமக்களுக்கு ஆண்டவர் நியமித்து வைத்திருக்கிறார். தேவ பிள்ளையே, பொறுமையுடன் ஆண்டவருக்கு காத்திரு. தேவன் உனக்கென்று யுத்தம் பண்ணுவார். ஒரு வருடத்திற்குள் உனக்கு நீதி கிடைக்கும் (6-8). 

 

மோவாபியரின் ஆசிர்வதிப்பின் இருப்பிடங்களை தேவன் எப்படி அழிப்பார் என்பதை அழித்து அவைகளை தரைமட்டமாக்க மாற்றுவார் உவமானங்களால் ஆண்டவர் விவரிக்கிறார். அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறுவது ஒரு உவமானம். "இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை". மோவாபியரின் இருப்பிடங்கள் வெறுமையாக்கப்படும் என்பதை காட்டுமிருகங்கள் அங்கே குடியிருக்கும் என்ற உவமானத்தால் விவரிக்கப்படுகிறது (9-11).

 

தேவன் மோவாபியரை சங்காரம் செய்து அவர்களின் இருப்பிடங்களை அழிக்கும்போது அவர்களின் மேன்மக்களின்  :ராஜ்யபாரம்பண்ண ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்". சர்வாதிகாரிகள் ஆட்சியில் எப்போழுதும் நிலைத்திருப்பதில்லை. எதை விதைத்தார்களோ அதையே சர்வாதிகள் அறுவடை செய்வார்கள். அவர்களின் நிரந்தர அழிவை ஆவியானவர் அருமையான உவமானங்களால் விவரிக்கிறார். "அரமனைகளில்" முட்செடிகள்,  கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும் என்பது அந்த மக்கள் எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற உவமானம். காட்டு மிருகங்கள், ஓரிகள், சாக்குருவிகளுள் அவர்களின் தேசத்தில் இளைப்பாறும், வல்லூறு கூடுகட்டும் என்பவைகள்  உவமானங்கள் ஆகும். ஆனால் அவர்கள் யேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது இந்த நிரந்தர ஆக்கினையிலிருந்து தப்பிக்கொள்ளலாம் (12-15).

 

கர்த்தருடைய புத்தகம்

 

"கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்".  கர்த்தரின் ஆவியானவர் அவரின் தீர்க்கதரிசன புத்தகத்தில் அவர் எவ்விதம் தமது சொந்த ஜனங்களை இரட்சிக்கிறார் என்பதை பற்றியும், தேவனுக்கு கீழ்ப்படியாமல் பின்வாங்கிப்போகும் தேவமக்களின் மேல்வரும் தேவனின் தேவனின் நியாயத்தீர்ப்பை  பற்றியும், தேவமக்களை விரோதிக்கும் உலகத்தரை எப்படி தண்டிக்கிறார் என்பதை பற்றியும் பல இடங்களில் எழுதி வைத்திருக்கிறார் என்றும் அறியவேண்டும். அவைகளை தேடி வாசிக்கும்படி நம்மை எச்சரிக்கிறார். அவரின் வார்த்தையை ஒரு கோணத்தில் படித்து பிரசங்கம் செய்யக்கூடாது. இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது. இணைக்கப்படும் வசனங்களை தேடி அவைகளை ஒன்றாக சேர்த்துப் படிக்கவேண்டும். வெறும் ஆசீர்வாத வசனங்களை மாத்திரம் படித்து இதுதான் தேவனின் செய்தி என்று கூறக்கூடாது. "அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்" (16).

 

"அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்".

 

தேவமக்களுக்கு ஆண்டவரின் ஆசிர்வாதம்

 

"அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்".  ஆண்டவர்தாமே தம்மை உண்மையாக தேடும் மக்களுக்கு வேண்டிய ஆசிர்வாதத்தை முன்குறித்து அளவுநூலால் அளந்து  பகிர்ந்து கொடுக்கிறார். பேராசை மூலம் இந்த உலக சம்பாத்தியங்களை தேடவேண்டாம். உங்களின் இந்த ஆசிர்வாதம் தலைமுறை தலைமுறையாக சஞ்சரிக்கும். உங்களுக்கு ஆண்டவர் உலக பொருட்களால் ஆசிர்வதிக்கும்போது அவைகளை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கவேண்டும். அப்போது உங்களூக்கு தேவன் கொடுத்த ஆசிர்வாதம் தலைமுறை தலைமுறையாக நிலைத்துநிற்கும் (17).