கிழக்கிலிருந்து அழைக்கப்பட்ட ஒரு தனி தேவமனிதன் 

ஏசாயா 41ம் அதிகாரத்தில், தேவனைவிட்டு விக்கிரவழிபாடு செய்து தூரமாக போன தேசங்களை தீவுகளே என்று தேவன் அழைக்கிறார். "தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்".

அவர்களை அவருக்கு முன்பாக மவுனமாயிருக்க கட்டளையிடுகிறார். பின்பு தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு அவரது நியாயாசனத்துக்கு முன் வர கட்டளையிடுகிறார்.

அந்த தேசங்களை கிழக்கிலிருந்து ஒரு நீதிமானை எழுப்பி அந்த நாடுகளை நியாயம் விசாரிக்கிறார். கிழக்கு தேசம் என்றால் ஆண்டவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும்  ஒரு கூட்டத்தார். இந்த தேவனை அறியாத ஜாதிகளை கலக்கும்படி ஆண்டவருக்கு பயப்படும் கிழக்கிலிருந்து  ஒரு நீதிமான் போதும். அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி, அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணுகிறார் பண்ணினவர். ஆண்டவர் இந்த நாட்களில் தேடிவருவது ஒரு தனிப்பட்ட மனிதனையே. ஒரு திரளான கூட்டத்தை அல்ல  (1-3).

கிழக்கு தேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனி மனிதனை நோக்கி ஆண்டவர் இவ்விதம் உரைக்கிறார் ....

"என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,

நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்". நீ தான் ஆண்டவரின் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததி. உன்னை பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எடுத்து தேச எல்லைகளிலிருந்து அழைத்துவந்திருக்கிறார். நீ அவரின் தாசன். எந்த மனிதனுக்கோ, சபைக்கோ, நிறுவனத்திற்கோ அடிமை அல்ல.

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்". தனி மனிதனாக இந்த உலகத்தை எதிர்த்து நிற்க பயப்படாதே. தேவன் உன்னுடனே இருக்கிறார். அவர் உன் தேவன். உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவார். அவரின் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவார். அவரின் நீதியால் நீ ஆட்சி செய்வாய். நீ பணிபுரியும் இடத்தில் அவரின் நீதியின் வலதுகரம் வெளிப்படும்.

"இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்". உனக்கு விரோதமாக போராடினவர்கள் இல்லாமல் போவார்கள். அவர்களை தேடியும் காணாதிருப்பாய்.

"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்". கர்த்தர்  உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறார். இந்த உலகத்தாரின் கண்களில் நீ ஒரு பூச்சியைப்போல காட்சியளிக்கக்கூடும். ஆனால் நீ யாக்கோபு என்னும் பூச்சி தான். இஸ்ரவேலின் சிறுகூட்டத்தை சேர்ந்தவன் தான்.  பூச்சியாக கருதப்பட்ட உன்னை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து கனம் பண்ணுவார். பிரபுக்களோடும் ராஜாக்களுடன் அமர செய்வார். இவர் தான் உன் தேவன் (8-14).

"அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.

தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து",  அந்த தனி மனிதன் மூலமாக தேவன் தன் திட்டங்களை நிறைவேற்றுகிறார். அவனை ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைத்து அவனை முந்தினவராயிருக்கிற தேவமனிதர்களோடு ஒப்பிட்டு  பிந்தினவனான அவனுக்கு ஒரு சிறப்பு மிக்க இடத்தைக்கொடுக்கிறார்.

"ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்". அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ மனிதன்  தேவனை அறியாத மக்களை சகோதரர்களாக பாவித்து திடப்படுத்துகிறான்.

"சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான். தங்கள் கைகளால் செய்யும் தொழில்களில் உண்மையாக இருக்கும்படி உற்சாகப்படுத்தி அவர்களின் திறனை பெரிதாக்கி உதவுகிறான் (Skill development) (4-7).