எழுப்புதலும், கொரோனா தொற்று வியாதியும்

எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி


எழுப்புதல் எப்படி வரும்? சமீபத்தில் உலகில் பரவிவரும் கொரோனா தொற்று வியாதியின் மூலம் சபைகளில் எழுப்புதல் வந்ததா? உண்மையாகவே எல்லா தேசங்களிலும் கிறிஸ்தவ மக்கள் இந்த வியாதிக்கு பயந்து தேவனை தேடி வந்தனர் இன்னும் தேடி வருகினர். ஆனால் எது எழுப்புதலா? எழுப்புதல் ஆரம்பிப்பதற்க்கு இந்த தேவ பயம் கண்டிப்பாக உதவும்.

எழுப்புதலுக்கு முதல்படி கீழ்ப்படிதல்,. விசுவாசிகளாக இருப்பவர்கள் இயேசுவின் சீடர்களாக மாறவேண்டும், இயேசுவின் சீடர்கள் யார்? இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சீடர் ஆவதுதான். மேலறையில் கூடி இருந்த 120 பேர்கள் இயேசுவின் சீடர்களே. பேதுரு பிரசங்கித்தபோது சபையில் அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (Acts 2:40-41). அப்போது பேதுரு கூறினதாவது

"மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். இன்று நம் மத்தியிலும் மாறுபாடுள்ள சந்ததியார் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டுப்பிடித்து விலகவேண்டும். இவர்களோடு இணைந்து ஜெபித்தால் பிரயோஜனம் இல்லை.

முதலாவது சபை சரித்திரத்தில் எழுப்புதல் எப்போது வந்தது? இந்த எழுப்புதல் பேதுருவும் பதினொருவர் மூலமாகத்தான் தான் ஆரம்பித்தது. எழுப்புதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரங்கள் இயேசுவை பின்பற்றும் சீடர்கள் தான். அவர்களுடைய செய்திகளினாலும், ஜெபங்களினாலும் மாத்திரம் தான் எழுப்புதல் உண்டாகும். ஒரு சிறிய குழுவின் மூலமாகதாதான். ஆயிரமாயிரம் மாறுபாடுள்ள சந்ததியார்களை இணைப்பது மூலமாக கண்டிப்பாக வராது.

1904 ம் ஆண்டில் பிறந்த வேல்ஸ் நாட்டு எழுப்புதலை பற்றி நாம் கண்டிப்பாக அறிந்துக்கொள்ளவேண்டும். Evan Roberts. Roberts was not a brilliant speaker or preacher, Yet his audiences were captivated by his words "The secret of his power is that he is ‘full of faith and love and zeal and the Holy Spirit’” இவான் ராபர்ட்ஸின் ரகசியம் என்ன?. பேச்சுத் திறனால் செய்தி கொடுத்து உணர்ச்சி வசப்படுத்தி தன்னண்டை இழுக்கும் கவர்ச்சி சக்தி அல்ல!. அவர் விசுவாசத்திலும் அன்பிலும் வைராக்கியதாலும் உந்தப்பட்டு பரிசுத்தாவியானவரால் வழிநடத்தப்பட்டார்.

He was simple, plain, and unimpressive so that God might get all the credit and glory for what happened. Roberts dreaded publicity, newspaper reporters, and shunned praise and adulation.

இரண்டாவது இவான் ராபர்ட்ஸ் விளம்பரத்திற்குப் பயந்தார். மற்றவர்கள் புகழ்ந்து பாடுவதை விரும்பாதவர். தானாகவே 12 ஆண்டுகள் தனியாக ஜெபித்தாராம்.

சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் எழுப்புதல் என்ற பதம் அடிபட்டுவருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் உபவாச கூட்டம் என்பதை சில புகழ் மிக்க ஊழியர்கள் ஆரம்பித்தார்கள். ஆனால் எழுப்புதல் இன்னும் வரவில்லை. அதற்கு என்ன காரியங்கள் தடையாக இருக்கின்றது என்று அவர்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இன்று சபைகளிலோ தேசத்திலோ எழுப்புதல் எப்படி வரும். தேவவசனத்தை உதாசீனப்படுத்தி மனிதர்களை மேன்மை பாராட்டினால், தேவ மகிமை வெளிப்படாது. தீர்க்கத்தரசிகளைக் கல்லெறிந்தால் தேவனை அவமானப்படுத்துவதாகும்.

#எழுப்புதல் #கொரோன்னா #ஜெபம் #கள்ளத்தீர்க்கதரிசி #கள்ளத்தீர்க்கதரிசனம் #விளம்பரஜெபம்

Next.....