பாபிலோனிய அரசு சாத்தானின் அரசு வீழ்ச்சிகள் 

Previous ....Isaiah 13


பாபிலோனிய அரசனின் மேலும் சாத்தானின் அரசின் மேலும் தேவனின் நியாயத்தீர்ப்பும் தண்டனையும்

 

ஏசையா 14 ம் அதிகாரத்தில் சரித்திர பகுதி அடங்கியிருந்தாலும் இந்த அதிகாரத்தை தீர்க்கதரிசன கண்ணோட்டத்துடன் தியானிக்கவும்.   பாபிலோனிய அரசன் நெபுகாத்நேசர் இஸ்ரவேலரை அடிமையாக்கி சிறைப்படுத்தின போது தேவன் தன் ஜனத்தை விடுதலையாக்கி அவர்களின் சொந்த பூமிக்கு கொண்டு சென்றார் என்று சரித்திரம் கூறுகிறது. இந்த தீர்க்கதரிசனத்தில் பாபிலோனிய அரசை பின்னின்று இயக்குவது  அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியான சாத்தான் ஆகும். மகா வேசியான பாபிலோனிய ஸ்திரி அந்திக்கிறிஸ்துவைக் குறிக்கும்.

 

விழுந்து போன பாபிலோனிய ராஜ்யத்தில் தேவ மக்கள் மயங்கிப்  போய் அந்த அரசனின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறார்கள். தேவன் தன் ஜனத்தை அந்த அரசனின் கைகளில் ஒப்படைத்து அவர்களை தன் அன்பினால் இழுத்து வாக்களிக்கப்பட்ட சொந்த ராஜ்யத்திற்கு கொண்டுவர முயற்சிக்கிறார். எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வனாந்தரம் மூலமாக Promised  Land க்கு கொண்டு செல்கிறார்.

 

பாபிலோனிய அரசனையும்  சாத்தானின் ஆளுகையும் ஆண்டவர் தனது சிலுவையின் மூலம் உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;

 

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

 

துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்(கொலோசெயர் 2 அதிகாரம் 13 - 15). இந்த பிரபஞ்சத்தின் கடவுள் யாரை விழுங்கலாம் என்று கெர்ச்சித்து சுற்றிவந்தாலும் அவனிடம் வல்லமை கிடையாது. அவன் ஒரு பொய்யன். ஏமாற்றுக்காரன். அவனது ஆளுகையின் எல்லை இந்த உலகமும் பாபிலோனிய ராஜ்ஜியமும் ஆகும். சீயோனில் குடியிருக்கும் தேவ மக்கள் கிறிஸ்துவின் சிலுவையின் மூலம் அவனை மேற்கொள்ள சகல அதிகாரங்களும் பெற்று இருக்கிறார்கள். அம்மாவாசை ஜெபம் அவசியமில்லை. சத்தியத்தை அறிந்து அவனை எதிர்த்தால் போதும். அவன் ஓடிவிடுவான். இயேசுவின் நாமத்தில் அவனை துரத்தவேண்டும். நீங்கள் மற்ற ஊழியர்களை வைத்து அவனை விரட்ட முன்படும்போது நீங்கள் அவனுக்கு வல்லமை கொடுக்கறீர்கள். உங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கறீர்கள். உங்களுடன் எப்போதும் இருப்பது பரிசுத்தாவியானவர் தான். அந்த ஊழியர் எப்போதும் உங்களுக்காக ஜெபித்து சாத்தானை விரட்டிக்கொண்டிருக்க முடியாது. ஆகவே சுவிசேஷம் அறிவிப்பவர்கள் சாத்தனைக்குறித்து சத்தியத்தை விபரமாக கூறவேண்டும். பாஸ்டர்மார்களிடம் போய் கைவைத்து ஜெபித்தால்தான் விடுதலை கிடைக்கும் என்பது ஒரு தப்பான கொள்கை. நமக்கு வியாதியை கொண்டு வருவது அவன்தான் என்று வாயின் மூலம் அறிக்கை செய்தால் நீங்கள் அவனுக்கு வல்லமையை கொடுக்கறீங்க!

 

பாபிலோனிய ராஜ்ஜியத்தில் நாம் மாட்டிக்கொண்டாலும் கர்த்தர் நமக்கு இரங்கி நம்மை மீட்டுக்கொண்டு நமது தேசமாகிய சீயோனில் தாபரிக்கப்பண்ணுவார். நாம் இந்த உலகத்தில் நம்மை அடிமை படுத்தியவர்களை கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் மீட்டு நம்மோடு சீயோனில் கூட்டிச்சேர்த்து அவர்களை கிறிஸ்துவின் ஆளுகையின் மூலம் ஆளுவோம். அவர்களூக்கு குறிக்கப்பட்ட ஸ்தானத்தில் விடுவோம். (verses 1 & 2).

 

நாம் பாபிலோனிய ஆளுகையிலிருந்து விடுதலை பெறும்போது கர்த்தர் நம்  துக்கத்தையும், நம் தத்தளிப்பையும், நாம்  அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, நம்மை இளைப்பாறப்பண்ணுகிறார். நமக்கு உன்னதமானவரின் செட்டைகளின் கீழே தான் அடைக்கலமும் இளைப்பாறுதலையும் பெறுவோம். எந்த சபையின் கீழேயோ ஊழியரின் தாபரிஸ்தலத்திலோ இந்த அரவணைப்பும் பாதுகாப்போ கிடைக்காது (verse 3).

 

நான்காம் வசனத்திற்கு பின்பு பாபிலோனிய அரசன் எப்படி தண்டிக்கப்பட்டு மரித்து போனான் என்று காணலாம்.

 

பன்னிரண்டாம் வசனம் முதல் இருபதாம் வசனங்கள் வரை, எப்படி அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியான சாத்தான் பெருமையினால் வானத்திலிருந்து கீழே பூமியின் மேலே தள்ளப்பட்டு பாதாளத்தில் வந்து கடைசியாக விழுந்து, அவனால் வஞ்சிக்கப்பட்ட விழுந்த பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் அந்த பாதாளத்தில் காண்கிறான் என்று அறியலாம்.

 

இருபத்தி ஒன்றாம் வசனத்தில் விழுந்து அழிக்கப்பட்ட அவனை நம்பி மோசம் போகும் இப்போது பூமியில் வாழும் அவனது சன்னதியார் "எழும்பி தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம்பண்ணுங்கள்" என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. இது ஒரு தீர்க்கதரிசன கட்டளை. சரீரத்தில் கொலை செய்ய சொல்லும் கட்டளை அல்ல. விளக்கி கூறவேண்டுமானால், சாத்தானின் ராஜ்ஜியம் வளராமல் அதை அழித்து மக்களை மீட்கும் கடமையை  கிறிஸ்துவின் சரீரமான சபைக்கு ஆண்டவர் கொடுக்கிறார்.

 

இருப்பத்திரெண்டாம் வசனம் முதல் இருபத்தி நான்காம் வசனங்கள் வரை கர்த்தர் எப்படி இப்போது இருக்கும் ஆவிக்குரிய பாபிலோனிய ராஜ்யத்திற்கு விரோதமாய் எழும்புவார் என்றும் எப்படி சங்கீகரிப்பார் என்று அவர் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; அவர் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று கூறப்படுகிறது. " பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பௌத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்". ஆகவே நாம் இந்த பாபிலோனின் ராஜ்யத்தின் ஆளுமைக்கு  கீழே இருப்போமால், உடனே அங்கேயிருந்து வெளியேற வேண்டும். காலம் இனி செல்லாது.

 

அசீரியரின் ஆளுமை 

 

இருபத்தி ஐந்தாம் வசனத்தில் அசீரியனை பற்றி ஆவியானவர் குறிப்பிடுகிறார். அசீரியனுக்கும் பாபிலோனியருக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன. பாபிலோனியர்கள் வணிகம் வர்த்தகம் செய்பவர்கள். அசீரியர்கள் படைத்தளபதிகள் அசீரியா பாபிலோனியாவில் வட பகுதியில் இருக்கிறது. பாபிலோனிய ராஜ்யத்தில் priestood தான் முக்கியம் வாய்ந்தது.  ஆனால் அசீரியாவில் எதேச்சதிகாரம் செலுத்தும் ஒரு அரசியல் அமைப்பு இருந்தது.

 

இன்று நாம் நமது நாட்டில் காண்பது ஒரு ஒரு மத அரசியலை   ஆதரித்து நடக்கும் ஒரு எதேச்சதிகார ஆட்சி..

 

நாம் இந்த உலகத்தில் வாழும்போது ஒரு இறை ஆட்சியை  கொண்டு வரவேண்டும். நீதியும் நேர்மையுள்ள அரசியல் ஆட்சி. நமக்கு அவசியம்.  தேவ மக்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். ஆவிக்குரிய  பாபிலோனின் ஆட்சியை மாத்திரம் எதிர்த்தால் போதாது. மக்களை அடக்கி அநீதி இழைக்கும் அரசியல் ஆட்சியையும் எதிர்க்கவேண்டும். 


"அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்".


"தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.

 

சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?" (verses  26 & 27).

 

பெலிஸ்தியர் தேவ மக்களுடன் தொடுக்கும் போர்

 

வசனங்கள் 28.முதல் கடைசி வரை தியானிப்போம்.

 

யூதா தேசத்து  ஆகாஸ் ராஜா ஒரு பின்மாறினவன். அவன் பெலிஸ்தியரின் கடவுள்களை வணங்கினான். அவன் மரணமடைந்தபோது தீர்க்கதரிசன வார்த்தை உண்டாகுகிறது. ஆகாஸ் போன்ற ஊழியர்கள் தேவனுக்கு கீழ்படியாமல் பணம், புகழ், ஆடம்பரம் போன்ற அந்நிய கடவுள்களை வழிபடும்போது தேவன் அவர்களை தண்டிக்க அந்த ஊழியர்கள் ஆவிக்குரிய மரணம் அடைகிறார்கள்.

 

பெலிஸ்தியர் எப்போதுமே இஸ்ரவேல் நாட்டிற்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். இன்றும் தேவமக்களுக்கு விரோதமாக புற ஜாதி மக்கள் எழும்பி வரும்போது தேவன் இந்த பெலிஸ்தியருடன் யுத்தம் பண்ணி முறியடிக்கிறார்.  பெலிஸ்தியர் சில சமயம் தேவ மக்களை தங்களது சாத்தானின் வல்லமையினால் மேற்கொள்ளும்போது அவர்கள் மகிழ் கொண்டாட முடியாது.   "பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன்" தோன்றிவரப்பண்ணி தேவன் அந்த பெலிஸ்தியரை அழிப்பார். கர்த்தர் தன் ஜனத்தை இப்படியாக காப்பாற்றி "சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே" நமக்கு ஆறுதலின் வாக்குத்ததம்.

 

இந்த அதிகாரத்தில் நாம் கற்றுக்கொள்வது. பாபிலோனின் ராஜ்யத்திலிருந்து வெளியேறி தாமதிக்கமால் சீயோனில் குறியேறவேண்டும். இந்த உலகத்தில் அரசியல் அசீரியர் ஆட்சியை எதிர்த்து இறை ஆட்சி மலரும்படி பாடுபட வேண்டும். நமக்கு விரோதமாக செயல்படும் பெலிஸ்தியரைக் குறித்து பயப்படவேண்டாம். தேவன் நம்மை காப்பாற்றி வழிநடத்துவார். 

 

Next ......