உலக ஆசிர்வாதத்தால் பெருமை கொள்தல் 


ஏசாயா 38-39ம் அதிகாரங்கள் சரித்திரத்தை வெளிப்படுத்துகிறது. 38ம் அதிகாரத்தில், எசேக்கியா அரசன் வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான். அவனுக்கு ஆண்டவர் சுகம் கொடுத்து 15 ஆண்டுகள் கூட்டி கொடுக்கிறார்.  அடுத்த ஆதிகாரத்தில் நடந்தது என்ன? மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.

 

எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.

 

பாபிலோனிய அரசன் தேவனுக்கு விரோதமானவன். எசேக்கியா அரசன் சுகமடைந்தபின்பு அவன் தனது ராஜ்யத்திலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தது நமது கண்களில் ஒரு பெரிய குற்றம் அல்ல. பாபிலோனிய அரசனிடமிருந்து நிருபங்களையும் வெகுமானத்தையும் வாங்கியது ஒரு குற்றமாக தேவன் கருதவில்லை. ஆனால் தனது ஆணவத்தால் தனது எல்லா பொருட்களை பாபிலோனிய அரசனுக்கு காண்பித்தது தான் பெரிய பாவம். எசேக்கியா அரசனுக்கு கிடைத்த தண்டனை மிக பெரியது. " நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்" ஏசாயா தீர்க்கன்.

 

இன்று நாமும் நமது உலக பொக்கிஷங்கள், உலக ஆசீர்வாதங்களை பெருமையாக இந்த உலகத்தின் மக்களுக்கு கட்டிக்கொள்கிறோமா? ஜாக்கிரதை!