வேதத்தின் அடிப்படையில் இரண்டு விதமான ஜெபங்கள்

எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி

1. தனி ஜெபம்:-

இதில் ஒரு தனி மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பு.

"நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். (மத்தேயு 6:6).

அவரோ (இயேசு) வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார் (லூக்கா 5:26)

2.கூட்டு ஜெபம்

மற்றவர்களோடு இணைந்து பண்ணும் ஜெபம் (Corporate prayer)

"அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். (மத்தேயு 18:19-20).

ஜெபம் கேட்கப்படுவற்கு ஆயிரமாயிரம் மக்கள் இணைந்து இருந்து ஜெபித்தால் தான் தேவன் கேட்பாரோ? இல்லை.

சபையின் ஏறெடுக்கும் ஜெபம் Corporate prayer ஆகும். "அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது (அப்போஸ்தலர் 1:14)

அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்கள் (அப்போஸ்தலர் 4:23-31).

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் (அப்போஸ்தலர் 15:25)

சபை மக்கள் இணைந்து ஜெபம் செய்யலாம். விசேஷித்த காரியங்களுக்காகவும் ஜெபிக்கலாம்.

தனி ஜெபம் என்பது ஒவ்வொரு தனி மனித வாழ்வின் முக்கிய அங்கம் ஆகும். தனி ஜெபம் செய்ய தவறும் போது, சாத்தானோடும் இவ்வுலகத்தோடும் நாம் தோற்பது உறுதி.


Next.....