ஆண்டவரின் மாட்சிமை

ஏசாயா 40: 1-14 வரையான வசனங்கலின் தியான பகுதிகளை இங்கே படிக்கலாம்.

எழுப்புதல் எப்போது?

புல்லான ஊழியமும் தேவ வசனமும்

தேவனுக்கு மனித ஆலோசனையும், போதகமும்

____________________________________________________________________________________________________________ 

15-31 வரை கீழே படிக்கலாம், ஆண்டவரின் மகத்துவத்தை இங்கே காணலாம்.

 

"இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.

 

லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.

 

சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்". எந்த தேசமும் அவருக்கு முன்பாக பெருமை பாராட்டமுடியாது. அவரின் மக்களை அலட்சியம் செய்யமுடியாது. அவரின் கோபத்திற்கு முன்பு நிற்கமுடியாது.

 

"இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

 

கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.

 

அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்".


கைகளால் செய்யப்படும் விக்கிரங்களை அவரின் சாயலுக்கு ஒப்பிட முடியுமா?

 

"அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

 

அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.

 

அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்பப் பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோம்". நாம் ஆராதிக்கும் தேவன் தான் சிருஷ்டி கர்த்தா. பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர். வானங்களை பூமிக்கு மேல் பரப்பி நாம் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரித்திருக்கிறார். அவரை அலட்சியம் செய்யும் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார். தேவன் அந்த அநியாயக்கார நியாயாதிபதிகளை தண்டிக்கும்போது அவர்கள் மேலே கூறியது போல ஒழிந்துபோவார்கள்.

 

"இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.

 

உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது".  ஆண்டவரின் தூதர்களின் சேனையை நம்மால் எண்ணி பார்க்கமுடியாது. அவர் அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே. அவரின் மகா பெலத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்து நமக்கு பணிவிடை செய்வதற்காக காத்து நிற்கின்றனர். அவர்கள் எதிலும் குறையாமலிருக்கிறார்கள்.

 

"யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?". விசுவாசத்தில் சோர்ந்து போய் இப்படி கூறுகிறீர்களா?

 

தேவன் உங்களிடம் நேரிடையாக ஏசாயா தீர்க்கனின் மூலம் சொல்வது "பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.


 கர்த்தருக்காக காத்து நிற்பவர்களுக்கான வாக்குத்தத்தம்  


சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

 

இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.

 

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்".  கர்த்தருக்கென்று அநேக நாட்கள், அநேக ஆண்டுகள் கூட நம்பிக்கையோடு அவரின் அற்புதத்திற்க்காக காத்து இருக்கிறீர்களா? ஏன் என்னும் எனக்கு வழி திறக்கப்படவில்லை என்று திகைத்து, நம்பிக்கை இழந்து இருக்கறீங்களா. "வயது ஆகிவிட்டது, இனி நான் யாருக்கும் பிரயோஜனம் இல்லை" என்று எண்ணுகிறீர்களா? ஆண்டவர் அற்புதம் பண்ணும்போது நீங்கள்  புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவீர்கள்.  ஓடினாலும் இளைப்படைவீர்கள் , நடந்தாலும் சோர்ந்துபோவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்.