எகிப்தை பற்றிய தீர்க்கதரிசனம்

இந்த ஏசாயா 19ம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்து பார்ப்போம். தேவ மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் எகிப்திய சாம்ராஜ்யம் எப்படி ஆண்டவரால் தண்டிக்கப்பட்டு, பின்பு இரட்சிக்கப்பட்டு தேவ ஜனமாக மாற்றப்படுகிறது என்பதை அறியலாம்.


இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.

 

சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும், ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.

 

 அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப் பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.

 

நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

 

5 - 10ம் வசனங்களில் தேவ மக்களை துன்புறுத்தி வரும் ஆட்சியின் கீழே தேவகோபம் வெளிப்பட்டு தண்ணீர் பற்றாக்குறையால் தேசத்தில் வறட்சி ஏற்பட்டு மக்கள் துக்கம் அடைகிறார்கள். மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள். மீன் வளர்க்கிற குளங்களைக் கூலிக்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோம்.


கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்; ஆனதுகொண்டு வெறியன் வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச் செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறார்கள்.

 

எகிப்தை ஆளுபவர்களின் புத்தி மழுங்கிவிடுகிறது. "எகிப்தில் தலையாகிலும் வாலாகிலும் கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது"

 

எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவினாலே அஞ்சி நடுங்குவார்கள்.

 

சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான்".

 

"அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும்"


அந்நிய, கானான் மொழியை பேசும் ஐந்தில் ஒரு பகுதியான எகிப்திய மக்கள் ஆண்டவரை அறிந்துகொள்வார்கள்.  

 

தேவ மக்கள் தங்களை வெறுக்கும் அரசியல் செய்யும் நாட்டில் வசித்தாலும் "கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்நாட்டில் நாம் ஒடுக்கப்படும்போது கர்த்தரைநோக்கிக் கூப்பிடுகிறோம். அப்பொழுது நமக்கு  ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி நம்மையும் நமது நாட்டையும் ஒரு கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுவிப்பார். 

 

எகிப்தின் ஆட்சியை ஒழித்தவுடன் "கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள்".

 

கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடித்து குணமாக்குவார்; "அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.

 

அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள்"

 

"அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்".

 

"அவர்களைக் குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

 

எகிப்து, .அசீரியா நாடுகளின் ஆளுமைகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு தேவ மக்களோடு ஒன்றாக இணைக்கப்படுவார்கள். இது தான் ஒரு உண்மையான எழுப்புதல்.  எகிப்தியர் தேவ ஜனம். தேவ மக்களை அசீரியரின் கைகளால் ஒடுக்கி ஆண்ட கரங்கள் தேவனுடையது. நாம் தேவனுக்கு  சுதந்தரமுமாக இருப்போம்.

 

இந்த தீர்க்கதரிசன வசனங்கள் எல்லா நாடுகளுக்கும் ஜனங்களுக்கும்  எப்போதும் பொருந்தும். எகிப்தியர் அசீரியர் ஆட்சிகள் நடந்து கொண்டும், அழிந்து கொண்டும் இருக்கும்.


Next.....Isaiah20