எகிப்து எத்தியோப்பியா நாடுகளின் உதவி 

ஏசாயா 20ம் அதிகாரத்தின் தீர்க்கதரிசனத்தை தியானிப்போம்.


அசீரியா ராஜா, எகிப்து எத்தியோப்பியா நாடுகளின் மக்களை சிறை பிடித்து கொண்டு போகிறான். யூத நாடு எத்தியோப்பியா நாட்டின் உதவியை நாடுகிறது. ஏசாயா தீர்க்கதரிசி இதற்கு அடையாளமாக இருக்கும்படி கட்டளை இடுகிறார். "கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்".


யூத மக்கள் அசீரிய அரசனுக்கு பயந்து போய் எகிப்தியரின், எத்தியோப்பியாவினரின் உதவியை நாடுவதை ஆண்டவர் வெறுக்கிறார். 


அசீரிய அரசனை போல ஒரு அரசியல் பலம் வாய்ந்த அரசை எதிர்க்க நாம் ஆண்டவரை முற்றிலும் நம்பாமல் நாம் எகிப்து எத்தியோப்பியா போன்ற அரசர்களை நம்பி மோசம் போகக்கூடாது. 


நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாட்டின் அரசியலிலும் தேவ மக்கள் ஆண்டவரையே சார்ந்து இருக்கவேண்டும். இன்று நமது திருச்சபைகள் ஊழல் செய்ய, எகிப்து எத்தியோப்பியா போன்ற பண, அரசியல் சக்தி வாய்ந்த நபர்களை சார்ந்திருக்கிறது. இப்படி அவர்கள் செயல்பட்டால் அசீரியர்களின் கைகளில் விழுந்து அழிந்துபோவார்கள். பொய் கூறும் வாழக்கறிஞர்களை நாடி நீதிமன்றத்தை தன் வசமாக்கிக்கொள்ளும் பிஷப்மார்களுக்கும் சபை கமிட்டீகளுக்கும் ஐயோ.  


ஆண்டவரின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு நேராக திரும்புவோமாக