மோவாபின் பாரம்


மோவாவைப்பற்றி 15, 16 அதிகாரங்களில் சரித்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தீர்க்கதரிசன கண்ணோட்டத்துடன் தியானிக்கவும்.

மோவா போன்ற தேசத்தார் நம்முடன் இந்த உலகத்தில் வாழ்ந்துவருகிறார்கள். சரித்திரத்தில் , மோவா லோத்துக்கு பிறந்தவன். இந்த மக்கள் இவர்கள் தேவஜனமாகிய இஸ்ரவேலரை எதிர்த்து நிற்பவர்கள். இந்த தேசம் பச்சை பசையான நாடு. பார்ப்பதற்கு சீயோனாகிய கானான் தேசம் போல காட்சியளிக்கும். இது ஒரு பாழாக்க பட்ட சங்காரமான நாடு.

இவர்கள் லோத்துவை போல இந்த உலகத்தின் இச்சைகளுக்கு இழுக்கப்பட்டு ஆபிரகாமின் ஆசிர்வாதத்தை இழந்து போனவர்கள். இந்த மக்கள் உலக ஆசீர்வாதத்திற்காக நித்தியத்தை இழந்தவர்கள். தங்களது விலைமதிக்க பெற்ற ஆத்துமாவை புறக்கணிக்கிறார்கள் இவர்கள் வாழ்ந்துக்கொண்டிருப்பது பாழாக்கப்பட்ட, சங்காரமான பட்டணம் .

இந்த மக்கள் உலக ஆசீர்வாதத்திற்காக நித்தியத்தை இழந்தவர்கள். தங்களது விலைமதிக்க பெற்ற ஆத்துமாவை புறக்கணிக்கிறார்கள் இவர்கள் வாழ்ந்துக்கொண்டிருப்பது பாழாக்கப்பட்ட, சங்காரமான பட்டணம்

இங்கே "நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற்போகிறது". மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும் இழந்துவிடுகிறார்கள்.

இங்கே அலறுதலும், புலம்புதலும் எல்லா இடங்களிலும் கேட்கும் .

தீர்க்கதரிசி இந்த ஜனங்களின் நிலைமையை கண்டு அங்கலாய்க்கிறார்.

"என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது".

இங்கே "தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும். இந்த மக்களின் மேல் "அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்".

தேவனின் கோபாக்கினை இந்த மக்களின் மேல் எப்போதும் இருக்கும். இந்த தேசத்தை ஆண்டவர் ஒருபோதும் ஆசீர்வதிக்கமாட்டார்.

16 ம் அதிகாரத்தில்" தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை" பற்றி அறியலாம். இவர்களின் இரட்சிப்பு "சீயோன் குமாரத்தியின் மலையில் இருக்கின்றது.

இரட்சிக்கப்படும் தேவ மக்கள் இந்த மக்களோடு இருந்தாலும் அவர்களை மோவாபியர்கள் அழிக்க முடியாது.

"கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்". இரட்சிப்பு வருவது தாவீதின் கூடாரத்திலிருந்து தான், பாபிலோனிய அரசனிடமிருந்து ஒருக்காலும் வராது.

"மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது"

மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும் களைந்துவிட்டு தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்துவின் பக்கம் திரும்ப வேண்டும்.

தீர்க்கத்தரசி அழிந்து போகும் மோவாபியருக்காக "மிகவும் அழுவேன்......என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று" என்று அங்கலாய்க்கிறான்.

"பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் ரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்"

"ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல் தொனிக்கிறது"

"மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த ஸ்தானத்திலே பிரவேசிப்பான்; ஆனாலும் அநுகூலப்படமாட்டான்".

இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பின் அனுபவம் கிடைக்காமல் மேடைகளிலிருந்து பண்ணும் எந்த பிரார்த்தனையையும் தேவன் அங்கீகரிக்க மாட்டார்.

"மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார்த்தை இதுவே".

"ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோம்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது சொல்லுகிறார்".

மோவாபில் நீங்கள் வாசம் பண்ணினால் "மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோம்". அங்கே அதிக காலம் வாசம் செய்தால் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும்" ஆகவே உடனே மனம்திரும்பி சீயோன் குமாரத்திகள் வாழும் மலைக்கு ஏறி செல்லவும். அங்கே தான் தாவீதின் சிங்காசனத்தில் வீற்று இருக்கும் கிறிஸ்துவை கண்டு இரட்சிப்பு அடைவீர்கள்.