சீயோன் குமரத்திகளின் மேல் நியாயத்தீர்ப்பு

Previous Isaiah2

Isaiah3


ஏசாயா 4 ம் அதிகாரத்தை தியானிப்போம். முந்தின அதிகாரத்தில் சீயோன் குமரத்திகளின் மேல் நியாயத்தீர்ப்பு எதற்காக வருகிறது என்றும் எப்படி வருகிறது என்றும் படித்தோம்.

இந்த கடைசி நாட்களில் சீயோன் குமரத்திகளில் "ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்". ஆண்டவரால் நியாயம் தீர்க்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சீயோன் குமாரத்திகளில் ஏழு தேவபிள்ளைகள் அவர்கள் தங்களின் நிந்தை நீங்க ஒரு ஊழியனை தெரிந்துக்கொண்டு "நாங்கள் இனி யாருடைய போதகத்தை நம்பி மோசம் போகாமல் எங்களுக்கு ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொண்டு நடப்போம். நீ எங்களை வழிநடத்தினால் போதும்" என்பார்கள். அதாவது ஒரு (ஏழு பேர்கள்) சிறிய கூட்டமாக ஆண்டவரைத் தேடி ஒரு கறைபடாத ஊழியனை தலைவனாக ஏற்படுத்திக்கொள்வார்கள்.

இந்த மனம்திரும்பிய சிறிய கூட்டத்தார் தான் இஸ்ரவேலிலிருந்து தப்பினவர்கள். இவர்கள் கறைபட்டிருக்கும் பாபிலோனிய ஊழியங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு, ஒரு சிறிய குழுவாக ஜெபித்து, வேதத்தை ஆராய்ந்து பார்த்து அவர்களின் மத்தியிலிருந்து ஒரு தாழ்மையுள்ள ஊழியனை தெரிந்தெடுத்து தேவ பணி செய்வார்கள். எல்லா அங்கத்தினரும் சமமாக இருந்துகொண்டு ஊழியம் செய்வார்கள். தங்களுக்கென்று பதவிகளை வைத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களே ஒருவரை தெரிந்தெடுத்து அந்த ஊழியனின் பெயரில் ஊழியம் செய்வார்கள். இவர்கள்தான் கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருப்பார்கள்; இவர்களின் வாழ்க்கை இயேசுவின் மகிமையை வெளிப்படுத்தும். பூமியின் கனி இவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். இவர்களின் பணிகளின் மூலம் பூமி தன் கனியைக் கொடுக்கும்.

இந்த (remnant) தப்பிக்கப்பட்ட கூட்டத்தார் தங்களுக்கென்று பெயர்களையோ புகழையே தேடமாட்டார்கள். அவர்கள் நடத்தும் சபைகளும், பலவிதமான ஊழியங்களும் தேவனுக்கு மாத்திரம் மகிமை கொண்டு வரும். ஏழு பெயர்கள் என்பது ஒரு சிறிய சரீர வடிவத்திலுள்ள கூட்டு ஊழியம் (body ministry). அந்த குழுவில் உள்ளவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒருங்கிணைந்து ஒரு மகிமையான ஊழியத்தை செய்வார்கள். அவர்களை வழிநடத்தும் ஊழியனின் பேர்மாத்திரம் அந்த தேவ பணியாளர்களின் மேல் இருக்கும். அந்த leadership பொறுப்பில் இருக்கும் ஊழியனும் அந்த ஏழு எண்ணை கொண்ட குழுவில் ஒரு அங்கத்தினர்தான். இது ஒரு சபையாகவோ அல்லது சுவிசேஷ ஊழியமாகவோ இருக்கலாம்.

ஏழு என்ற எண் பூரணத்தைக் குறிக்கிறது. இது ஒரு ஏழு நபர்கள் கொண்ட குழுவோ சபையோ கிடையாது. ஆனால் முகம் முகம் அறிந்து தங்களை ஒவ்வொருவரும் நன்கு அறிந்து கொண்ட ஒரு கூட்டம்.

"அப்பொழுது, ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,

சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்".

இந்த கூட்டத்தார்கள் தான் சீயோனிலிருந்து மீட்கப்பட்ட மீதியான தேவமக்கள். இவர்களின் குடியிருப்பு ஆவிக்குரிய எருசலேமில் இருக்கும். இவர்கள் ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவர்கள் என்றும் பரிசுத்த கூட்டார் என்றும் அறியப்படுவார்கள்.

இந்த சிறிய குழுக்களின் மூலம்தான் சபைகள், ஊழியங்கள் சுத்திகரிக்கப்படும். சபைகளின் ஊழியங்கள், சுவிசேஷ ஊழியங்களின் மூலமாக உண்டான கறைகள், அக்கிரமங்கள், மன்னிக்கப்பட்டு ஒரு பெரிய சுத்திகரிப்பு நடக்கும்.

"அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும் அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.

பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்".

இந்த அடையாளங்கள் தான் ஒரு உண்மையான எழுப்புதலுக்கு நம்மை வழிநடத்தும். சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும் அதின் சபைகளின்மேலும் ஒரு கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தைக் காண்போம்.

நாம் இஸ்ரவேலின் சரித்திரத்தைப் படித்துப் பார்ப்போமானால் தேவன் கடைசியாக ஒரு சிறு கூட்டத்தாரையே கானான் தேசத்திற்கு வழி நடத்தினார். ஆயிரமாயிரம் ஆண்டவரை பின்பற்றிய மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு சிறிய 120 பெயரின் குழுதான், மேல் அறையில் பரிசுத்தாவியானவருக்கென்று காத்திருந்தனர்.

இவர்கள் மேல் எந்தவிதமான குற்றங்கள் காணமுடியாது. பணத்தை நம்பி ஊழியம் செய்யமாட்டார்கள். வெறும் "நல்ல செய்திகள்" அல்லது பேச்சு சாமர்த்தத்தினால் ஊழியம் செய்பவர்கள் அல்ல. வெறும் அற்புதங்களை காண்பித்து தங்களை மேன்மை பாராட்டமாட்டார்கள். சாட்சிகளை வைத்து தங்கள் ஊழியங்களை மிகப்படுத்தமாட்டார்கள். மறைந்திருந்து ஊழியங்கள் செய்து தேவனுக்கு மாத்திரம் மகிமையை கொண்டுவருவார்கள்.

இந்த கூட்டத்தார்கள் மூலம்தான் உலக மக்களுக்கு ஆத்துமாவை சுட்டெரிக்கும் பாவ வெயிலுக்கு கிறிஸ்துவின் நிழல் கொடுப்பார்கள். உலக துன்பங்கள் மழை போல வந்தாலும் ஒரு பாதுகாப்பு கூடாரம் கொடுக்கிறார்கள்.

இவர்களே தங்களின் ஊழியர்களின் எல்லா காரியங்களையும் செய்வார்கள். இவர்களுக்கு உதவும் மனிதர்கள் இவர்களுடன் சக ஊழியர்களாகவே இருப்பார்கள்.

Next.....Isaiah5