தேவனின் நியாயத்தீர்ப்பு 

ஏசாயா 24ம் அதிகாரம் தேவன் எப்படி  இந்த உலகத்தை தனது நியாயத்தீர்ப்பினால் தண்டித்து வருகிறார் என்பதை கவனிக்கலாம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவன், தேவனின் கட்டளைகளை மீறின  யூத மக்களையும்,  விக்கிரங்களை வழிபட்டு வந்த யூதர் அல்லாதவர்களையும், உடனுடனே தண்டித்து வந்தார். இந்த புதிய ஏற்பாட்டின் காலத்தில் கிறிஸ்துவை மறுதலித்து புறக்கணித்த மக்களையும், கிறிஸ்துவை மறுதலித்து வரும் தேவமக்களையும்,  துன்மார்க்கத்தாரையும் தண்டித்து வருகிறார். பலவிதமான துன்பங்கள், நோய்கள், விபத்துக்கள், இயற்கை பேரழிவுகள் மூலமாக "தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிகளைச்" சிதறடிக்கிறார்.

 

ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும், வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும், எல்லாருக்கும் சரியாக நடக்கும்.

 

கர்த்தர் எல்லா மக்களையும் சமமாகவும் நீதியோடும் நடத்தி வருகிறார். யாருக்குமே பட்சபாதம் காண்பிப்பதில்லை.

 

இந்த உலகமே ஆதாம் ஏவாளின் பாவத்தால் சபிக்கப்பட்டுவிட்டது. "தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.

 

தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்". 

 

மோசே மூலமாக கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களை மீறி நடந்ததால் "சாபம் தேசத்தைப் பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்"( 5-6)

 

7 - 13 வரை படித்து மக்கள் எப்படி வாதிக்கப்பட்டு, பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

 

இந்த துன்பங்கள் மத்தியில் தேவ மக்கள்  சத்தமிட்டுக் கெம்பீரிக்கவேண்டும்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிக்கவேண்டும்.

 

"ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள். (14-15).

 

நாம் கர்த்தரின் நாமத்தை மகிமை படுத்தவேண்டும். 

 

ஏசாயா தீர்க்கன் புலம்புகிறான்" நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ,  இளைத்துப்போனேன் இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம்பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள்" .

 

"......தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

 

அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.

 

தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.

 

வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோம், இனி எழுந்திராது (16-20).

 

"அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.

 

 அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.

 

அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்" (21-23)

 

ஆண்டவரின் இரண்டாம் வருகையில் . உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார். அதற்கு முன்பாக மக்களை கொடூரமாக ஆட்சி செய்து வரும் எதேச்சை அரசர்களை கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்பட்டு வருவார்கள். இது எல்லாக்காலத்திலும் நடந்து வருகிறது.

 

நாம் இப்போதே நமது தேவன்  சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகை செய்வதை விசுவாசக்கண்களால் காணவேண்டும். நாம் தேவனுடைய மூப்பர்களாக இந்த உலகத்தில் வாழும்போது தேவனின் மகிமை வெளிப்படும்.