எத்தியோப்பியாவை நாடாதே 

ஏசாயா 18ம் அதிகாரத்தின் தீர்க்கதரிசன வார்த்தைகளை ஆராய்ந்து பார்ப்போம்.

 

சரித்திரத்தை  ஆராய்ந்து பார்த்தால் எத்தியோப்பியா ஒரு வல்லமையுள்ள தேசம் என்றும் இந்த தேசம் எகிப்தை ஆண்டதாகவும் காணலாம். இந்த தேசம் ஆசிரிய நாட்டை வெறுத்ததால் யூத அரசு எத்தியோப்பியா அரசிடம் உதவி கேட்டு ஆசிரிய நாட்டை எதிர்க்கின்றது

 

தேவ மக்களான நாம் அறிந்து கொள்ளவேண்டிய தீர்க்கதரிசனத்தை தியானிப்போமாக.

 

எத்தியோப்பிய நாடு யூத நாட்டை துரிதமாக செயல்படும் தூதுவர்களை தங்களிடம் அனுப்ப வேண்டிக்கொள்கிறது. ஆனால் தேவன் எத்தியோப்பிய நாட்டின் உதவியை யுத மக்கள் ஏற்றுக்கொள்வதை விரும்பவில்லை எத்தியோப்பியா என்பது மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதி. யூத மக்கள் இந்த ஜாதியோடு எந்தவிதமான தொடர்பு வைக்க தேவன் விரும்பவில்லை .

 

பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.

 

நாமும் இதுபோல தேவன் வெறுக்கும் சன்னதியோடு தொடர்பு வைக்கக்கூடாது. நாம்தான்  மலைகளின்மேல் சிலுவை கொடி ஏற்றி சுவிசேஷமான எக்காளம் ஊதவேண்டும்.

 

 தேவன் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், அவரின்  வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குகிறார்.

 

நமது திராட்சை தோட்டங்களை ஆராய்ந்து பார்த்து "திராட்சச்செடிகள் அறுப்புக்குமுன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிற காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளை யரிந்து" அகற்றிப்போடுகிறார். நமது கனிகள் சரியாக காய்க்க முடியாமல் பிஞ்சாயிருக்கும்போதே இருக்கும்போது அவற்றை அகற்றிப்போடுகிறார். பட்சிகள் மிருகங்கள் மூலம் அழித்துவிடுகிறார். அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும். எந்த புறஜாதியை தேவன் வெறுத்தாரோ அந்த ஜாதியை இக்காலத்தில் கிறிஸ்துவின் சிலுவை மூலம் யூத மக்களாகிய நம்முடன் ஒன்றாக இணைத்து அவர்களை  சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படுகிறது.

 

நாம் சரியாக கனி கொடுக்காவிட்டால், நாம் அறியாத,  இயேசுவை சமீபத்தில் அறிந்து கொண்ட புறஜாதி மக்களின் மூலம் பெரிய காரியங்களை செய்வார்.

 

நாம் இந்த உலகத்தின் ஆசிர்வாதத்தை தேடி அரசியல் செல்வாக்கு, அல்லது மற்றும் சமூக செல்வாக்கு வகிக்கும் புறஜாதி மக்களிடம் போய் அவர்களது இருப்பிடங்களில் தொங்கி கொண்டு இருக்கிறோமா?

 

 

 Next....Isaiah 19  எகிப்தின் பாரம்