ஏசாயா தீர்க்கனின் எச்சரிப்பின் தீர்க்கதரிசன  தொனி

Home

நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்

ஏசாயா 1 அதிகாரத்தை ஒவ்வொரு வசனமாக தியானிப்போமாக.

ஏசாயாவின் புத்தகம் தான் முதலாவது தீர்க்கதரிசன புத்தகம். இதில் எழுதியிருக்கிற ஒவ்வொரு எச்சரிப்பும் கிறிஸ்துவின் சரீரமான சபைக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவின் சரீரமான சபையிலுள்ள மக்களாகிய நாம் நமது எஜமானின் குரலை கேட்காமால் இந்த அழிவின் காலத்தில் உணர்வில்லாமலும் இருக்கிறோம். மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும். நாமோ, நமது சபைகளின் தலைவர்களோ, சுவிசேடகர்களோ, தங்களுக்கு வருமானம் குறைந்ததனால், தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படாமல் இருக்கும்போது, எப்போது சபைகள் திறக்கப்படும், தாங்கள் சபை மேடைகளிலிருந்தும், அல்லது சுவிசேட கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஆவலோடு இப்போது online மூலமாக தேவமக்களை ஜெபிக்க தூண்டி வருகின்றார்கள். நாம்தான் இந்த தேவ நியாயத்தீர்ப்புக்குக் காரணம் என்று இதுவரை அறிந்துக்கொள்ளவில்லை. அறிந்துக்கொள்ளவும் விரும்புவது இல்லை. தாங்கள் செய்துவரும் ஊழியங்கள் புதிய ஏற்பாட்டின் சத்தியத்திற்கு உட்பட்டதா என்று ஆராய்ந்து பார்க்காமலே, தேவ மக்களை ஜெபம் பண்ணச்சொல்ல ஏவுகிறார்கள்.

நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; என்று 15ம் வசனத்தில் கூறுகிறார்.

"ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.

"இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.

உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது" என்று கூறுகிறார்..

நாம் எவ்வளவு கத்தி கூக்குரல் இட்டாலும், நமது ஜெபத்தை ஆண்டவர் ஏற்றுக்கொள்ளமாட்டாராம். ஏனெனில் நமது கைகள் இரத்தத்தினால் கறைபட்டு இருக்கிறதாம். நாம் கொலை செய்திருக்கமாட்டோம். ஆனால் இரத்தம் வேர் வடித்து ஏழை மக்கள் சம்பாதித்த பணத்தையும், திக்கற்ற பிள்ளைகளுடமிருந்தும், விதவைகளிடமிருந்தும் தசம பாகம், ஊழியத்திற்கு உதவி என்று வற்புறுத்தி வாங்கி, கட்டிடங்கள், வெளிநாடு ஊழியம், television ஊழியம், உல்லாச வாழ்கை, சொகுசு வாகனங்கள், தேவன் படைத்த மலையை மக்களின் பணத்தின் மூலம் வாங்குவது போன்ற காரியங்களுக்கு செலவழித்து இருந்தால் தண்டனைக்கு எப்படித் தப்பிக்கொள்வோம்?

தேசத்தின் நன்மையை புசிக்கிறோமா. அல்லது தேசத்தின் கொடூரங்களை அனுபவிக்கிறோமா...

நமது பாவக்கறையுள்ள கைகளை கழுவிச் சுத்திகரிப்போமாக. இனிமேலாவது பிறரது பணத்தையோ சொத்தையோ இட்சியாமல் இருப்போமாக.

நமது கிரியைகளின் பொல்லாப்பை தேவனின் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயவேண்டுவோமாக;

எதிர்த்து நின்றால் கர்த்தரின் பட்டயத்திற்கு இறையாவோம். ஜாக்கிரதை. மனம் திரும்புவோம்.

இன்று ஒரு சிறு கூட்டத்தாரையே சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியாக வைத்திருக்கிறார். இல்லாவிட்டால் நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.

தேவ வசனத்திற்கு கீழ்ப்படியாமல் தங்கள் சுயசித்தத்தில் சபைகளை அல்லது ஊழியங்களை ஆரம்பித்து தேவமக்களை வழிநடத்துகிற தலைவர்களை ஆண்டவர் "சோதோமின் அதிபதிகளே" என்று அழைக்கிறார், "கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்" என்று தேவ வசனத்தை தியானிக்காமலே, தங்கள் தலைவர்கள் நடத்தும் பாதைகளில் நடக்கும் ஆயிரமாயிரம் மக்களைப்பார்த்து தேவன் இவ்விதம் கூறுகிறார்.

தேவ வசனத்திற்கு நேராக திரும்புவோம். தொலை காட்சிகள், யூடியூபில் வரும் செய்திகளை தேவசனத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கவும். அப்படியே நம்பவேண்டாம்.

நம்மை கடைசிகால கொடிய தோற்று நோய்களிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்க ஒரே வழி தேவ வசனத்தின் சத்தியத்திற்கு கீழ்ப்படிவதுதான். கிறிஸ்தவ தலைவர்களோடு இணைந்து ஜெபிப்பதானால் அல்ல.

ஏசாயா தீர்க்கனின்எச்சரிப்பின் தீர்க்கதரிசன  தொனி - 2 கர்த்தரின் மகிமையான தாபரஸ்தலம் (Isaiah 11)

எழுப்புதல்