மனம் திரும்புதலின் உண்மையான ஜெபம்

மனம் திரும்புதலின் உண்மையான ஜெபம் ஒரு உயிர்மீட்சிக்கு வழிநடத்துகிறது.

 

எரேமியா 3ம் அதிகாரத்தில் தன்னை விட்டு அந்நிய தேவர்களை வழிபட்டு வேசித்தனம் பண்ணிய இஸ்ரவேல், யூத நாட்டு மக்களை மனம் திரும்பி தன்னிடம் திரும்பிவர அழைப்பு விடுத்தும் அவர்கள் திரும்பிவரவில்லை என்று தேவன் அங்கலாய்க்கிறார்.

 

"சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.

 

குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே.

 

இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.

 

எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்".

 

இன்றும் நாம் இஸ்ரவேல், யூத மக்களைப்போல உலக சிற்றின்பங்களுக்கு அடிமையாகி, உலகத்தோடு விபச்சாரம், வேசித்தனம் செய்து தேவனை விட்டு தூரமா போயிருக்கிறோம். அவரது வசனத்திற்கு கீழ்ப்படியாமல் கள்ள தீர்க்கத்தரசிகளுக்கு கீழ்ப்படிந்து  நமது தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம். கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம். நமது  சீர்கேடுகளைக் குணமாக்க தேவன் காத்திருக்கிறார். "இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்" என்று அறிக்கை செய்து முழு இருதயத்தோடு அவரிடம் திரும்புவோம். "இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்". இதுபோல நாம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படவேண்டும். நமது சபைகளிலிருந்தும் ஜெபக்கூட்டங்களிலிருந்தும் அழுகையின் சத்தம் கேட்கப்படவேண்டும். "நான் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தேன். நீரே என் தேவனாகிய கர்த்தர்" என்று அறிக்கை செய்வோமா. "ஆண்டவரே, இவர்களின் பாவத்தை மன்னியும்" என்று அநேகர் மன்றாட்டின் ஜெபம் என்ற பெயரில்  மற்றவர்கள் காணும்படியாக ஜெபக்கூட்டம் நடத்திவருகிறார்கள்.  இது ஒரு மாயமாலம் ஜெபம். சுய நீதியின் ஜெபம். "பிதாவே, இவர்களை மன்னியும் அல்லது இவர்களின் பாவத்தை மன்னியும்" என்று கிறிஸ்து மாத்திரம் ஜெபிக்க தகுதி பெற்றிருக்கிறார். நமக்கு விரோதமாக மற்றவர்கள் பாவம் செய்யும்போது நாம் அவர்களை மன்னிக்கவேண்டும். அவர்களை மன்னிக்காமல் தேவனிடத்தில் ஜெபம் பண்ண அவசியமில்லை.  ஆனால், சுகவீனமாக இருக்கும் மற்ற மக்களுக்காக நாம் பரிந்துரை செய்து தாராளமாக ஜெபிக்கலாம்.