வணிகத்தை பற்றி தீர்க்கதரிசனம் 

ஏசாயா 23ம் அதிகாரத்தில் தீரு, சீதோன் நகரங்களை குறித்த தீர்க்கதரிசங்களை ஆராய்ந்து பார்ப்போம். 


வர்த்தகத்தில் சரித்திர புகழ் வாய்ந்த பட்டினங்கள். இன்று உலகமே மனிதாபிமானத்தை புறக்கணித்துவிட்டது. ஒருவரை ஒருவர், வெட்டி வீழ்த்தும் எண்ணமும், செயலும் அதிகரித்து விட்டன. இதற்கெல்லாம் காரணம், மனித நேயம், சகிப்புத் தன்மை இல்லாதது தான். சக மனிதனையும், மனிதனாக மதித்து, அவன் உள்ளத்தை புரிந்து, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே, மனிதாபிமானம். வர்த்தகமே இந்த உலகநாடுகளின் முதல் இடம்.

 

சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி தீருவை நிரப்பினார்கள்.

 

இன்று வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களும் ஆளும் அரசர்களின் கிரீடங்கள் தரித்திருக்கிறார்கள்.


தேவன் இந்த பிரபுக்களை ஏசாயா தீர்க்கனின் மூலமாக தீர்க்கதரிசனம் உரைத்து சபித்து விட்டார். வியாபார கப்பல்கள், மீன் வளங்கள், பூமியின்  விளைச்சல்கள், பயிர் வகைகள், அறுவடைகள், வருமானம் எல்லாமே சபிக்கப்பட்டவைகள். இவர்களின் மூலம் தேவ மக்களுக்கு உண்மையான ஆசிர்வாதம் கிடைக்காது. கைகளால் உழைத்து, பிழைப்புக்காக வர்த்தகம் செய்து, மிதமிஞ்சிய  லாபம் இல்லாமல், கூலிக்காக வேலை பார்க்கும்  தொழிலாளிகளுக்கு. வருமானத்தில் ஒரு பகுதி கொடுத்து, அரசாங்கத்திற்கு வரி செலுத்தி நியாயமான வழிகளில்  சம்பாதிக்கலாம்,

 

"சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் யாவரையும் கனஈனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார்".

 

கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார். இந்த வர்த்தகர்களுக்கு இளைப்பாறுதல் கிடையாது. இந்த வர்த்தகர்கள் பூமியிலுள்ள சகல ராஜ்யங்களோடும் வேசித்தனம்பண்ணுகிறார்கள்.

 

எழுபது வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் பணையத்துக்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள சகல ராஜ்யங்களோடும் வேசித்தனம்பண்ணும்.

 

தேவ பிள்ளைகள் நேர்மையாக வியாபாரம் பண்ணும்போது இந்த வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும். அதை  பொக்கிஷமாய் சேர்க்கவோ  இல்லை; பூட்டி வைஏற்பாட்டின் தீரக்கவோ கூடாது. அளவுக்கு மிஞ்சி தலைமுறை தலைமுறைக்காக பொக்கிஷமா சேர்த்து வைக்கக்கூடாது.

 

எழுபது வருடங்களுக்கு பின்  அழிக்கப்பட்ட  பழைய தீரு பட்டினம் கிறிஸ்துவின் மூலம் ஆசிர்வதிக்கப்படுகிறது.  எழுபது வருடங்கள் என்பது ஒரு தீர்க்கதரிசனத்தின் அடையாள எண் . தானியேலின் தீர்க்கதரிசனத்தில் எழுபது வருடங்கள் என்று குறிப்பிடுவது ஒரு காலத்தை குறிக்கின்றது. பாவ மீறுதல்களுக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் பலி செலுத்தி நித்திய மீட்பை கொண்டு வரும் காலம். இது ஒரு பூரணமான எண். அதாவது இயேசுவின் இரத்தத்தின் மூலம் இரட்சிப்பு கிடைக்கும் ஒரு யுகம்.

 

"கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்".

 

இன்று புதிய ஏற்பாட்டின் காலத்திலுள்ள நாம் ஆண்டவரின் சமுகத்தில் வாசமாயிருந்து,  திருப்தியாகச் சாப்பிடவும், நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும், ஆசிர்வதிப்பட்டிருக்கிறோம். கைகளின் மூலமாக உழைத்து தொழில் செய்யலாம். அந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி, ஆடம்பரம் இல்லாமல், பொருள் இல்லாதவர்களுக்கு உதவலாம். 

 

அநியாயமாக வியாபாரத்தின் மூலம் வருமானம் உண்டாக்க கூடாது . வாடிக்கையாளர்களை ஏமாற்றி சம்பாத்தியம் பண்ணக்கூடாது.

 

 ஆண்டவரின் நாமத்தை வைத்து வர்த்தகம் செய்து நமக்க்கோ நமது தலைமுறைக்கோ சொத்துக்கள், பொக்கிஷங்கள்  சேர்த்து வைத்தால் நமக்கு ஐயோ.

 

செல்வந்தர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.