Jeremiah 11th Chapter
"கர்த்தாவே, உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களைப் பிடுங்கிப்போட்டு, கொலைநாளுக்கு அவர்களை நியமியும்".
எரேமியா தீர்க்கன் நீதியுள்ள தேவனோடு வழக்காட துணிகிறான். அநியாயம் செய்கிறவர்கள் நன்றாக வாழ்ந்துவருகிறார்கள். ஆனால் நானோ துன்பப்பட்டு வருகிறேன். "நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்". ஆதலால் அவர்களை தண்டியும் என்று கதறுகிறான். இவனது விண்ணப்பம் பழைய ஏற்பாட்டின் நிலைபாடு. நாம் இதுபோல விண்ணப்பம் பண்ணக்கூடாது.
"எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்".
அநியாயக்காரர்கள் நாம் அழிந்துபோகமாட்டோம் என்று எண்ணி நமது முடிவை அவர்களால் காணமுடியவில்லை என்று புலம்பிவருகிறார்கள். இன்று நடப்பதும் அதுவே. நம்மை துன்புறுத்தி வந்தும் நமது முடிவை அவர்களால் காணமுடியவில்லை . ஏனென்றால் நமது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை தேவனை தவிர அவர்களால் அறிந்துகொள்ளமுடியாமலிருக்கிறது.
"நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்?"
நாம் ஒடுக்கப்படும்போது சோர்ந்து போகக்கூடாது. சிறிய உபத்திரவம் வரும்போது தளர்ந்துபோனால் பெரிய உபத்திரவம் வரும்போது நாம் என்ன செய்வோம். காலாட்களோடே ஓடப் பழகி கொள்வோம். யோர்தான் பிரவாகித்து வரும் என்று பயப்படவேண்டாம். யோர்தான் வராமலே போய்விடுமே. நமக்கு சமாதானம் கொடுப்பது கிறிஸ்துவே. அவரே தான் அடைக்கலம். எந்த உலக பாதுகாப்பு உள்ள இடத்திலும் அடைக்கலம் கிடைக்காது. ஆகவே விசுவாசத்துடனும் கல்வாரியின் சிலுவையை நோக்கி மோட்சப்பயணத்தின் கிறிஸ்தியான் ஓடினது போல முன்னோக்கி ஓடுவோம்.
" உன் சகோதரரும், உன் தகப்பன் வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்".
நமது சொந்த மக்களாலும் ரத்த உறவினர்களாலும் எந்த நன்மையையும் எதிர்பார்க்கவேண்டாம். அவர்கள் இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்.
"நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று; அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.
என் சுதந்தரம் பலவர்ணமான பட்சியைப்போல் எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்".
நமக்கு இந்த உலகத்தில் எந்த உரிமையையோ சுதந்திரத்தையோ விட்டுக்கொடுப்போம், நமது சுதந்திரத்தை அழிக்க இந்த உலகத்தில் பட்சிகள், வெளியிலுள்ள மிருகங்களைப் போல நமது எதிரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நாம் நமக்கு வரவேண்டிய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கும்போது தேவனே நமக்கு சுதந்திரமாக காட்சியளிக்கிறார். அவரே நமக்கு எல்லாமாக விளங்குகிறார், ஆதலால் நாம் அசைக்கப்படமாட்டோம். எதை விட்டுக்கொடுக்கிரோசமோ அதை பலமடங்காக திருப்பி பெறுகிறோம்.
"அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.
அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை."
இன்று அநேக கள்ள மேய்ப்பர்கள் அவரின் சபையாகிய திராட்சத்தோட்டத்தையும் அவரது பங்காகிய என்னையும் உங்களையும் காலால் மிதித்து, அவரின் பிரியகாகிய நம்மை பாழான வனாந்தரமாக்கினார்கள். பாழாய்க் கிடக்கிற நமது காட்சி அவரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. கிறிஸ்துவின் சபை வஞ்சிக்கப்பட்டு பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை. எந்த ஊழியனும் இதை மனதிலே வைக்காமலே தேவனின் தோட்டத்தில் பணி செய்து வருகிறான்.
"கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை".
கர்த்தரின் தோட்டத்தை வனாந்திரமாக மாற்றி அதை அழிக்க உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள். அவர்கள் உயர்நிலங்களின்மேலில் இருப்பதால், நாம் அவர்களை தீர்க்கதரிசன கண்களின் மூலமாகத்தான் காணமுடியுமா. அவர்களை வெளிப்படுத்திக்காண்பிப்பது தேவனின் இருபுறம் கருக்குள்ள வேத வசனமாகிய பட்டயம் தான். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" (எபிரேயர் 4:12).
"கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்".
நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுப்போம் . கள்ள போதனைகளை மக்களின் உள்ளங்களில் விதைப்போமானால் நாம் உண்மையான உயிர்மீட்சியை (true revival ) அறுவடை செய்யமுடியாது. முள்ளுகளைத் தான் அறுப்போம். என்னதான் பிரயாசப்பட்டாலும் பிரயோஜனமடைவோம். உபவாச ஜெபக்கூட்டம் வைத்து உயிர்மீட்சி வர முயற்சிபண்ணினாலும் விருதா. கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மேல் வெளிப்படும். நாம் வேகட்டுப்போவோம்.
"இதோ, நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்".
நமக்கு காணியாட்சியாகக்கொடுத்த தேவனின் சுதந்தரத்தை யாரும் தொட்டால் அவர்களை தேவன் துஷ்டரான அயலா ரரைப்போல பாவிப்பார். தேவனது ராஜ்ஜியத்தில் அவர் உங்களுக்கு அநேக உரிமைகளைக் கொடுத்திருக்கிறார். அந்த உரிமைகளை அவரது வேதத்தை ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம். எந்த மனிதனும் நமக்கு இவைகளைக் கொடுக்கவேண்டிய அவசியமேயில்லை. யாரிடமோ போய் அவர்களின் கைகளை வைத்து அபிஷேகம் (anointing) என்ற பெயரில் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அவைகள் ஆவிக்குரிய வாரங்களாக இருக்கலாம். தேவன் கொடுக்கும் உரிமைகளை நாம் பெற தகுதியுள்ளவர்கள் அல்ல என்று யாரும் தடை செய்தால் அவர்களளை நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவார்.
"அவர்களை நான் பிடுங்கிப்போட்டபிற்பாடு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள் தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள் தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவேன்".
அப்படி பிடுங்கிப்போட்ட தேவ ஊழியர்களை அவர்கள்மேல் இரங்கி, ஆண்டவர் மறுபடியும் நம்மோடு தேசத்தில் குடியிருக்கும்படி திரும்பிவரப்பண்ணுவார்.
"அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக் கட்டப்படுவார்கள்.
கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
அப்படி துரத்தப்பட்ட ஊழியர்கள் தேவனின் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்களளை தேவன் தன் ஜனத்தின் நடுவிலே ஊன்றக் கட்டப்படுவார்கள். இவர்கள் தேவனின் சத்தத்தைக்கேட்டு அவரின் சித்தத்தை செய்யாமலலிருந்தால் தேவன் அவர்களை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவார்.