எழுப்புதல் எப்போது?

எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி


ஏசாயா 40 : 1-10 வரை தியானித்து, எழுப்புதல் எப்போது வருகிறது என்று அறிவோமாக. முதலாவது நாம் எடுத்த பாவமன்னிப்புக்களின் ஜெபங்கள் ஏற்கப்பட்டு நமது அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்று ஆண்டவர் கூறவேண்டும். ஆங்கிலத்தில் அக்கிரமம் என்றால் iniquity என்பதாகும். நாம் செய்யாமலிருக்கும் காரியங்கள் தான் iniquity என்று அர்த்தமாகும். நாம் நன்மை செய்யத் தவறினால் அது அக்கிரமம் ஆகும்.

அக்கிரமம் நிவிர்த்தியானவுடன் "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தவேண்டும்", அவாந்தரவெளியாகிய நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வை பண்ணவேண்டும்.

பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படவேண்டும்.

கவனிக்க! வெறும் ஜெபத்தினால் மாத்திரம் எழுப்புதல் வராது. ஜெபத்திற்கு முன்பாக கீழ்ப்படிதல் அவசியம். பள்ளத்தில் இருந்துதான் எழுப்புதல். பள்ளத்தில் தாழ்மையாக பணிபுரியும் தேவ மக்களை தேவன் உயர்த்துவார். அவர்களை உயர்த்தும்படி youtube channel. மீடியா ஊழியங்கள் அவசியமில்லை. தேவன் கைகளில் அடங்கியிருப்பவர்களை தேவன் தாமே உயர்த்துவார். பின்பு மலைகளாக உயர்த்திக் காண்பிக்கும் "சகல" ஊழியங்களும் தாழ்த்தப்படும். கோணலானவைகள், அதாவது வேதத்திற்குப் புறம்பானவைகள் நீக்கப்பட்டு கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும். இன்று கரடுமுரடான ஊழியங்கள். தங்களுக்கு இஷ்டமான ஊழியங்கள் பெருகி இருக்கின்றது. முதல் இடத்தில் இருக்கவேண்டிய அப்போஸ்தலர்கள் எங்கே? இரண்டாவது இடத்தில் இருக்கவேண்டிய தீர்க்கத்தரசிகள் எங்கே? நான்காவது இடத்தில் இருக்கவேண்டிய அற்புத ஊழியங்கள், குணமளிக்கும் ஊழியங்கள் ஏன் முதல் இடத்தில் இருக்கின்றது? கரடுமுரடான ஊழியங்களை விட்டு விலகவேண்டும். எங்கே தாழ்மையோடு ஊழியம் செய்யும் வானந்தரத்திலுள்ள ஏழை ஊழியர்களை தேடி அவர்களுக்கு பணஉதவி செய்யவும்.

"கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும்". இதுதான் எழுப்புதல். எங்கே கர்த்தரின் மகிமை, தேவ ஊழியரின் மகிமை அல்ல. இந்த தேவ மகிமையை மாம்சமான யாரும் காண்பார்கள்.

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்த எழும்புவோமாக!


Next.....