55-வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்

_________________________________

______________________________

**************************************************thanks to Shankar Rajasekharan

https://youtu.be/9GjBEzkzMY4

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்

..உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள் நின்றொளிர்வாள்

கள்ள மற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத் துட்பொருளாவாள்

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

கீதம் பாடும் குயிலின் குரலைக்

கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்

கோதகன்ற தொழிலுடைத்தாகிக்

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்

இன்பமே வடிவாகிடப் பெற்றாள்

******************************************