12-*-நாராயண திவ்ய நாமம்

நாராயண திவ்ய நாமம்

நாராயண திவ்ய நாமம்.

மோகனம் -ராகம்

பாபநாசம் சிவன் பாடல்.

எம்.எஸ்.சுப்புலக்ஷமி

mp3

naarayana.mp3

CLICK ON THE POP

UP AT TOP RIGHT AND PLAY

நாராயண திவ்ய நாமம்!

நான்மறை சொல்லும் நாயகன்

திரு நாமம்

நாவிற்கினிய

நாராயண திவ்ய நாமம்

நாரதாதி முனிவரும் ,ஜனகாதி யோகியரும்

ப்ரஹலாதனும்

எந்நாளும் மனோலயமுற

வாயார ஜபிக்கும்

ஆனந்த நாமம்.!

பேரானந்தம் இருந்தாலும் ,

கோர பாவ சாகரத்தில் ஆழ்ந்துழலும் நம்மை

ப்ரேமையுடன் கைதூக்கி அபயமருள்

வேத ஸார தாரக நாமம் !

பூரணன் , திருமகள் மணவாளன்

பாற்கடலில் அரவனைதுயில் வரதன்

புனித கருட வாஹனன் ,

நீல முகில் போலும் மேனி அழகன்

திருநாமம்

மாற ஜனகன் கருணாலயன்

அன்பர் துன்பம் அகல மங்களம் அருள்வோன்

வைகுண்ட பதி பாவன நாமம்

வணங்கும் ராமதாசன் கண்டு கொண்ட

நாராயண திவ்ய நாமம்