HOMAGE2MS-VINTAGE CLASSICS
अपि स्वर्णमयी लङ्का न मे लक्ष्मण रोचते।
जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी॥
"Even Lanka, decked with all it’s gold doesn’t endear itself to me;
Mother and Motherland are greater even than heaven."
SAGE VALMIKI TEACHING LAVA & KUSA
BANKIM CHANDRA CHATTERJI
ஸம்ஸ்க்ருத மூலம் இங்கே தரப்பட்டுள்ளது.
वन्दे मातरम्
सुजलां सुफलां मलयज शीतलाम्
शस्य शामलां मातरम् ।
शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनीं
फुल्ल कुसुमित द्रुमदल शोभिनीं
सुहासिनीं सुमधुर भाषिणीं
सुखदां वरदां मातरम् ।। १ ।। वन्दे मातरम् ।
कोटि-कोटि-कण्ठ-कल-कल-निनाद-कराले
कोटि-कोटि-भुजैर्धृत-खरकरवाले,
अबला केन मा एत बले ।
बहुबल धारिणीं नमामि तारिणीं
रिपुदल वारिणीं मातरम् ।। २ ।। वन्दे मातरम् ।
तुमि विद्या, तुमि धर्म
तुमि हृदि, तुमि मर्म
त्वं हि प्राणा: शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारई प्रतिमा गडि
मन्दिरे-मन्दिरे मातरम् ।। ३ ।। वन्दे मातरम् ।
त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी
कमला कमलदल विहारिणी
वाणी विद्या दायिनी, नमामि त्वाम्
नमामि कमलां अमलां अतुलां
सुजलां सुफलां मातरम् ।। ४ ।। वन्दे मातरम् ।
श्यामलां सरलां सुस्मितां भूषितां
धरणीं भरणीं मातरम् ।। ५ ।। वन्दे मातरम् ।।
================================
1. பாரத நாடு
19. ஜாதீய கீதம்-2
பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய
"வந்தே மாதரம்"கீதத்தின்
1.
2.
3.
4.
5.
6
புதிய மொழி பெய்ர்ப்பு
நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை!
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களம்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை,
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் நிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை’என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை,அரும்பதங் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை
அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை
மருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ;
தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே.
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ!
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை;
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை, பல்பணி பூண்டனை;
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்!
(வந்தே)
(வந்தே)
(வந்தே)
(வந்தே)
(வந்தே)