25-*-யாமறிந்த மொழிகளிலே

யாமறிந்த மொழிகளிலே

yamarintha.mp4

பாரதியார் பாடல். ..

எம்.எஸ்.சுப்புலட்சுமி

old 78 rpm record..

very very rare.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;

பாமர ராய், விலங்குகளாய்,

உலகனைத்தும்

இகழ்ச்சிசொல்லப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும். 1

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;

உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;

ஊமையராய்ச் செவிடர்களாய்க்

குருடர்களாய் வாழ்கின்றோம்;

ஒருசொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

தமிழ்முழக்கம்

தமிழ்முழக்கம்

தமிழ்முழக்கம்

செழிக்கச் செய்வீர்!

https://youtu.be/0NvkU_HzndM