13-*-முடியொன்றி-பெரியாழ்வார்

mudiyondril.mp3

முடியொன்றி மூவுலகங்களும்

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்

அடியேற்று அருள என்று அவன் பின் தொடர்ந்த

படி இல் குணத்து , பரத நம்பிக்கு அன்று

அடிநிலை ஈந்தானை பாடிப்பற !

அயோத்தியர் கோமானை பாடிப்பற !

( செஞ்சுருட்டி )

-----------------------------------------------------------------------------

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டு அவன்

நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்

தோள்வலி வீரமே பாடிப்பற !

தூமணி வண்ணனை பாடிப்பற!

( புன்னாகவராளி )

-----------------------------------------------------------------------------

மாயச்சகடம் உதைத்து மருது இருத்து

ஆயர்களோடு போய் ஆநிரை காத்து

வேயில் குழல் ஊதி வித்தகனாய் நின்ற

ஆயர்கள் ஏற்றினை பாடிப்பற !

ஆநிரை மேய்த்தானை பாடிப்பற!

(KARAHARAPRIYA?)

---------------------------------------------------------------------------

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு

ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்

நேரா அவன் தம்பிக்கு நீளரசை ஈந்த

ஆரா அமுதனைப்பாடிப்பற !

அயோத்தியர் வேந்தனை பாடிப்பற !

( சிந்துபைரவி )