thamizh-translation

1

செல்வமும், தான்ய வளமும்

வண்ண வண்ணமலர்களும்

கொண்ட இந்தப் புவிதனில்

அனைத்திலும் சிறந்த நாடு ஒன்று உண்டு


சூழ்ந்து நிற்கும் நினைவுகளின்

மேலெழும் கனவுகளில் மிளிரும்

இது போன்ற நாடு எங்கு உண்டு ?


நாடுகளுக்கெல்லாம் தலையாய நாடு

நாடுகளின் ராணி

எனது ஜன்ம பூமி

எனது ஜன்ம பூமி

-------------------------------

2

வண்ண நிலவும் , செங்கதிரோனும்

அண்டகோளங்களும், மின்மினித் தாரகைகளும்

ஒளிரும் நாடு இதுதான்

.

விண்ணை முட்டும் மலை முகடுகளில்

தவழ் ந்து திரியும்

கார்முகில் கூட்டங்கள் ஊடே

மின்னல் கீற்றுகள்

ஒளிர்வதும் இங்கேதான்

எனது ஜன்ம பூமி

-

நாடுகளுக்கெல்லாம் தலையாய நாடு

நாடுகளின் ராணி

எனது ஜன்ம பூமி

எனது ஜன்ம பூமி


3


தண்மை நிறை நதிகளும்

வியக்க வைக்கும் மலைகளும்

நீல வானின் விளிம்பில் இணையும்

பசுமை போர்த்த நிலங்களும்

மெல்லிய பூங்காற்றில் அசைந்தாடும்

வயல் வெளிகளும் நிறைந்த

எனது ஜென்ம பூமி

எனது ஜென்ம பூமி


4


அருணோதயப் பொழுதில்

புள்ளினங்களின் ஆனந்த கானம்

எம்மைத் துயில் எழுப்பும்

அந்தி சாயும் வேளையிலும்

வந்து சேர்ந்த மகிழ்ச்சியில்

கலகலக்கும் பறவைகளின் ஓசை

எம்மைத் துயில வைக்கும்

5

பூத்துக் குலுங்கும் சோலை மரச் செடிகளூடே

பாடித் திரியும் பறவைகள் கூட்டம்

ரீங்கார ஓசை இட்டு

பூக்களின் மகரந்தத் தேன் உண்டு

அங்கேயே மயங்கி உறங்கும்

வண்டினக் கூட்டங்கள். நிறை

எனது ஜன்ம பூமி

எனது ஜென்ம பூமி

6

எங்கு சென்றிடினும்,

அன்பைப் பொழியும் சகோதரர்கள்

அன்பே வடிவான இந்த மண்ணின்

அன்னையர் போல

மதலையரைக் கொஞ்சி மகிழும் தாயரை

எங்கு காண முடியும் ?

அன்னையே !

உன் பாதங்களை என்றென்றும்

என் இதயத்தில் ஏற்றுப் போற்றுவேன்.


-மீண்டும் மீண்டும் இதே மடியில் தான்

பிறந்து மறைவேன்