மனம் குளிர ,கண் குளிர

மனம் குளிர ,உள்ளம் குளிர

இளம் காற்றில் அசைந்து

மணம் கமழும் மலர்களும்

தீங்கனிகளுமே தந்தீர் !

தினம் இன்ப நிழல் தந்தீர் !

அருமை மிகு தருக்காள் !

செழும் செடிகாள் !

மலர்க கொடிகாள் !

இனம்பிரியா இசைக்குயிலே !

இளம் தோகை மயிலே !

இன்சுவைப் பால் எனக்களித்து ,

வளர்த்த செல்வ பசுககாள்!

கனவிலும் எந்தனைப் பிரியா மான்கன்றே !

இனிமேல் கண்டு மகிழ்ந்து

உங்களுடன் கழித்திடும் நாள் என்றோ!

அந்நாள் என்றோ?