மாநிலத்தை வாழவைக்க வந்த மகாத்மா

Maanilathai_Vaazha_Vaika_Gana.PK_.mp4

காந்திஜி மறைந்த போது ,

அவர் நினைவாக கல்கி இயற்றிய பாடல்.

30-மாநிலத்தை வாழவைக்க-*

----------------------------------------------------------

எஸ்.வி.வெங்கடராமன் இசையில் ,

-------------------------------------------------------------

எம்.எஸ்.சுப்புலட்சுமி

பாடிய

அமரத்வம் வாய்ந்த சோக கீதம்.

begins with maayaamaaLavagowLA and ends with keerwani

RSR ( 2-9-2016) CHECKED.OK. )

மாநிலத்தை வாழவைக்க

வந்த மகாத்மா !

மாந்தர் குலம் உய்ந்திடவே

வந்த மகாத்மா !

தீனர்களின் தந்தையான

காந்தி மகாத்மா !

தீயவர்க்கும் நன்மை எண்ணும்

தெய்வ மகாத்மா !

வானுலகைத் தாமனுகிச்

சென்ற போதிலே

வாசலிலே நின்று

வரவேற்றவர் யாரோ?

வானவரும் தேவியரும்

வந்து வணங்கி

வாசமலர் தூவி

ஜய போற்றி சொன்னாரோ !

-------------------------------------------

பாலன் பிரஹலாதன்

தங்கள் பாத மலரைப்

பணிந்து கண்ணீர் அருவி

சொரிந்து நின்றானோ ?

------------------------------------------

ஞாலமெல்லாம் வாழ ,

முதுகெலும்பினை ஈந்த

ஞான முனியாம் ததீசி

ஆசி சொன்னாரோ

---------------------------------------------------------------

முன்னொரு நாள் அன்பு நெறி

தந்தருளிய

மோன புத்தர் இமை திறந்து

முகமலர்ந்தாரோ !

----------------------------------------------------------------------------

சின்னஞ்சிறு வயதினிலே

தம்மை மணந்த

எங்கள்

அன்னையாம் கஸ்தூரிபாயும்

கரம் குவித்தாரோ!

---------------------------------------------------------------------------

மாநிலத்தை வாழவைக்க

வந்த மகாத்மா!

எங்கள் மகாத்மா !

தெய்வ மகாத்மா!

--