HOMAGE2MS-VINTAGE CLASSICS
வடவரையை மத்தாக்கி , வாசுகியை நாணாக்கி
mp4 created on 29-8-2016
RSR
The following WMV file has a number of slides.
AN IMMORTAL CLASSIC FROM
ILANGO ADIKAL'S SILAPPATHIKAARAM
இளங்கோ அடிகளின் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின், மதுரைக் காண்டம் பகுதியில், ' ஆய்ச்சியர் குரவை '
எனும் அற்புதப் பாடல்களை , அருமையான இசை அமைத்து ( எஸ்.வி.வெங்கடராமன்) , திருமதி எம்.எஸ். நமக்கு அருளியுள்ள அமுதம். ..
இளங்கோ அடிகள் சமணர் என்பர். ஆயினும், ஆழ்வார்களையும் விஞ்சி , இங்கு அடிகள் , கிருஷ்ணாவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம் பற்றி கூறி, ' நாராயணா என்னா நாவென்ன நாவே !' என்று உருகுகிறார்! தெவிட்டாத அற்புதப் பாடல்.
****************************************************
MUSIC BY S.V.VENKATARAMAN
****************************************************
1)ஹம்ஸானந்தி
2)கமாஜ்
3)ஹிந்தோளம்
4)ஷண்முகப்ரியா
5)நாதநாமக்ரியா
6)காபி
வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரப்பாடல்
இந்த சிலப்பதிகாரப் பாடல் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் பாடப்பெற்று பிரபலமடைந்த பாடல். 1966 இல் ஐ.நா சபையில் நடந்த எம்.எஸ் கச்சேரியில் இந்த பாடல் இடம் பெற்றது. :
1.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
2.
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
3.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
4.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
?
5.
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே
6
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே!