89-SONGS (12) FROM MEERA(TAMIL)-1945

PLEASE VISIT THE FOLLOWING TWO COMPANION SITES

*************************************************

( FOR BOTH AUDIO AND VIDEO CLIPS FROM BOTH MEERA(TAMIL-1945) AND MEERA(HINDI-1947)

************************************************

https://sites.google.com/site/meera1947film

https://sites.google.com/site/meera1945tamil

************************************************

யது நந்தனா கோபாலா

ஜய வேணு கான லோலா

ஹே வரதா

அருள் தருவாய் வனமாலி

ஜய மீரா பிரபு கிரிதாரி

INTRODUCTION BY SAROJINI NAIDU TO MEERA (HINDI-1947)

ஸ்ரீமதி சரோஜினியின் பூர்வாங்கப் பிரசங்கத்தை ஒலிப்பதிவு செய்து படமும் எடுக்கப்பட்டது. கவியரசி இதற்காக முன்னால் எழுதித் தயார் செய்து கொண்டு வந்து பேசவில்லை. அந்தச் சமயம் தன் மனத்தில் தோன்றியதையே பேசினார். அவருடைய ஆங்கிப் பேச்சின் மொழி பெயர்ப்பு வருமாறு :

''தென்னிந்தியாவின் சுப்புலக்ஷ்மியை வட இந்தியாவின் மக்களுக்கு அறிமுகப்படுத்த முன் வந்திருக்கிறேன். அவருடைய தமிழ் மீரா படத்தை வட இந்தியாவுக்காக ஹிந்தி பாஷையில் ஆக்கி, வட இந்தியாவுக்கு அவர் அளித்திருக்கிறார். வட இந்தியாவுக்கு மீராவிடம் விசேஷ உரிமை உண்டு என்றாலும், மீரா உலகத்துக்கெல்லாமே சொந்தந்தான். எம்.எஸ். சுப்புலக்ஷ்மியைப் பற்றி வட இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். ஆகையினாலே தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன்.

''இந்தியாவின் சின்னஞ்சிறு குழந்தை கூட சுப்புலக்ஷ்மியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும். அவருடைய குரல் இனிமையைப் பற்றியும், அவருடைய தர்ம கைங்கரியங்களின் சிறப்பைப் பற்றியும் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆயினும் வட இந்திய மக்கள் அவரை இன்னமும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த கலைவாணிகளில் ஒருவர் சுப்புலக்ஷ்மி என்பதை உணர்ந்து, அன்புடன் போற்றிக் கெளரவிக்க வேண்டும். மீராவின் கதை இந்தியாவின் கதையாகும்; இந்தியாவின் பக்தி மகிமை, ஆத்ம சமர்ப்பணத்தின் பெருமை இவற்றின் கதையாகும். மன்னர் குலத்திலுதித்த கவியரசி மீராவுக்கு உலக சரித்திரத்தில் உவமை சொல்லக் கூடியவர் வேறு யாரும் இல்லை. தெரிஸா, ஸிஸிலியா முதலிய கிறித்துவ பக்த சிரோமணிகள் ஏசு கிறிஸ்துவின் பூரண அருளைப் பெற்றவர்கள். ஆனால் மீராவோ தான் பிரேமை கொண்ட கண்ணனோடு இரண்டறக் கலந்து ஐக்கியமாகி விட்டவள். சுப்புலக்ஷ்மி இந்தப் படத்தில் மீராவாக நடித்திருக்கிறார் என்பது அவ்வளவு பொருத்தமில்லை. மீரா கீதங்களை அவர் பாடும்போது, மீராவே புத்துயிர் பெற்று வந்து நம் முன்னால் பாடுகிறார் என்றே நம்பத் தோன்றுகிறது. சுப்புலக்ஷ்மியின் அற்புதமான கானத்தைக் கேட்பவர்கள் யாரானாலும், இந்தத் தலைசிறந்த கலைவாணியின் உணர்ச்சியூட்டும் முகபாவங்களைப் பார்ப்பவர் யாரானாலும், அவர்கள் தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்து மெய்மறந்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சுப்புலக்ஷ்மி மீராவாக நடிக்கிறார் என்ற எண்ணமேயாருக்கும் தோன்றாது. அவரே மீரா என்றுதான் எண்ணத் தோன்றும்.

''இந்த காலத்து பாரத சந்ததியிலே இத்தகைய இணையில்லாத கலைவாணி தோன்றியிருப்பது பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.''

**************************************************

1) எனது உள்ளமே , நிறைந்த இன்ப வெள்ளமே (செஞ்சுருட்டி)

பாடல்: பாபநாசம் சிவன்

http://picosong.com/zvRk

http://freemp3host.com/play:10262

எனது உள்ளமே , நிறைந்த இன்ப வெள்ளமே

யது வீரனை, நந்தகுமாரனை நினைந்து

எனது உள்ளமே , நிறைந்த இன்ப வெள்ளமே

மலரே இரு விழி பங்கஜ மலரே திருமுகமும் !

மலரே இரு கரம், தாமரை மலரே திருவடிகள் !

மந்த ஹாசம் பொங்கும் அந்த சுந்தர முக அரவிந்தமிதை

எனது உள்ளமே !

அன்னை ,தந்தை பதியும அவன் ,

அருளும் துணை நவநிதியும் அவன் ,

இன்பமும் ,அழகும் அவனே !

எழில் நிறை பணிமணி அவனே!

எழில் நிறை பணிமணி அவனே!

மீராப்ரபு கிரிதர கோபாலனை வரதனை

நினைதொறும் , எனது உள்ளமே

-------------------------------------------------------------------

2) கிரிதர கோபாலா

( பாடல் மீராபாய் )

மோகனம் ராகம்

http://picosong.com/zvRJ

http://freemp3host.com/play:10269

கிரிதர கோபாலா ! பாலா!

----

ஷ்யாமள ஸரீர, கௌஸ்துப ஹார !

பீதாம்பர தர பிரபோ முராரே!

கிரிதர கோபாலா!

நந்த சுகுமார , மனமோஹனா கார !

பிருந்தாவன சர, துளசி ஹார

கிரிதர கோபாலா ! பாலா!

கிரிதர கோபால கம்ஸ விதார

மீரா மானஸ

ஸரோ விஹார !

-------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------

3)

அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?

(பெஹாக்)

ரகுநந்தனா கோபாலா (திலங்)

பாடல் : கல்கி

http://picosong.com/zvFB

http://freemp3host.com/play:10261

அரங்கா உன் மகிமையை

அறிந்தவர் யார்?

யானை அன்று ஆதிமூலமே என்று

ஓலமிடவும் ஓடி வந்தனையே !

வீணர்கள் சபையில் திரௌபதி கதற

மானம் காத்தது யாரே?

அரங்கா உன் மகிமையை

அறிந்தவர் யார்?

--

பிரஹலாதனை பாலனம் செய்ய

நரஹரியாய் வந்த நாரண்னே !

தாரினியில் உன்னை அன்றி வேறே

யார் துணை சொல் கதாதரனே !

அரங்கா உன் மகிமையை

அறிந்தவர் யார்?

-----------------------------------------------------------------------

4)

காற்றினிலே வரும் கீதம்

ராகம் : மிஸ்ர-ஜோன்புரி

பாடல்: கல்கி

http://picosong.com/zvnW

http://freemp3host.com/play:10267

காற்றினிலே வரும் கீதம்

கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம் !

கல்லும் கனியும் கீதம் !---

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் !

பண்ணொலி பொங்கிடும் கீதம் !

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்

மதுர மோகன கீதம் !

நெஞ்சினில் இன்பக்கனலை எழுப்பி

நினைவழிக்கும் கீதம்!

------------------------------------------------

சுனை வண்டுடன் சோலைக்குயிலும்

மனம் குவிந்திடவும்,

வான வெளிதனில் தாராகணங்கள்

தயங்கி நின்றிடவும்

ஆ! என் சொல்வேன்! மாயபிள்ளை

வேய்ங்குழல் பொழி கீதம்

------------------------------------------------

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்

உலாவும் நதிக்கரையில்

நீல நிறத்து பாலகன் ஒருவன்

குழல் ஊதி நின்றான் !

காலமெல்லாம் அவன் காதலை எண்ணி

உருகும என் உள்ளம் !

----------------------------------------------------

5

சராசரம்

ராகம் : சந்த்ரகான்ஸ்

பாடல்: கல்கி

இசை: S.V.VENKATARAMAN

http://picosong.com/zvRt

சராசரம் உன்னை யாவும் தேடுமே...

மறைகளும் மகிழ்ந்துன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !

நிராசையால் நைந்த என் நெஞ்சமும்

பராவும் உன் பாதாரவிந்தமே !

உன்னையே எனதுயிர் துணை என்று

உவந்ததென் தவறோ ஐயா !

கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ

கதி உன் கழலின் நிழலே அன்றோ !

வானகம் வையகம் தரும் இன்பங்களைக்

கருதியதும் உண்டா?

இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !

அனலில் மெழுகென அகமும் உருகும் !

"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !

இதயமும் பதறும் ஐயா !

பாத மலரில் படிந்திடும் வண்டாய்

நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !

அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்

அடைக்கலம் ஐயா !

-----------------------------------------------------------------------

6

லீலைகள் செய்வானே கண்ணன்

பாடல்: கல்கி

இசை :எஸ்.வி.வெங்கடராமன்

http://picosong.com/zvnZ

--------------------------------------------------------------------------

7

மறவேனே என்னாளிலுமே

ராகம்: பரஜ்

பாடல்: கல்கி

இசை: எஸ்.வி.வெங்கடராமன்

http://picosong.com/zvnC

http://freemp3host.com/play:10260

மறவேனே என்னாளிலுமே !

கிரிதாரி உனதருளே!

நஞ்சை நீ உண்டனையோ!

இந்த பஞ்சையைக்காத்தனயோ !

ஒரு விந்தை புரிந்தனயோ !

ஒரு விந்தை புரிந்தனயோ !

மறவேனே என்னாளிலுமே !

கண்ணா என் கண்மணியே!

உந்தன் கண்ணால் கண்டுரையே!--

உன்னைப்பண்ணால் துதித்திடுவேன் !

உன்னைப்பண்ணால் துதித்திடுவேன் !

மறவேனே என்னாளிலுமே !

ஆரங்கள் சூட்டிடுவேன் !

அலங்காரங்கள் செய்திடுவேன்!

பல கீதங்கள் பாடிடுவேன்!

பல கீதங்கள் பாடிடுவேன்!

மறவேனே என்னாளிலுமே !

ஜய மீராபிரபு கிரிதாரி !ஜய மீராபிரபு கிரிதாரி !

ஜய மீராபிரபு கிரிதாரி !ஜய மீராபிரபு கிரிதாரி !

------------------------------------------------------------------------------

8

மறைந்த கூண்டில் இருந்து

ராகம்: கமாஜ்

பாடல்: கல்கி

இசை : எஸ்.வி.வெங்கடராமன்

http://picosong.com/zvnQ

http://freemp3host.com/play:10259

மறைந்த கூண்டில் இருந்து

விடுதலை அடைந்த பறவை விரைந்தோடுதே !

நிறைந்த வெளி நீல வானிலே ,

தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே!

-- மடை திறந்த வெள்ளம் போல் என்னுள்ளம்

கண்ணனின் பரந்த கருனைக்கடல் நாடுதே!

பிறந்த பயன் இன்றடைந்த மீரா,

பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர்

உவந்து ஆனந்தக்ககடலாடுதே !

--------------------------------------------------------------------------

9

உடல் உருக, உள்ளம் உருக

விருத்தம்: ராகமாலிகை

(பூர்விகல்யாணி, சஹானா, நாதநாமக்ரியா)

பாடல்: கல்கி

http://picosong.com/zv3t

உடல் உருக , உள்ளம் உருக

ஊண் எல்லாம் நெக்குருக

குழல் ஊதி இசை பாடி எனை தேடிவந்து

கடல் வண்ணத்திருமேனி

எழிற்கோலம் காட்டி

( பூர்விகல்யாணி )

கனவினிலே எனை மணந்த கண்ணா !

கிரிதரனே!

படமுடியாத்துயரம் இந்தப்பேதை

படவில்லையோ

பாவி உயிர் உன் பிரிவால் தேய்வ்தறிந்திலையோ ! (ஸஹானா )

இடர்க்கடலில் மீராவை தவிக்கவிட்டே

இன்று எங்கு சென்றாய்! என்னரசே!

எங்கு நீ சென்றாய்! என்னரசே!

எங்கு மறைந்தனயோ! (நாதநாமக்ரியா)

-------------------------------------------------------------------------------

10

அந்த நாளும் வந்திடாதோ

ராகம்: ஸிந்துபைரவி

பாடல்: கல்கி

இசை :எஸ்.வி.வெங்கடராமன்

http://picosong.com/zvFd

http://freemp3host.com/play:10265

அந்த நாளும் வந்திடாதோ !

நந்த குமாரன்

விந்தை புரிந்த

அந்த நாளும் வந்திடாதோ !

அனைவரும் கூடி, அவன் புகழ் பாடி

நிர்மல யமுனா நதியினில் ஆடி

.வனம் வழி திரிந்து ... வரதனைத்தேடி

அனுதினம் அமுதனை தரிசனம் செய்த

அந்த நாளும் வந்திடாதோ !

( there is a saxophone interlude here barely for a few seconds..

A stroke of genius by S.V.Venkataraaman).

வானவர் நாணிடும் மங்கையரோடு ,

மா தவத்தோரும் மயங்கிடுமாறு ,

தேனின் இனித்திடும் தீங்குழலூதி ,

மானிடமே அதிமேலெனச்செய்தான் !

--

கானகம் சென்று ஆநிரை கன்று

கருணை மாமுகில் மேயத்திட அன்று

புனித மேனியில் புழுதியும் கண்டு

வானோர் பூமியை விழைந்ததும் உண்டு !

போதமில்லா ஒரு பேதை மீரா !

பிரபு கிரிதாரி ,ஹ்ருதய சஞ்சாரி !

வேதம் வேதியர் திரிசனும் தேடும்

பாத மலர்கள் நோக நடந்த

அந்த நாளும் வந்திடாதோ !

-------------------------------------------------------------

11

எங்கும் நிறைந்தாயே ,இன்று எங்கு மறைந்தாயோ

ராகம்: ஸிந்து பைரவி

பாடல்: கல்கி

இசை எஸ்.வி.வெங்கடராமன்

( SVV sings in background)

http://picosong.com/zvFm

எங்கும் நிறைந்தாயே ,

இன்று எங்கு மறைந்தாயோ!

எங்கும் உன்னை நான் தேடி அலைந்தேனே !

தயாநிதியே !

மண்ணுலகிலும் வானோர் வாழ்

விண்ணுலகிலும் நீயல்லாமல்

கண்ணும் மனமும் எதையும் நாடாதே !

பிரபோ முராரே !

--------------------------------------------------------------------------------

12

கருணையே புரிவாயோ ,கதியிலேன் கிரிதாரி

கல்கி,

எஸ்.வி.வெங்கடராமன்

(GRATEFUL ACKNOWLEDGEMENT TO DR.PASUPATHI (ECE)

FOR SENDING THE LYRICS

ஜனார்தனா

ஜகன்னாதா

நீ என் நாதன் அன்றோ

---------------------------------------------------------------

சுராசுரர் பணி பாதா

அருள் தராத காரணம் ஏனோ

தாள் மலர் விடுவேனோ

தாமதம் இனி தாளேனே

======================================

கண்ணனே நான் பட்ட பாடு

கண்டு கல்லும் கரையும்

கடலில் குளித்தொரு முத்தெடுத்தேன் நான்

கை நழுவ விடுவாயோ

-----------------------------------------------

கருணையே புரிவாயோ

கதி யில்லேன் கிரிதாரி

கருணையே புரிவாயோ

கதி யில்லேன் கிரிதாரி

த்வாரகா புரிவாசா

சோதனை போதாதோ

தரிசனம் காண தடை செய்யும்

கதவும் திறவாதோ

மீரா உன் அடிமை என்பதும்

திருவுள்ளம் மறந்ததோ

அடியாள் மீரா

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான்

மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்

மாறா பிரேமை தந்தான்

https://www.mediafire.com/?tm9mgoaoz0ok2wj

http://picosong.com/zvys

*************************************************

*************************************************

thanks!

http://sacred-songs.blogspot.in/2007/06/giridhara-gopala.html