HOMAGE2MS-VINTAGE CLASSICS
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
A FRENZIED RENDERING BY MS IN SINDHUBAIRAVI RAGAM
நெஞ்சுக்கு நீதியும் ,தோளுக்கு வாளும்,
நிறைந்த சுடர்மணிப்பூண் !.
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம்
இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ! ..
வஞ்சனையின்றிப் பகையின்றி சூதின்றி
வையக மாந்தரெலாம் ,
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர்
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்! ...
நம்புவதே வழி என்ற மறைதனை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால்
உனைக் கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
சக்தி ஓம். ஓம் ஓம்
வெள்ளை மலர் மிசை வேதக்
கருப்பொருளாக விளங்கிடுவாய் ..
தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்!
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதெந்தன நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்
சக்தி ஓம், சக்தி ஓம், சக்தி ஓம்!