60-SADHAASIVA BRAMMENDRAM SONGS

EXCELLENT SITE

=============

GIVES LYRICS

=============

http://www.sangeetasudha.org/othercomposers/sadasiva.html

**********************************************

Sadasiva Brahmendra

Sadasiva Brahmendra, a great ascetic, a Brahma jnani lived in 17th century in Tamilnadu. He was a profound Advaita Scholar who renounced the materialistic life at an early age. His compositions are out-pourings of devotion and philosophy. They elevate us to the realms of spiritual heights. Inspite of his excellence in the knowledge of the Vedas and other scriptures he used to wander freely in his own spiritual world. Songs like Pibare Rama rasam, Manasa sancharare, Gayati vanamali etc. haunt our minds drenching us in Bhakti Rasa.

Mudra:- Parama hamsa.

---------------------------------------------------------------------------------

Sadasiva Brahmendra Krutis

மானஸ சஞ்சர ரே என்ற இனிய எளிய கர்நாடக இசைப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். இதனை இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான். காயதி வனமாலி, பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி, சர்வம் பிரம்மமயம் ரேரே .. என்று பக்தியையும், ஞானத்தையும் எளிய சொற்களில், மெட்டுகளில் எடுத்துச் சொல்லும் பல கீர்த்தனைகளை அவர் புனைந்துள்ளார். அவற்றில் ‘பரமஹம்ஸ’ அல்லது ‘ஹம்ஸ’ என்ற அவரது முத்திரையும் இருக்கும். 17-ம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கருதப் படுகிறது. பல்வேறு ஐதிகங்கள், அற்புதக் கதைகள் அவரைக் குறித்துக் கூறப் படுகின்றன. கரூரை அடுத்த நெரூரில் அவரது சமாதி உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அவரது மஹா சமாதி தினத்தன்று ஆராதனை விழா பக்தர்களால் சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது.

1. அத்வைத பண்டிதராக இருந்தவர், பரமசிவேந்திர சரஸ்வதி என்ற கும்பகோணம் மடாதிபதியின் சீடர். சில அத்வைத நூல்களை எழுதியவர்.

2. ஸ்ரீதர வேங்கடேசர் காலத்தவர். பல சமய, தத்துவ வாதவிவாதங்களில் ஈடுபட்டவர். கர்நாடக இசைக் கீர்த்தனைகளை இயற்றியவர்

3. விஜரகுநாத தொண்டைமானின் சமகாலத்தவர். வேறுசில அத்வைத நூல்களை எழுதியவர்

4. அவதூதராகவும் சித்தராகவும் வாழ்ந்தவர். திருச்சி, தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை பகுதிகளில் தன்னிச்சைப் படி உலவிக் கொண்டு சாதாரண மக்களுடன் பழகியவர். அற்புதங்கள் நிகழ்த்தியவர்.

இந்த அத்தனை செய்திகளையும் சமன்வயப் படுத்தி, நூலின் இறுதியில் சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கைக் கால அட்டவணை ஒன்றை நூல் அளிக்கிறது. பிறந்த ஆண்டு 1680 என்று நிர்ணயிக்கப் பட்டு, அவரது ஒவ்வொரு வயதிலும் நடைபெற்ற அவரது வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் அந்த ஆண்டின் மற்ற முக்கிய அரசியல், வரலாற்று சம்பவங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. 1755ம் ஆண்டு 75 வயதில் மஹாசமாதி அடைந்திருக்கலாம் என்றும், அல்லது 1781ல் 101 வயதில் மஹாசமாதி அடைந்திருக்கலாம்