04-காலைத் தூக்கி -*

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே

-------------------------------------------------------------------


M.S.SUBBULAKSHMI-78 RPM- KAALAITH THOOKKI NINDRAADUM ¯.mp4

uploaded to tube on 17-9-2017

RARE .

http://youtube.com/watch?v=3Zt9WJYdi3k

THIS IS A LOVELY SONG OF 1950's...BY M.S.SUBBULAKSHMI 78 RPM RECORD. THE COMPOSITION IS BY MARIMUTHA PILLAI. THE SONG IS IN YADHUKULAKAMBOJI RAGAM.. .VERY STATELY AND LEISURELY PACE. VOICE OF GREAT SWEETNESS.

யதுகுல காம்போதி ராகம்... OLD 78 RPM CLASSIC .RARE ரெகார்ட்

RSR(AUG-2016)

--------------------------------------------------------------

வேலைத் தூக்கும் பிள்ளை தனை பெற்ற தெய்வமே

மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில்

ஒரு..

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே!

என்னைக் கை தூக்கி ஆள் தெய்வமே!

-----------------------------------

செங் கையில் மான் தூக்கி

சிவந்த மழுவும் தூக்கி

அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி

கங்கையை , திங்களை கதித்த சடைமேல் தூக்கி

இங்கும் அங்குமாய் தேடி இருவர் கண்டறியாத

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே!

....

நந்தி மத்தளம் ,தூக்க

நாரதர் யாழ் தூக்க .

'தோம் தோம்' என்றயன் தாளம்

சுருதியோடு தூக்க

சிந்தை மகிழ்ந்து வானோர்

சென்னிமேல் கரம் கூப்ப

முந்தும் வலியுடைய முயலகன்

உன்னைத் தூக்க,

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே!

என்னைக்கை தூக்கி ஆள் தெய்வமே!

------------------------------------------------------------

காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே!

என்னைக்கை தூக்கி ஆள் தெய்வமே!

--------------------------------------------------------------------