08-வண்டினம் முரலும்-*


வண்டினம் முரலும் சோலை,

மயிலினம் ஆலும் சோலை,

கொண்டல் மீது அணவும் சோலை,

குயிலினம் கூவும் சோலை,

அண்டர் கோன் அமரும் சோலை

அணி திருவரங்கம் என்னா

மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை

விலக்கி நாய்க்கு இடுமின் நீரே

கங்கையில் புனிதமாய

காவேரி நடுவுபட்டு

பொங்கு நீர் பரந்து பாயும்

பூம்பொழில் அரங்கம் தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன்

கிடந்ததோர் கிடக்கை கண்டு

எங்ஙனம் மறந்து வாழ்வேன் ?

ஏழையேன் ஏழையேனே.

ஊரிலேன் காணியில்லை

உறவு மற்றொருவர் இல்லை

பாரில் நின் பாதமூலம்

பற்றினேன் பரமமூர்த்தி!

காரொளி வண்ணனே !

கண்ணனே ,கதறுகின்றேன்

ஆருளர் களைகண் அம்மா ?

அரங்கமாநகருளானே

***********************************************

RSR AUG 2016

vandinamuralumsolai.wmv